சேரி :
சங்க காலத்தில் ‘சேரி’ என்பது ஒரு பொது வழக்கு என்பதைக் கண்டோம். வாழிடம் என்பதே அதன் பொருள். பேரூர், மூதூர்களில் பல தொழில்கள் செய்தவர்கள் தனித்தனியான சேரிகளில் வாழ்ந்தார்கள். பார்ப்பனச் சேரி முதல் பாண்சேரி வரை பலவகையான சேரிகளைக் கண்டோம்.
இடைக்காலத்தில்தான் தீண்டாமை உருவானது. பண்டைத் தமிழ் இலக்கியங்களோ, ஆரம்ப கால கல்வெ ட்டுகளோ தீண்டாமை எப்போது தோன்றியது என்று தெ ளிவாகக் குறிப்பிடவில்லை . திருவள்ளுவர் விலங்குகளை உணவுக்காகக் கொன்று தின்போரை ப் புலையர் (குறள். 329) என்று குறிப்பிடுகிறார். இடை க்காலத்தில் ‘புலைச்சேரி’ எனும் வழக்கு பரவலாகி விட்டது. இம்மக்கள் ஊன் உண்டனர், தோல் பதனிட்டனர் (ராஜம்,வீ.எஸ். 2015).
கி.பி. 5-6ஆம் நூற்றாண்டுகளில் தீண்டத்தகாதார் என நன்கு அறியப்பட்டனர்.நந்தனார் சரித்திரமும் (பெரிய புராணம்), மணிமேகலையும் (மணி. 13: 19) புலையர்களை இழிசனராகக் காட்டுகின்றன. புலைப் பெண்கள் உணவோடு குடிப்பழக்கத்தையும் கொண்டிருந்தனர் என்கிறது சேக்கிழார் பெரிய புராணம் (1055). சங்க காலத்தில் குடிப்பழக்கம் இழிநிலை பெறவில்லை . ஆனால் வள்ளுவம், மணிமேகலை , சிலப்பதிகாரத்தில் இழிவானதாக மாற்றப்பட்டு விட்டது.
பெரிய புராணத்தின்படி பறையர் தோற்கருவி வாசிப்பவராக அறிய முடிகிறது. இவர்கள் ஊரில் பொது அறிவிப்பு செய்பவராக மங்கள விழாக்களிலும் இறுதிச் சடங்குகளிலும் பறையடிப்பவராக இருந்துள்ளனர் (பெரிய புராணம், திருநாளைப் பாவார் புராணம் 1046-1057). ஆசாரக் கோவையும் புலையர், பறையரின் தாழ்ந்த நிலையைப் பேசுகிறது.
பண்டை த் தமிழகத்தில் ‘சேரி’ என்பது வாழிடம் என்பதற்கான ஒரு பொதுப் பெயராகவே இருந்தது. பார்ப்பனர் வாழ்ந்த இடம் ‘பார்ப்பனச்சேரி’ எனவும், பறையர் வாழ்ந்த இடம் ‘பறைச்சேரி’ எனவும் அழைக்கப்பட்டன. இவ்வாறே கம்மாளர்கள், புலை யர்கள் வசித்து வந்த பகுதிகள் கம்மாணச்சே ரி, புலைச்சேரி எனப் பெயர் பெற்றன. கோயில்களில் நடனமாடும் தளிப்பெண்டுகள் வாழ்ந்த இடம் தளிச்சேரி எனப்பட்டது.
10-13 ஆம் நூற்றாண்டுகளில் சாதிப்படி நிலை இறுக்கமடைந்தது. செங்கம் கல்வெட்டு ஒன்று 1278 இல் “அந்தணர் தலையாக அரிப்பன் கடையாக” என ஒரு விரிவான சாதிப்படி நிலையைப் பதிவிடுகிறது (தெ .இ.க. 7:118, கராஷிமா & சுப்பராயலு 2017:16). குடுமியான்மலை க் கல்வெட்டு “அந்தணன் தலையாக பள்ளன் கடையாக” என்று கூறுகிறது (மே லது: 40). கி.பி. 10-13ஆம் நூற்றாண்டுகளில் தான் சாதி ஒரு படிநிலை நிறுவனமாக முழுமை அடைந்ததை க் காண்கிறோம் (மேலது: 14).
வைதிகம் தமிழகத்தில் காலூன்றி வளர்ந்து ஆதிக்கம் செலுத்திய காலத்தில் பௌத்தத்தைக் கைவிடாமல் கடைபிடித்து வந்தோர் மீது தாக்குதலும் ஒடுக்குதலும் நடை பெற்றன அப்போது அவைதிக மக்கள் ஊரின் கிழக்கே தனிப் பகுதியில் விலகி வாழ முற்பட்டனர். தம் பழைய அவைதிக மதக் கோட்பாடுகளைக் கைவிடாமல் பின்பற்றி வாழ முற்பட்டனர். அத்தகைய தனித்த வாழிடங்கள் பின்னாளில் ‘சேரி’ எனும் வழக்குடன் அழைக்கும் முறை தோன்றியது.
ஊரும் சேரியும் இட ரீதியில் விலகியவை . ஆனால் செயல் ரீதியில் ஒன்றிணைபவை . சேரி மக்களின் சேவைத் தொழில்கள் இல்லாமல் ஊரின் அசைவியக்கம் முழுமை பெறுவதில்லை , நிறைவடைவதில்லை . தொண்டூழியச் செயல்களால் இணையும் சாதிகள் இடத்தால் ஒன்றிணைவதில்லை .
ஊர் பொதுவாக மேற்கேயும் சேரி கிழக்காகவும் அமைந்துள்ளன. சுடுகாடு வடக்கே உள்ளது. இது ஒரு பொதுவான அமைப்பு முறையாக உள்ளது. குக்கிராமத்தின் வசிப்பிடங்களைப் பற்றி எஸ். நீலகண்டன் பேசும் போது, “ஆரம்பத்தில்… நிலக்கிழார்கள் மேற்குப் பகுதியிலும் விவசாயத் தொழிலாளர்கள் கிழக்குப் பகுதியிலும் குடியேறியிருக்கிறார்கள். அந்தக் கிழக்குப் பகுதி கிழக்காலூர்’ என்று பெயர் பெற்று விளங்குகிறது” (நீலகண்டன், எஸ். 2008: 94) என்கிறார்.
சேரி கிழக்காக அமைக்கப்பட்டதற்கு ஒரு காரணம் அதன் தாழ்வான நிலையாகும். பொதுவாக நில அமை ப்பில் மேற்கு உயர்ந்ததாகவும், கிழக்குத் தாழ்வாகவும் இருக்கும். இத்தகைய அமைப்பு சமூகத்தின் உயர்வு, தாழ்வுக்குத் தேவைப்படுகிறது. அடித்தளச் சாதியார்மேற்குப்புறம் வாழ்ந்தால் அவர்கள் பயன்படுத்தும் அழுக்கு நீர் கிழக்கு நோக்கிஓடிவரும். அது உயர்குடியினருக்குத் தீட்டு ஆகிவிடும். அதனால்தான்ஊர்ப்புறத்தார் அடித்தள மக்களைக் கிழக்காக அமர்த்தி விட்டனர். அவர்கள்பயன்படுத்தும் நீர் கிழக்காகவே சென்றுவிடும். வாழிட உருவாக்கத்தில்பூகோளக் கூறுகளும் பௌதிக கூறுகளும் பஞ்சபூதக் கூறுகளும் சமூகப்படிநிலையோடு கணக்கிடப்பட்டதை இதன் மூலம் அறிகிறோம்.
கொங்கு வட்டார நாவலான தொட்டிக்கட்டு வீடுநாவலில் “பறைவளவுஊருக்குக் கிழக்கிலும், சக்கிலி வளவு ஊருக்கு மேற்கிலும் இருந்தன.ஒவ்வொன்றிலும் ஏறத்தாழ 20-25 குடிசைகள் இருந்தன.” கொங்கு நாட்டின் 24 உள்நாடுகளிலும் இத்தகைய போக்கினைக் காண முடிந்தது. சக்கிலிக் குடியினர் ஊரின் கிழக்கே வசித்ததைப் பிறகு நவலில் பூமணி காட்டுகிறார்.
தீண்டாமையத் தத்துவ ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் அணுகும் கோபால் குரு, சுந்தர் சருக்கய் (2012) கருத்துகள் இங்கு நோக்கத்தக்கவை .
“தீண்டாமை என்பது அசுத்த நிலை சார்ந்த அசுத்தமான தொழில்கள் சார்ந் வடிவமைக்கப்பட்டது அல்ல. எவ்வாறு ஒரு சந்நியாசி அவரது தீண்டா உணர்வுக்கு ஒரு பொருளை உருவாக்கும் விதமாக அவரே அந்தப் பொருளாகி பார்ப்பனர்களாலும் தீண்டப்பட முடியாதவராகிறாரோ அதுபோலவே , பார்ப்பனர் வகைப்பாடு அதன் தீண்டா உணர்வுக்கு ஒரு பொருளாக ஒரு வகைப்பாட்டை உருவாக்க வேண்டியுள்ளது. அதாவது சந்நியாசி நிலை பார்ப்பனர்களுக்குப் பின்துணை யாகிறது (supplimentation) என்றால் தீண்டப்படாதவர்கள் பார்ப்பனர்களுக்குப் பின்துணை யாகிறார்கள். இதை த்தான், தீண்டப்படாதவர்கள் என்று ஒரு பின்துணை யாக்க சமூகத்தை உருவாக்குவது என்பது பார்ப்பனர்கள் ‘சுத்தமான’ தீண்டப்படாதவர்கள் என்றநிலை யை அடைய முடியாத போதாமையின் விளைவுதான் என்கிறார் சருக்கய். பார்ப்பனர் வகைப்பாடு ‘சுத்தமான தீண்டப்படாதவர்கள்’ என்ற சுமையைச் சுமக்காமல் இருப்பதற்குத் தீண்டப்படாத சமூகம் என்று ஒரு பின்துணையாக்க சமூகத்தை உருவாக்குவது மிக அவசியமான ஒன்றாகிறது. இப்படியாக, தீண்டப்படாத சமூகம் என்று பின்துணையாக்கப்பட்ட ஒரு சமூகம் உருவாக்கப்படாமல் இருந்தால், பார்ப்பனர்கள் என்ற ஒரு சமூகம் உருவாகியிருக்க முடியாது” (குரு & சருக்கய் 2012).
சருக்கய்யின் இந்த நிலைப்பாட்டை தர்மாரண்ய புராணத்தை வீணா தாஸ் வாசிப்பதோடு பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது. இந்தப் புராணத்தில் பார்ப்பனர்கள் தங்களைக் குழுமங்களாக (கிரகஸ்தர்களாக) வரையறுத்துக் கொள்வது தீண்டப்படாதவர்கள் என்ற வகை ப்பாட்டை உருவாக்குவதன் மூலமாகத்தான். ஒரு சந்நியாசியும் கிரகஸ்தனும் எவ்வாறு தலை கீழாக்க உறவைக் கொண்டிருக்கிறார்களோ அதுபோலவே பார்ப்பனர்களும் தீண்டப்படாதவர்களும் தலை கீழாக்க உறவைக்க கொண்டிருக்கிறார்கள். ஒரு பார்ப்பன சந்நியாசி, தீண்டும் ஆற்றல் கொண்டிருந்தும் தீண்டா ஆற்றலுக்கான பொருளாகித் தீண்டும் – தீண்டப்படும் உறவிலிருந்து துண்டித்துக் கொள்வது போலவே , பார்ப்பனர்களும் தீண்டும் ஆற்றல் கொண்டிருந்தும் சந்நியாசியைத் தீண்ட முடியாதவர்களாக இருக்கிறார்கள். ஒரு பார்ப்பனனுக்கு சந்நியாசி தலை கீழாக்கப்பட்ட கானல் நீராக இருக்கிறார். அதுபோலவே
தீண்டப்படாதவர்கள் பார்ப்பனர்களுக்குத் தலை கீழாக்கப்பட்ட கானல் நீராக இருக்கிறார்கள். பார்ப்பனர்கள் இரண்டையும் தீண்டி உறுதிப்படுத்திக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள். ஒரு சந்நியாசி போலவே பார்ப்பனர்களும் (ஒரு சந்நியாசி நிலையை லட்சியமாகக் கொண்டிருப்பதனால்) மற்றவர்களின் தீண்டா உணர்வுக்கான பொருளாக இருந்திருக்க வேண்டும். ஆனால் மற்றவர்கள் தீண்டா உணர்வுக்கான பொருளாக்கப்படுகிறார்கள். இவ்விரண்டு நிலைப்பாடுகளும் (அல்லது தலை கீழாக்கங்களும்) பார்ப்பனர்களிடமிருந்துதான் தோன்றுகின்றன. அதாவது, ‘தீண்டப்படுவதை மறுப்பது’ என்பது ‘தீண்ட மறுப்பது’ என்றாகிறது.
தீண்டப்படாதவர்களை ப் பொறுத்தமட்டில் இவ்விரண்டு நிலை பாடுகளுமே சாத்தியமில்லாமல் இருக்கிறது. இத்தகைய இடப்பெயர்வு தீண்டும் விஷயத்தில் மட்டும்தான் சாத்தியம் என்று சருக்கய் திடமாக முன்வைக்கிறார். ஏனெனில் அது தீண்டுதல்- தீண்டப்படுதல் உணர்வைச் சார்ந்ததாக இருக்கிறது. ஆக,தீண்டாமை என்ற கருத்தாக்கம் தீண்டுதலின் மீமெய்யியலின் விளைவாகவும் தீண்டப்படுவதிலிருந்து தீண்டுவதற்குப் பின்துணையாக்க இடப்பெயர்வின் விளைவாகவும் தோன்றியது என்று முன்வைக்கிறார். மிக முக்கியமானது என்னவென்றால், இது படிநிலைத் தன்மை கொண்டதல்ல என்றும் இது தலை கீழாக்கத் தன்மை கொண்டதாகத்தான் இருக்க முடியும் என்கிறார். இது, கிரகஸ்த பார்ப்பனர்களும் சந்நியாசிப் பார்ப்பனர்களும் தலை கீழாக்க உறவைக் கொண்டிருப்பது போலவே , கிரகஸ்த பார்ப்பனர்களும் தீண்டப்படாதவர்களும் தலை கீழாக்க உறவைக் கொண்டிருக்கிறார்கள்.(நூலிலிருந்து)
தமிழக வரலாற்றில் ஊரும் சேரியும் – பக்தவத்சல பாரதி
விலை: 90/-
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
Buy this book online: https://www.heritager.in/product/tamilaga-varalatril-oorum-serium/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers