கார்த்திகை மாதத்தின் மழை மேகங்கள் !
காஞ்சியைத் தாலாட்டிக் கொண்டிருந்தன ! கூதலும், கொந்தலும்,,,அடுத்தது குளிர்காலம் என்பதற்கு கட்டியம் கூறிக் கொண்டிருந்தன,,
பகல் வேளையிலும்,,,,, குழந்தையைப் போல உடல் வளைத்து தூங்கிக் கொண்டிருந்த மாமன்னர் இராஜேந்திரரை எழுப்பலாமா ? வேண்டாமா ? எனச் சிந்தித்தபடியே , நீட்டிய கால் நீட்டியபடியே,,, கட்டிலில் அமர்ந்திருக்கிறேன் !
கால் வலிக்கிறதுதான்,,!
கால் வலிக்கிறதேயென,,காலை மடக்கினால்,,,,,?
மாமன்னர் இராஜேந்திரரின் , தூக்கம் கலையுமே ?
எப்போது வருவார் ?
கொஞ்சி விளையாடுவார் ? குதூகலிக்கலாம்,,கும்மாளமிடலாம்,,,வீணாகிறதே,,,? இந்த மழைக்காலம்,,,என்றெல்லாம்,,நினைத்திருந்த பொழுதில்,,,,
காற்றைப் போல,,,,எங்கிருந்தோ வந்தார் !
எப்படி வந்தார் ?
மாமன்னர் வருமுன் வருகிற, தூதுவன் எவரும் வரவில்லை,,,,
அதிகாலையில்,,, பறவைகள் எழுந்து சோம்பல் முறிக்கும் நேரத்தில்,,,, சத்தமின்றி வந்தவர்,,, பின் பக்கமிருந்து, மெல்ல,,, அணைத்தார்,,
பதறினேன்,,,,கை விலக்கினேன்,,,
சட்டென்று புரிந்தது,,,
என்னவரின் கரம்,,,,!
இந்த வீரமாதேவியை,,, அவரன்றி,,வேறு எவர் தொட முடியும்,,,,?
சிலிர்த்தேன்,,,மெல்லச் சிறகடிக்கவாரம்பித்தேன்,,,
முகம் திருப்பினார்,,, !
இதழ் கடித்தார் !
வலித்தது,,, என் முகம் சுருங்குவதைக் கண்டதும்,,,இதழ் பிரித்தார் !
வீரம்மா ,,களைப்பாக இருக்கிறது,,,
நான் கொஞ்சம் உறங்கட்டுமா ?
ம்ம்ம்ம்,,,
எதிர்பார்ப்புகள்,,பொய்க்கும் போது,,,வார்த்தைகளும்,,,உறைந்து போகின்றன,,,
ஆனாலும்,,,
இந்த மனிதன்,,,எங்கோ,,ஓடிக்கொண்டிருக்கிறார் ?
எதற்கோ ஓடிக் கொண்டிருக்கிறார் ? அவராகச்சொன்னால் தவிர,,,,
அவர் உள்ளத்துள் இருப்பதனை எவரும் அறிய முடியாத மனிதனாகிக் கொண்டிருக்கிறார்…
அவரை நோகடிக்க வேண்டாம்,,,
கொஞ்சம்,,பாலாவது அருந்தி விட்டு படுங்களேன்,,,,!
பால் தானே ? அருந்துகிறேனே,,,,,, !
என்றவரின் விழி போன இடம்,,பார்க்க,,, வெட்கம் பிடுங்கித் தின்கிறது !
இப்படி,இப்படித்தான்,,,
அவர் என்னையும்,,வீழ்த்திவிடுகிறார் !
நானும்,,,மயங்கி விடுகிறேன்,,,,! திருடன்,,இல்லையில்லை,,திருடர்,,,,
இல்லையில்லை,,,கள்வன்,,,
ஆமாம்,,,இந்த நான் என்னும் வீரமாதேவியின் உள்ளம் கவர் கள்வன் !
தேவாரத்தில் திருஞானசம்பந்த சுவாமிகள் பாடிய பதிகத்தில் எல்லாம்,,வல்ல,, சிவப்பரம்பொருளைப் பாடியிருப்பாரே,,
உள்ளம் கவர் கள்வனென்று,,,
என் உள்ளம் கவர் கள்வன் தான்,,,,
மாமன்னருக்காக,,,,
என் மன்னவருக்காக,,,படுக்கை விரித்து,, கண்ஜாடையிலேயே,,பணிப்பெண்ணை சூடான பால் கொண்டு வரச்சொல்லி,,, அருந்த வைத்து,,,,
ஒரு வாய் வைக்குமுன்னே,,
வீரம்மா,,,,,
பால் இனிக்கவில்லை,,,வீரம்மா,,,,!
பாலில்,, இனிப்பே,, ,,இல்லை,,, பார்,,, ? என்று ருசி பார்ப்பது போல,,,
என்னையும் குடிக்க வைத்து,,,
தலையணைகள் வைத்து,,,,,
இதோ,,படுத்து உறங்குங்கள்,,என்றால்,,,,?
தலையணை எதற்கு,,,,?
உன் மடியில் அல்லவா ? உறங்கப் போகிறேன்,,,,, என்று சிரிக்கிறார்…
சேடிப்பெண்கள் சிரித்து விட்டு அகலுகிறார்கள்,,,,,!
எவரெவர் கண்படப் போகிறதோ ?
இல்லையென்று மறுக்கவா ? முடியும்,,,
பெண்ணின் மனம் அதற்குத்தானே ? ஏங்கிக் கொண்டிருக்கிறது,,,
காலை பகலாகிறது !
பகலும், கடந்து போய்க்கொண்டிருக்கிறது,,,!
பசிக்கிறது,,,, எனக்கு,,மட்டுமா ?
அவருக்கும்,,தானே ? பசிக்கும்,,,?
இப்படியுமா ? ஒரு மனிதன் தூங்குவார் ?
அப்படியெனில்,,எத்தனைக் களைப்பில் தூங்குகிறார்,,,,,, !
ஆமாம்,,அவரெப்படி வந்தார் ?
மனசு கேள்விகளுடன்,,அலைபாய்கிறது,,,,?
வேறு எவளையேனும்,,பார்க்க வந்து,,,,,?
போகிற வழியில்,,, காஞ்சியிலும்,,வந்து தலை காட்டி விட்டுச்செல்கிறாரோ ?
சே,,சே,,,அப்படியிருக்காது,,,,?
ஏன்,,,இருக்காது,,,?
மனக்குரங்கு ஆடுகிறது,,,,?
பெண்புத்தி,,பின் புத்தி தானோ ?
தானோ ? என்ன,,,தானோ ?,,
ஆமென்று, ஆமாமென்று தலையாட்டி விட,,,வேண்டும் தான்,,
போலத்தான் இருகிறது,,,,,,?
காவல் வீரர்கள்,,கண்டிருப்பார்களே ?
உரக்க,,,சோழம் வாழ்க,,,! என்று கூவி இருப்பார்களே ?
காவல் வீரர்களைக் கண்டதும்,,சைகை காட்டி அடக்கியிருப்பார் ?
பெண்டுகளின் தூக்கம் கெடக்கூடதென,,சைகைக் காட்டி இருப்பார் ?
சோழ சைன்யமே , ஆட்சிக்கு வந்து இருபத்தியிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னும் இப்பொழுதும், மாமன்னரைக் கண்டால்,,, மரியாதையுடன்,,, எழுந்து நிற்கிறது,,,,
எப்பொழுதும்,,,வால் போல,,ஒட்டிக் கொண்டு வருகின்ற கிருக்ஷ்ணன் ராமன் பிரம்மராயரின் மகன் அருண்மொழிப்பட்டன்,,,காஞ்சிக்கு மட்டும் வருவதேயில்லை,,,, ?
கேட்டால்,,,
இரண்டு பேரும்,,சிரிக்கிறார்கள்,,,,,
இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்,,,, ஐப்பசி சதய நாளன்று தஞ்சைக்கு சென்ற போது,,,,
மாமன்னரின் காலில் என்னவர் விழுந்து ஆசி வழங்கும்,,போது,,,தொட்டுத் தூக்கி நிமிர்த்தி உச்சி முகர்ந்தவர் கண்களில் கண்ணீர் !
அரண்மனைப் பெண்டுகள்,,எல்லோரும்,,,கலங்கிப் போனோம்,,,
அவருக்குப் பின்னால்,,,நான் ஆசி வாங்கக் குனியுமுன்,,,இரண்டொரு பேர்கள் விழுந்து ஆசி வாங்கிட,,,,,,,, நான்,, தவித்துப் போய்விட்டேன்,,,,,,,,
வீரமாதேவியாரே !
இங்கே வாருங்கள் !..கண்ணில் என்ன கலக்கம்,,, மாமன்னர் இராஜராஜர் எல்லாம்,,அறிந்தவர்தான்,,, !
சட்டென்று,,
என்னையும்,,உச்சி முகர்ந்தார் !
கவனமாக இரு !
கவனித்திரு !
எப்போதும் போலிரு !
மூன்றே வார்த்தைகள் தான்,,,,
மூவுலகாளும்,,சோழச் சக்கரவர்த்தி ஸ்ரீ இராஜராஜ சோழ தேவர் அவர்கள்,,என் காதில் சொன்னார்,,,
போதும்ம்,,,,இது,,போதும்,,,,
மூன்று யுகங்களுக்குப் போதும்,,,,,
ஆனாலும்,,,மனக்குரங்கு,,அவ்வப்போது,,,கிளை விட்டு கிளை தாவிக் கொண்டிருக்கிறதே ?,,என்ன,,செய்ய,,, ஏதும் செய்வதற்கில்லை,,,, எல்லாம் அவன் சித்தம்,,
ஆமாம்,,,
சில சமயங்களில்,,அவரின் சொல்லும் இதுதான்,,, !
அவர் உறங்கட்டும்,,,
அதுவரை பசி பொறுப்போம்,,,, !
தூரத்தே ஏதோ சப்தம்,,,,,,
யாரென்று கேட்டால்,,,,?
அவனுக்குத் தெரியும் ! ! என்கிற குரல் மட்டும் காதில் சன்னமாக விழுந்தது !
யாரது ? கேட்கலாமா ?
வேண்டாம்,,மன்னரின் உறக்கம் கெடும்,,,
சேடிப் பெண்கள்,,,அவ்வப்போது வந்து,,, தலைகாட்டி,,உணவு தயாராகி விட்டதம்மா ,, சூடு ஆறிக் கொண்டிருக்கிறதம்மா,,,என்று சைகையிலேயே பேசி விட்டுப் போகிறார்கள்,,,,
அவர்களை விரலசைவில் புறந்தள்ளுகிறேன்,,, !
இன்று அவர் எழட்டும்,,பேச வேண்டியது மனமெல்லாம் நிரம்பியிருக்கிறது !
ஆனால்,,அவரைப் பார்த்ததும், அத்தனையும் ,மறந்து விடுகிறது ?
தவிக்கிறது ! தாகமெடுக்கிறது !
தண்ணீர் குடிக்க வேண்டும்,,போலிருக்கிறது,,,,
சேடிப்பெண்களை அழைக்கலாமா ? முத்தழகி ! குரல் கொடுக்கலாமா ?
மெல்ல,,,முத்,,,,,, இதழ் பிரிக்கையில்,,,,
என் இதழ்களை தன் இதழ்களால் மூடுகிறார்,,,, !
தாகமாக இருக்கிறதா ? கிசுகிசுக்கிறார் .. சிரித்தபடி,,,மெல்ல,,,விலகுகிறார் ! எழுகிறார்….
பசிக்கிறதடி,,,
எனக்கும்,,,
வா,,,சாப்பிடலாம்,,,,
வேண்டாம்,,இந்த விளையாட்டு,,,,
எழுந்திருங்கள்,,, போதும்,,போதும்,,எல்லாம்,,,இன்றிரவு,,,, சாப்பிடலாம்,,,
நான் வயிற்றுப் பசியைச் சொன்னேனடி,,,
நான் முறைத்தேன்,,,
கால் வலிக்கிறதா ? வீரம்மா ! மெல்ல கால் பற்றி அழுத்துகிறார்,,
இதமாக நீவி விடுகிறார்,,, !
அடப்பாவி,,,பாவி,,,
இப்படியெல்லாம்,,செய்து,,,செய்து தான்,,,உன் மனச்சிறைக்குள், என்னைக் கட்டி வைத்திருக்கிறாய்,,,,? வைத்திருக்கிறீர்,,,,,? நெகிழ்கிறேன்,,,
இருந்தால்,,,,,,இப்படியே,,இருந்தால்,,,,
விளக்கேற்றும்,,நேரம்,,,,
செம்பியன் மாதேவியார் சொல்வார்கள்,,,,,
பெண்களின் இலக்கணம்,,,என்ன தெரியுமா ? என்று,,,,
என்ன தான் விளையாடினாலும்,,,மன்னவர் இராஜேந்திரரும்,,அப்படியே,,,,தான்,,,
அதீத நம்பிக்கை,,,
முதலில்,,அவரை சாப்பிட வைப்போம்,,, !
நீராடி விட்டு வந்தார்,,
இலை போட்டு,,,,இட்டகரிசியும், இனிப்பு பணியாரமும்,,இலையில் வைத்தால்,,,,
கொஞ்சம்,,பழஞ்சோறு கிடைக்குமா ? என்கிறார்,,,
முறைத்தேன்,,,,
முகம் கவிழ்ந்தார்,,,,!
மெல்ல,,உண்ண ஆரம்பிக்கையில்,,,,,
சேடிப் பெண்களின் கண்களுக்குத் தப்பி,,,
என் வாய்க்குள்ளும்,,இனிப்பு பணியாரம்,,,,,!
எப்படி,,, ?
கள்வன் ! உள்ளங்கவர் கள்வன் !
உண்டு கொண்டிருக்கும் போதே,,,,
அரண்மனை அதிகாரிச்சி,,,, அறை வாயிலில் வந்து நிற்க,,,,,
சொல்,,வந்திருப்பது,,யார் ?
பரகேசரி வர்மரான,,,, சொல்ல ஆரம்பிக்க,,,,
வேண்டாம்,,அந்தப்புரத்திலும், மெய்க்கீர்த்தி,, வேண்டாம்,,,, வந்தவர் யார் ?
பிசங்கன் சீராளன் வெகுநேரமாய்க் காத்திருக்கிறார் !
பிசங்கன்,,சீராளன்,,, எங்கோ,,,,? பொறி தட்டுகிறது,,, வரச்சொல் அவரை,,,, அவருடன்,,வேறு எவரேனும்,,வந்திருக்கிறார்களா ? என்று கேட்டபடி,,
இலை விட்டெழுகிறார்,,,
ஏன்,,,? அவசரப்படுகிறீர்கள்,,,?
அவசரமில்லை,,வீரம்மா,,,,,, ! நீ,, ஆகாரமெடுத்துக்கொள் !
நான் பிசங்கருடன்,,பேசிவிட்டு வருகிறேன்,,,,
யார் ? பிசங்கர் ?
இராஜேச்சுவரத்து உவச்சர் இருபதின்மரில் ஒருவர் ! ஈசான சிவபண்டிதரின் தொண்டரடிப்பொடி,,, என்றபடியே,,, நடக்கிறார்,,,,
நான்,,,சாப்பிட ஆரம்பிக்கிறேன்,,, வயிற்றுக்குள் இறங்கவில்லை,,,,
மெல்ல,,மென்று விழுங்கி எழுகிறேன்,,,,
தென்றலாய்ச் சென்றவர்,,புயலாய்த்,,,திரும்பினார்,,,
வீரம்மா,,,,புறப்படு,,இப்போதே,,,புறப்படு,,,,
எங்கே ? எனக்கேட்டால்,,,,கோபம்,,வரும்,,,,!
பல்லக்கிலா ? தேரிலா ?
அம்பாரியில்,,,,, சிரிக்கிறார்,,,
உன் குதிரையில்,,என்கிறார்,,,,!
உங்களின் குதிரை,,,,,
இன்னும்,,சிலநாட்கள்,,இளைப்பாறட்டும்,,, புறப்படு சீக்கிரம்,,,
மனம் குதிக்கிறது,,,
அவ்வப்போது,,இப்படியும்,,வாய்க்கும்,,,
அதிகாரிச்சி ,,,, குதிரையைப் பிடித்தபடி,வருகிறாள்,,,,!
குதிரையின் மீது,,, அவர் தாவி ஏறுவாரெனப்பார்த்தால்,,,,,, ?
ஓரமாய் ஒதுங்கி நிற்கிறார்,,,
நீ குதிரையோட்டு,,,,
நான் உன் பின்னாலென,,சைகை காட்டுகிறார்,,,
குதிரையின் மீதேறுகிறேன்,,,
சேடிப்பெண்,,, ஆகாரம்,,, என்றபடி,,மெல்ல,,,ஒரு துணியில் சுற்றிய ஓலைப்பொதியலைத் திணிக்கிறாள்,,
அவரே வாங்கிக் கொள்கிறார்,,,
வேகமாகச் செல்,,,,! வீரம்மா,,,,,
எங்கே ?
அதோ,,,! ஒரு குதிரை செல்கிறதே,,,, ? அவரை பின் தொடர்ந்து செல்,,,,
பாலாற்றினைக் கடந்து சென்றது குதிரை,,,,
மனம்,,பாலாற்றிலே,,விளையாடலாமா ? மன்னரே ! என்று கேட்டுக் கொண்டிருந்தது,,,,!
எல்லாம்,, திரும்ப வரும் ,போது விளையாடலாம்,,,,, வீரம்மா,,,,,
நானொன்றும்,விளையாடலாமா என்று கேட்கவில்லையே,,,,?
நீ கேட்கவில்லை,,வீரம்மா,,உன் மனம் கேட்டது,,,! உன் மனம் நானறிவேன்,,,,!
நாம்,,எங்கு செல்கிறோம்,,,,
கூழம்பந்தலுக்கு,,,,
அங்கெதற்கு,,,?
நம் குல குருவைப் பார்க்க,,,, !
அவர் இங்கேதானிருக்கிறாரா ?
காஞ்சிக்கு, இன்று மதியம், என்னைக் காண வந்திருந்திருக்கிறார் !
நானுறங்குகிறேன்,,இப்போது எழுப்ப முடியாதென யாரோ சொல்லியிருக்கிறார்கள்…
அவனுக்காக,,,நான்,,அலைந்து கொண்டிருக்கிறேன்,,,?
அவனை நான் பார்க்க முடியாதா,,,,? என்று கோபித்துக் கொண்டு ,,,,,,சென்று விட்டார் !
ஐயோ,,,,
நான் சொல்லவில்லை,,,,
நீ சொல்லவில்லை,,வீரம்மா,,,,
உன் பணிப்பெண்கள் சொல்லி இருப்பார்கள்,,,, !
நான்,,,திகைத்தேன்,,,தவறு புரிந்து விட்டோமா ?
என் மனம் போலவே,,,,குதிரையும், மெதுவாக,,,, செல்லத் தொடங்க,,,
வீரம்மா,,,,என்ன யோசனை,,,
கலங்காதே,,,,? விரைந்து செல்,,, பொழுது சாய்வதற்கு முன்,,
கூழம்பந்தல் செல்ல வேண்டும்,,,
குதிரையை விரட்டினேன்,,,, !
குதிரை திணறிற்று,,,,!
நான் கொஞ்சம் குண்டாக இருக்கிறேனோ ?
உடலைக் குறைக்க வேண்டும்,,,?
அவருக்காக இல்லையென்றாலும்,,,
இந்தக் குதிரைக்காவது,,உடலைக் குறைக்க வேண்டுமா ? வீரம்மா,,,
ஹாஹாஹா,,,,
அதெப்படி,,,,?
நான் மனதினுள் நினைப்பதை,,இவர் சொல்கிறார்,,,,,,?இதனால் தான்,,உள்ளம் கவர் கள்வனோ ?
சே,,,வெட்கம்,,பிடுங்கித் தின்கிறது,,,,
அதோ,,,,,
கூழம்பந்தல் கிராமம்,,,,,
இதென்ன,,,கோவில் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்,,,?
கற்கோவில் !
அதுவும்,,,, மிகவும், அழகானதாக,,,
இறங்குகிறோம்,,,!
வேலையாட்கள்,,,,மிக,,வேகமாக பணி செய்து கொண்டிருக்கிறார்கள் !
எங்கே அவர் !
என்னவர் தேடுகிறார் ?
கட்டப்பட்டுக் கொண்டிருக்கும்,,கோவிலின் உள்ளிருந்து,,,, சிவத்துதிகள் கேட்டுக் கொண்டிருக்கிறது,,,,
எங்களுக்கு முன் வந்தவர் ! கிணற்றடிக்கு இராஜேந்திரரை கைபிடித்து அழைத்துச் செல்கிறார் !
கை கால் கழுவி,,முகம் கழுவிக் கொள்கிறார்,,,!
ஓ ! இவர்தான் உவச்சர் பிசங்கன் சீராளரோ ?
இந்த வயதிலும்,,முகத்தில்,,, என்னவொரு அமைதி,,,,
நானும்,,கிணற்றடிக்குச் செல்ல,,, தண்ணீர் இறைத்து ஊற்றுகிறார்,,,, !
முகம் கழுவி,, துடைத்து,,,விட்டு,,,அவர்களின் பின் செல்ல,,,,
வடக்கு வாயில் வழியாக,,,, கட்டப்பட்டுக் கொண்டிருக்கிற ஆலயத்தினுள் மரச் சாரங்களின் இடை வழியாக நுழைய,,,
லிங்க,,ஆவுடையை ஆறு பேர்கள் நீண்ட மரக்கழிகளால் நகர்த்த, அடர் தாடியும், கட்டிய சடை முடியுமாக ஒருவர் பார்த்துக் க்கொண்டிருக்க,,, நகர்த்தப்பட்டு கொண்டிருந்தது !
வா ! மதுராந்தகா !
சரியான நேரத்திற்குத்தான் வந்திருக்கிறாய் !
உறங்கி விழித்து விட்டாயா ?
குருவே,,,, என்றபடி,,,காலில் விழுகிறார் எம் மன்னவர் !
அவரே விழுந்த பின்,,நானெப்படி,,,?
நானும்,,அவரின் பாதம் பற்றுகிறேன்,,,!
அதிகாலையில் உன் காலில்,,,
பொன்னந்தி மாலையில்,,,, என் காலில்,,,, அப்படித்தானே ? வீரம்மா ! குலகுரு கேட்க,,தலை தாழ்த்தி நிற்கிறேன்,,,!
கோபமாக இருப்பாரென, பயத்தோடு வந்தால்,,,,?
குலகுரு ஈசான சிவபண்டிதர் !,,சிரிக்கிறார் !
வீரம்மா,,,, நெற்றியில் திலகமிட்டுக் கொள்,,முதலில்,,,,,
நீறில்லா நெற்றி பாழ்,,,, என்றபடி,,,கற்றை நீறெடுத்து,,மன்னவருக்கு இட,,,,,
சிவனே ! எஞ்சிவனே ! என்னவர் உருக,,,
என் நெற்றியில் நீறிடுகிறார் !
பிசங்கன் சீராளன் குங்குமச் செப்பினை நீட்ட,,, நெற்றி யில் திலகமிட,,,
புருவ மத்தியில் திலகமிடு வீரம்மா,,,,! உன்னவனுக்காக,,,!
குலகுரு சொல்,,,, !
தட்ட முடியாது,,,
வீரம்மா,,,,!
இது கடைசி கட்ட பணி !
உன்னவர் இந்த கங்கை கொண்ட சோழீச்சரத்தின் லிங்கத்தை நகர்த்தப் போகிறார் !
கிழக்குத் திருவாயிலைக்காட்டி,,,,,,
அங்கிருந்து,,இருபத்திரண்டு அடி தூரம்,,,கடந்து வந்து விட்டது !
இன்னும் போக வேண்டும்,,,
அதோ,,,அந்த கருவறை வரை,,
அதுவரை,,,, பதிகம் பாடு,,
இந்த கடந்து போகும் தூரம்,,, வரை வாசனைத் திரவியங்கள் தெளி,,,, சந்தனம்,,,பூசு !
குங்குமம் இடு,,!
தென்னாடுடைய சிவன் !
அவருக்கான இடத்தில்,,,அமர்ந்து கொள்ளட்டும்,,!
சீராளா,,, கழியொன்று மன்னரிடம்,,கொடு,,,!
பிசங்கன் சீராளன் கழியினை நீட்ட,,,,
கழிபற்றியபடி,,, மாமன்னர் ஆவுடையை தொட,,,, ஆவுடை நகர்ந்தது !
அதன் பின் பாணம்,,,,! இரு மூங்கில்களில் கயிறு கொண்டு தொட்டிலாகக் கட்டி,,
முன்புறத்தில்,,,
ஈசான சிவபண்டிதரும், பிசங்கன் சீராளனும்,,தூக்க,,,
பின்புறம்,,அவரும்,,நானும்,,தூக்க வேண்டுமென்கிற,,,ஈசான சிவபண்டிதர் ஆணையிட,,,,,, சிற்பிகள் விலகி ,,,ஆனால்,,, எல்லாவித ஆயத்தங்களுடன்,,சுற்றிலும், வர,,,
பாணமும்,,கருவறைக்குள் வந்து சேர்ந்தது !
ஆலயத்தின் தலைமைச்சிற்பியும்,,மற்றவர்களும்,,,,, ஆவுடையை நிலைநிறுத்தி,,
பாணம் நிறுத்த மருந்துக் கலவை தயாரிக்க,,,,
அகிலும், குங்கிலியமும்,,, வாசம்,,வீச,,,,, தீப்பந்தங்கள் வெளிச்சம் தந்து கொண்டிருந்த போதினில்,,,,,,
மருந்துக் கலவைச் சாந்து ஆவுடையில் கொட்டப்பட்டு,,,, பாணம்,,, தூக்கி நிறுத்தப்பட,,,,
தென்னாடுடைய சிவனே !
எந்நாட்டவர்க்கும்,,இறைவா ! கோக்ஷம் அதிர்ந்தது,,, அந்தப் பொழுதில்,,,,
இனி,,,ஆலயத்தினுள்,,,
தீப்பந்தங்கள்,,வேண்டாம்,, கலவை குளிரட்டும்,,, நாம் வெளிச்செல்லுவோம்,,,
ஆலயத்தின் வெளியில் வர,,,
அனைவருக்கும்,,, அரிசியும், துவரையும், மிளகும், சுரைக்காயுமிட்ட,,, கூட்டாஞ்சோறு வந்தது,,,
பரந்த தேக்கிலைகளில்,,,,, சுடச்சுட,,,சோற்று மணம் வீசுகையில்,,,,,
வீரம்மா,,,,
உன்னவர் சுமந்து வந்த துணிப்பொதியிலுள்ள இனிப்பு பணியாரங்களை,, எல்லோருக்கும்,,கொடுக்கலாமே,,,, ? வீரம்மா,,,,,
நான் கொண்டு வந்தது ?
குரு எப்படி ? அறிந்தார் ? அதனால் தான் அவர் குலகுருவோ ?
கைச் சோற்றினை கீழே வைத்து விட்டு,,,ஓடினேன் ! குதிரையின் சேணத்திலிருந்த பொதியினைப் பிரித்து,,, குலகுருவின் முன் நீட்டினேன் !
ஒன்றினை எடுத்தார் ! இரு பங்காக்கினார் ! ஒன்றை என் கையில் வைத்தார் !
வீரம்மா ! இதிலொன்றும் ஆச்சரியமில்லை,,,
நீ ஓட்டி வந்த குதிரையின் சேணத்தினை நோக்கி,,,குதிரை,,அடிக்கடி முகம் திருப்பிக் கொண்டிருந்தது,,,,?
இனிப்பிற்குத்தான்,,, குதிரை,,அடிக்கடி முகம் திருப்புமென,,அசுவ சாத்திரம் சொல்கிறது !
நல்ல இனிப்பு,,,நெய்யிலேயே,,,வேக வைத்திருக்கிறாய் !
வாசம்,,பிடித்தார் !
ராஜேந்திரா,,,, உனக்கு,,உன்னவள் தருவாள் !
என் பங்கு இதோ,, !
குருவின் கையிலிருந்த இனிப்பு பணியாரத்தின் பாதியைப் பிட்டு என்னவரின் கையில் கொடுத்தார் !
நானோ,,,? என் கையிலிருந்ததை முழுவதுமாகக் கொடுத்தேன்,,,!
விழி நீர் மறைக்க,,,, என்னவர் மெல்லத் தின்றார் !
என் விழிகளிலும், கண்ணீர் !
மெல்ல என் கரம் பற்றினார்,,,
இப்போது என் வாயிலும் இனிப்பு பணியாரத்தின் கால் பகுதி !
எப்போது,,என் இதழ் பிரித்தார் ? அவரை நோக்கினேன்,,?
அப்போது அவர் வாய் திறந்தார்,,! அதில்,,, இரு இனிப்பு பணியாரத் துண்டுகள்,,!
கள்வன் !
என் உள்ளங்கவர் கள்வன் !
வீரம்மா,,,!
கொஞ்சம்,,அனுசரித்துக் கொள் !
இன்றிரவு நீங்களிருவரும்,,இங்கு தான் தங்கப் போகிறீர்கள் !
நாளை மறுநாள்,,, ஆடிப் பதினெட்டாம் பெருக்கு,,காலையில் இந்த ஆலயத்துக்கு கங்கை நீர் கொண்டு நீர் தெளிக்கப்படும்,,,,
ஆதலின்,,,,,
இன்றும்,,நாளையும், நாளை மறுநாளும்,,,, இங்கேதான்,,, இருக்கப் போகிறீர்கள் !
குலகுரு தான் சொன்னார் !
நான் திகைத்தேன்,,,?
இதுவென்ன ? திடீரெனச் சொல்கிறீர்கள்,,,, !
இன்றிரவு,,என்பது கூடச் சரி,, நேரங் கடந்து விட்டது,,, என்பதால்,,,, !
ஆனால்,,,
நாளையும்,, என்றால்,,,,?
மன்னருக்கு ஆயிரம் பணிகள் இருக்கும்,,,,!
மாற்றுத் துணி கூட எடுத்து வரவில்லை,,,, ?
மேலும், அவர் சம்மதிக்க வேண்டுமே ?
இராஜேந்திரனைப் பற்றி நீ கவலைப்படாதே,,,,,?
இங்கு நடப்பவை அனைத்துமே,,, அவனுக்கானது !
ஆம் ! அவருக்காகவே,,, நடக்கிறது,,, ! என்பது,,அவனுக்குத் தெரியும்,,,,
ஆதலின்,,
இடையில்,,
நீ புகுந்து குட்டையைக் குழப்பி விடாதே ?
இனி !
அவன்,,,, ! அலைகடல் தாண்டி பலகலமோட்டி எல்லாம்,,செல்ல மாட்டான்,,,, ! இனி வாழ்வின் பெரும் பகுதி,,உன்னுடனேயே,,, நடக்கும்,,,!
ஆஹா,,,
நம்முடனேயா,,,,,, ? ஆஹா,,, என்றொரு பக்கம்,,, மனத்துள் சந்தோக்ஷம் கொப்பளித்தாலும்,,, ஏதாவது,,,பூதாகரமான பிரச்சினையோ ?
குலகுரு பயமுறுத்துகிறாரோ ?
இராஜேந்திரரின் முகம் பார்த்தால்,,,,,
சலனமின்றி அமர்ந்திருக்கிறார் ! நிஜமாகவே,,,,,,, காரணம் அறிவாரோ ?
அவர் அருகில்,,,,, செல்கிறேன்,,,! அமரப் போகிறேன்,,,
மெல்ல,,என் கரம் பற்றி அழுத்துகிறார் !
மெல்ல,,,எழுகிறார் !
இருநாட்கள் தானே ? வீரம்மா,,,, இங்கேயே இருப்போம்,,, வீரம்மா !
இப்போது சில நாட்களாய்,,
என் மனதிற்குள் சில குழப்பங்கள் வீரம்மா,,,, !
வா ! மெல்ல நடப்போம்,,,
குலகுருவின் அனுமதி,,,,, ?
கொடுத்துவிட்டார் ! அங்கே தூரத்தே பார் !
நமக்காக அவர் ! தியானத்திலிருக்கிறார் !
குதிரை !
வேண்டாம்,,, வீரம்மா,,,, வா,,
செய்யாற்றின் கரை வரை நடந்து வருவோம்,,,! வா !
இப்பொழுதெல்லாம்,,,,விடை தெரியாத கேள்விகளுடன்,,தான்,,,,
நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன்,,, ? வீரம்மா,,,,,,
என்னவென்று எனக்குப் புரியவில்லை,,,,?
எந்தை இருக்கும்,,போது,,,,
எத்தனை தூரம்,,,பிராமணர்களை வெறுத்து ஒதுக்கினேனோ ? அதே அளவு,,, எந்தை ஸ்ரீராஜாராஜ சோழர் இல்லாத இந்த நாட்களில்,,,,அவருடைய இறுதிக்காலத்தினை எண்ணியபடியே,,,,? பிராமணர்களுடன்,,இணைந்தே இப்பொழுதெல்லாம்,,, பயணிக்கிறேன்,,,
என்னவோ ?
என்னைச் சுற்றிலும்,,,, நடக்கிறது ! நடந்து கொண்டிருக்கிறது ?,,, வீரம்மா,,,,!
இங்கே கூழமந்தலில்,,, ஈசான பண்டிதர் கட்டுவது போலவே,,,
எசாலத்திலும், சர்வசிவ பண்டிதர் கட்டிக் கொண்டிருக்கிறார் !
நாம் தான்,,,என்னவோயென்று , நமக்குள் பயந்து கொண்டிருந்தாலும்,,, நம்மைச் சுற்றிலும்,,,நல்லவைகளும்,,,நடந்து கொண்டிருக்கின்றன ,,! வீரம்மா !
விடியும்,,வேளைக்கு,,,,வெள்ளி முளைத்து விட்டது,,,, !
நாம் தனித்து நடந்து கொண்டிருக்கிறோம்,,, அரசே !
உங்கள் கையில் வாள் கூட இல்லை,,, அரசே !
அதற்கும்,,சேர்த்து,தான்,,உன் வாய் இருக்கிறதே,,,?
பகைவர்களை விரட்டி விடாதா ? அந்த நேரத்திலும், சிரிக்கிறார்,,,,
இல்லை வீரம்மா ! நமக்கு இரு புறத்திலும்,,,,
நமக்கு முன்னும், பின்னும்,,,, நெடுங்கை வேலனும்,,அவனின் நண்பர்களும்,,,நம்மைச் சுற்றிலும் வந்து கொண்டிருக்கிறார்கள் !
செய்யாற்றிலே நீராடிவிட்டு,,,
இன்று காலை கங்கை கொண்ட சோழீச்வரரை நீராட்ட,,,,
ஆளுக்கொரு நீர்க்குடம் சுமந்து வருவோம்,,,வா !
நீர்க்குடங்கள்,,,, ?
பிசங்கன் சீராளன்,,,
நமக்காக,,,செய்யாற்றின் கரையில் காத்திருப்பான்,,,நட,,வீரம்மா,,,,
இனி,,
இப்படித்தான்,,
நம்,,பயணம்,,வீரம்மா,,,,! வா,,,மெல்ல,,நட,,,,
பாலாற்றிலே,,,
நீராடிக் களிக்கலாமென நினைத்திருந்த வீரம்மா ! என்கிற,,
வீரமாதேவியாகிய நான் !
அப்படியே !
ஆகட்டும்,,எம்மானே !
என்னவரின் கரம் பற்றி,, நடக்கிறேன்,,,!
கள்வன் ! என் உள்ளம் கவர் கள்வன் ,,,!
திருமதி.ரூத்.பி
Excellent & Great work