தஞ்சாவூர் கோயில் கல்வெட்டுக்கள்

தஞ்சாவூர் கோயில் கல்வெட்டுக்கள் :

முதலாம் இராசராசன் தனது தலைநகரமான தஞ்சாவூரில் ஒரு பெரிய சிவன் கோயிலைக்கட்டி, அதில் தனது பட்டப்பெயரான இராஜராஜேஸ்வரர் என்ற பெயரிலேயே லிங்கத்தைப் பிரதிட்டை செய்தான் இக்கோயில் ஒருஅரசகோயில் என்றே அழைக்கப்பட வேண்டும். இதற்கு முன்பு கட்டப்பட்ட அரசர்களின் பள்ளிப்படைக் கோவில்களைவிட இக்கோவில் வேறுபட்டது.

தனது அரசின் வலிமையைப் பறைசாற்றுவதற்காக இக்கோயிலை அவன் கட்டியுள்ளான் எனலாம்” அதனால், இக்கோயிலின் சுவர். அடித்தளம் ஆகியவற்றில் பல கல்வெட்டுக்களை வெட்டி அவற்றில் அரசனால் கொடுக்கப்பட்ட நில வருவாய், பொன், அணிகலன்கள், மற்றும் அரசகுடும்பப் பெண்கள் கொடுத்த விலைமதிப்பற்ற பொருட்கள் அனைத்தும் பதிவு செய்துள்ளது முற்றிலும் இயல்பானதே. இராசராசனின் நிலக் கொடைகளில் சோழமண்டலத்தில் மட்டும் 40 ஊர்களும் பாண்டிய மண்டலம், கங்க மண்டலம் (கர்நாடகம்) ஈழ மண்டலம் (இலங்கை) ஆகிய பிற மண்டலங்களிலிருந்து 16 ஊர்களும் அடங்கும். இவ்வாறாக கோயிலுக்குக் கொடையளிக்கப்பட்ட தாராளமான சொத்துக்கள் வேளாண் உற்பத்தியோடு பெரும்பகுதி சோழமண்டலத்தில் உள்ள பல உள்ளூர் நிர்வாகக் குழுவுக்கும் (சபை, ஊர்) ஒரே அரசாணையின் மூலம் பகிர்ந்தளிக்கப்பட்டன. இவ்வாறு தாராளமாக வழங்கப்பட்ட கோயில் கொடைகள் அரசின் விரிவாக்கம் கொள்கையோடு நெருங்கிய தொடர்பு கொண்டதாகும்.

அரச குடும்பத்தோடு மட்டுமல்லாமல். இன்னும் பிறரும். பொன்னையும் பிற பொருட்களையும் கொடையளித்துள்ளனர். இத்தகைய கொடையாளிகளில் அரச குடும்பத்தாரைத் தவிர கணிசமான எண்ணிக்கையில் பெரும் அதிகாரிகளும், பலபடை அணி வீரர்களும் அடங்குவர்.

இருபத்து ஐந்து தனிப்பட்ட கொடையாளிகளில் இருபத்து மூன்று பேர் அதிகாரி, சேனாபதி, ஸ்ரீகாரியம், திருமந்திர ஓலை. நடுவிருக்கை, அல்லது பெரும் பிரிவுகளாள் பெருந்தரம், பணி மகன் போன்ற உயர் அதிகாரிகளாவில்இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான அலுவலர்களில் வித்தியாசமாக இரண்டு வியாபாரிகளே இடம் பெறுகின்றனர். அரச ஆணையின் மூலம் கோயில்களிலிருந்து பணம் பெற்றவர்கள் பல பிராமண ஊர்களின் சபையாரும் சோழமண்டலத்திலிருந்து பிற சாதாரண ஊரவருமே.

தஞ்சாவூரில் நகரத்தாரில் நால்வர் மட்டும் பணம் பெற்று அதற்கு மாற்றாக கோயிலுக்கு வாழைப்பழம் வழங்க வேண்டும் எனப் பணிக்கப்பட்டனரே தவிர பெரிய நிறுவன முதலீடாக வழங்கப்படவில்லை. இந்தத் தஞ்சாவூர் கோயில் கல்வெட்டுக்கள் சோழ அரசு இதுவரையிலும் அடிப்படையில் ஒரு வேளாண்மை சார்ந்த அராசாகவே வேளாண் உற்பத்தியைச் சார்ந்து இயங்கியது என்பதையே உணர்த்துகின்றன.
(நூலிலிருந்து)

நகரம் தொல்லியலும் வரலாற்றியலும் – சொ. சாந்தலிங்கம்
விலை:150/-
வெளியீடு: கருத்து=பட்டறை
Buy this book online: https://www.heritager.in/product/nagaram-tholliyalum-varalaatriyalum/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908

Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/

#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers