தமிழ் அகராதிகளில் விளக்கச்சொற்பொருள் – Tamil Akarathikalil Sorporul

450

தமிழ் அகராதியியலை வளர்த்தெடுப்பதற்கான நெறிகளில் ஒன்று அகராதி உருவாக்கம், மற்றொன்று அகராதியியல் ஆய்வு. இந்த ஆய்வு தமிழ் அகராதிகளில் இடம்பெற்றுள்ள விளக்கச்சொற்பொருள் வரையறை நெறிமுறைகளை இனங்கண்டு உரைப்பதாய் அமைந்துள்ளது.

Add to Wishlist
Add to Wishlist

Description

தமிழ் அகராதியியலை வளர்த்தெடுப்பதற்கான நெறிகளில் ஒன்று அகராதி உருவாக்கம், மற்றொன்று அகராதியியல் ஆய்வு. இந்த ஆய்வு தமிழ் அகராதிகளில் இடம்பெற்றுள்ள விளக்கச்சொற்பொருள் வரையறை நெறிமுறைகளை இனங்கண்டு உரைப்பதாய் அமைந்துள்ளது. அகராதியியல் ஆய்வுகளைப் பொருத்தமட்டில் அவை முன்னகராதி மரபுகளை இனங்காணல், எதிர்கால அகராதியியலுக்கான நெறிமுறைகளை வளர்த்தெடுத்தல் என்ற இரண்டு பரிமாணங்களை உடையன.

இவை இரண்டும் ஒரு தாளின் அல்லது ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றவை. இந்த இருவகை ஆய்வுகளும் இருந்தால்தான் அகராதியியல் மேன்மேலும் செழுமைப்படும். முன்அகராதிமரபுகளில் உள்ள பதிவமைப்பு நெறிமுறைகளை ஆராய்வதன் மூலம் அவற்றில் உள்ள நிறைகளையும் குறைகளையும் இனங்காண்பதும் அவற்றை ஆங்கில அகராதிப் பதிவமைப்பு நெறிமுறைகளுடன் ஒப்பிடுவதும் எதிர்காலத் தமிழ் அகராதியியலுக்கான அகராதியியல் நெறிகளை, சொற்பொருள் விளக்க நெறிகளை வகுக்க மட்டுமல்ல அகராதியியல் ஆய்வுகளை மேலெடுத்துச்செல்லவும் பயன்படும். இந்த இலக்கின் தொடர்ச்சியாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காலந்தோறும் வெளிவந்துள்ள அகராதிகளில் பலவித சொற்பொருள் விளக்க நெறிமுறைகள் பின்பற்றப்பட்டிருத்தலைக் கவனத்தில் கொண்டு அவற்றை இனங்கண்டு சுட்டுதல் என்ற அடிப்படையில் அமையும் இந்த ஆய்வு வரலாற்றுநோக்கை அடிப்படையாய்க் கொண்டதாய் அமைந்துள்ளது.

Additional information

Weight0.50 kg