வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப் – செ திவான்

400

Add to Wishlist
Add to Wishlist

Description

தெற்கே தரங்கம்பாடி – நாகப்பட்டினம் தொடங்கி, வடக்கே காஷ்மீர், கிழக்கே வங்காளம், மேற்கே ஆப்கானிஸ்தான் என அகண்டு விரிந்த பேரரசை ஆட்சிசெய்தவர் மாமன்னர் ஔரங்கஜேப்.
ஐம்பது ஆண்டுகள் அரியணையில் வீற்றிருந்த ஔரங்கஜேப்பை ஒரு கொடுங்கோலன் என்று சரித்திரச் சான்றுகள் சொல்லி வருகின்றன. தன் தந்தை ஷாஜகானை சிறைக்குத் தள்ளி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தவர் ஔரங்கஜேப் என்று பாடப்புத்தகங்கள் நமக்குப் பாடம் நடத்தியிருக்கின்றன.
தன் சொந்த அண்ணன், தம்பியை அப்பட்டமாகப் படுகொலை செய்தவர்; தன்னை எதிர்த்த மகனையும், மகளையும் விரட்டிக் கொன்றவர் என்றெல்லாம் வழிவழியாக ஔரங்கஜேப் பற்றி சொல்லிவரப்படும் தகவல்கள் உண்மைதானா? ஔரங்கஜேப் இந்துக்களை இம்சித்தவரா? பெண்களை அவமதித்தவரா? காதலிப்பவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் தந்தவரா? இல்லை.. இல்லை… இல்லவே இல்லை என்று ஆதாரங் களுடன் மறுக்கிறார் நூலாசிரியர் *செ.திவான்*.

Additional information

Weight0.25 kg