இன்று கட்டட வேலை துவங்கும் பொழுது பொறியாளர்கள் நூல் பிடித்து, நான்கு திசையிலும் இடத்தை அளந்து, கட்டட பாகங்களையும், தூண்களையும் குறிக்கும் வழக்கம் (Foundation Marking) போலவே, சங்க காலத்திலும் இருந்தது பற்றி, பத்துப்பாட்டான, நெடுநல்வாடை குறிப்பிடுகிறது.
இன்றைய பொறியாளர்களைப் போலவே அன்றும் “நூலறி புலவர்கள் (படித்தவர்கள்)” எனப்படும் கட்டிடக்கலை பற்றிய நூல்களைப் படித்த வல்லுநர்கள், அளவு நூல் பிடித்துப் பார்த்து, திசைகளைத் தெரிந்து திசைக்குரிய கடவுள்களைக் கருத்தில் கொண்டு அரசனுக்குரிய அவன் விருப்படி அமைத்து அரண்மனைகளைக் கட்டினர் என்பதை.
“நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு,
தேஎம் கொண்டு, தெய்வம் நோக்கி,
பெரும்பெயர் மன்னர்க்கு ஒப்ப மனைவகுத்து (76 – 78)”
இதன் மூலம் அக்காலத்திலும் கட்டிடக்கலைக்குத் தேவையான வழிமுறைகளையும், நூல்களை உருவாக்கி அதனைப் படித்துப் பல கட்டடங்களை உருவாக்கி தமிழர் உயர்ந்த நிலையில் இருந்ததை காண முடிகிறது.
இக்கருத்தினையே கீழடி (2nd photo) போன்ற பல தொல்லியல் இடங்களில் கட்டடக்கலைக்கு சான்றாக பல தொல்லியல் கட்டட எச்சங்கள் கிடைப்பது மூலம் உறுதியாகிறது.
இதனாலேயே நெடுநல்வாடை கட்டடக்கலை நூல் எனச் சிறப்பிக்கப்படுகிறது.
பி.கு: கட்டடம் என்பது கட்டுமானத்தை குறிக்கும், கட்டிடம் என்பது, அது கட்டப்படும் இடத்தை மனையை குறிக்கும்.
தளி பாரம்பரியக் கலை மற்றும் கட்டடக்கலை கூடம்.
Our Social media Handles:
Website: www.heritager.in
Facebook: https://www.facebook.com/profile.php?id=100010547474983
Instagram: https://www.instagram.com/heritager.in
Youtube: https://youtube.com/c/ThaliMedia
Twitter: https://twitter.com/heritagerIn
Telegram: t.me/teamheritager