பிற மொழிச் சொற்கள் எந்த மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தனவாக இருந்தாலும் தேவயற்ற செலவையும் தொல்லையையும் தவிர்த்தல், ஒப்பிட்டுப்பார்ப்பதை எளிதாக்குதல் என்னும் இரு காரணங்களுக்காகவே அவை ரோமன் எழுத்துக்களில் இந்நூலில் தரப்பட்டுள்ளன.
உயிர் நெடில்கள் எப்போதும் இவ்வாறு தரப்பட்டுள்ளன: ; உயிரெழுத்தின் மேல் எந்தக் குறியீடும் இல்லை என்றால் அது குறிலாக ஒலிக்கப்பட வேண்டும் என்பது கருத்து.எ மற்றும் ஒ சமஸ்கிருதத்தில் எப்போதுமே நெடில் என்பதால் சமஸ்கிருதம் குறித்த நூல்களில் சமஸ்கிருதச் சொற்களின் எழுத்துப்பெயர்ப்பு குறியீடு இல்லாமலே உள்ளன. திராவிட மொழிகளில் குறில் எ.குறில் ஒ என்பதோடு நெடில் ஏ, நெடில் ஓ இருப்பதால் மேல் குறியீடு பெறாதவற்றைக் குறிலாகவே உச்சரிக்க வேண்டும் 28
(ஐரோப்பியக்) கண்டத்து முறையில் உயிரெழுத்துக்கள் ஒலிக்கப்படும். ei, பின்னர் விளக்கப்படுகிறது, சமஸ்கிருதத்து ஐ என்பதை ஒத்தது.
நாவை வளைத்து ஒலிக்கப்படும் மெய்யெழுத்துக்கள் எழுத்தின் அடியில் ஒரு புள்ளி இட்டுக் காட்டப்பட்டுள்ளன ! /ட, d/ட்,, n/ண்; திராவிட மொழிகளுக்குச் சிறப்பாக உள்ள ழ என்பதும் ள என்பதும் அடியில் புள்ளியிட்டே காட்டப்பட்டன !, ! : மூக்கொலிகள் n அல்லது m. 1 என்பதன்மேல் ஒரு கோட்டுடன் காட்டப்பட்டுள்ளது: ர. வல்லின மெய்களின் மெல்லின ஒலிகள் பொதுவாக ng என எழுதப்படுவது ர்/ங் எனக் காட்டப்படுகிறது; மேல்-அண்ண மூக்கொலி, nj அல்லது ny என எழுதப்படுவது ர் /ஞ் எனக் காட்டப்படுகிறது; வல்லின றகரம் தடித்த r எனக் காட்டப்படுகிறது.
தமிழ் தகர ஒலி, மலயாளத்தில் அதற்கு இணையான த அல்லது d/த. ஒரு சொல்லின் நடுவில் அல்லது இரு உயிரொலிகளின் இடையில், ஆங்கில th, than என்பதில் உள்ள ஒலிபோல உச்சரிக்கப்படுகிறது. தெலுகில் j/ஜ மற்றும் ch/ச் சில உயிரொலிகள் தொடர்ந்துவரும்போது dz அல்லது ts என ஒலிக்கப்படுகிறது; இவை உச்சரிப்பின் வேறுபாடுகளே, ஒரு மெய் மற்றொருமெய்க்குப் பதிலாக வருவதில்லை; எனவே இந்த எழுத்து எந்த மாற்றமும். இன்றியே இங்கு எழுதப்பட்டுள்ளது.
தமிழின் மூன்றாவது மெய்யெழுத்தை, சமஸ்கிருதத்திற்கு இணையாக எவ்வாறு குறிப்பது என்பதைத் தீர்மானிப்பது எனக்குக் கடினமாக இருந்தது. கடினமாக இருப்பதற்குக் காரணம் அது உச்சரிக்கப்படும் சூழலில் உள்ளது. அது இரட்டித்து வருகையில் உச்சரிக்கப்படுவது தனியாக வரும்போது உச்சரிக்கப்படுவதிலிருந்து பெரிதும் வேறுபடுகிறது. அதனுடைய தனிதியை உச்சரிப்பு சமஸ்கிருதத்தின் $ என்பதைப் பெரிதும் ஒத்துள்ளது, இரட்டித்து வரும்போது அது சமஸ்கிருதத்தின் chch என்பதை ஒத்துள்ளது. இந்த முறையிலேயே இந்த எழுத்தைக் குறிப்பது சரியாகவே இருக்கும் என நான் நினைத்தேன். தமிழின் பிற மெய்யெழுத்துக்களையும் நான் இதே முறையில், தனிநிலை – இரட்டிப்பு அடிப்படையில் காட்டியிருக்கிறேன். எடுத்துக்காட்டு: d/த், இது இரட்டிக்கையில், உச்சரிப்புப்படி tt/த்த் எனவும், d/ட். இரட்டிக்கையில் ti/ட்ட் எனவும் காட்டியிருக்கிறேன்.
திராவிட மொழிகள் அனைத்திலும் ‘எ’கரம் அது ‘ய’கரமாக இருப்பது போலவும், ‘ஒ’கரம் அது ‘வொ’கரமாக இருப்பது போலவும் உச்சரிக்கப்படும் போக்கு உள்ளது. பேச்சுத் தமிழில் இவ்வாறான உச்சரிப்பை அடிக்கடி கேட்கலாம் என்றாலும் எழுத்தில் உச்சரிப்பின்படி எழுதுவது மிகக்குறைவு; ஆனால், இக்காலத்துக் கன்னடத்திலும் தெலுகுவிலும் ‘எ’கரத்தின் முன் ‘ய’கரமும், ‘ஒ’கரத்தின் முன் ‘வ’கரமும் உச்சரிக்கப்படுவது மட்டுமல்லாமல் எழுதப்படவும் காண்கிறோம். கன்னட, துளு இலக்கண நூல்களில் சொற்களை ரோமன் எழுத்துக்களில் எழுதும்போது ‘எ’விற்கு ‘யெ’வும் ‘ஒ’விற்கு ‘வொ’வும் தந்து, அந்தந்த மொழிகளில் ‘எ’, ‘ஒ’ என எழுதுவது வழக்கமாகியுள்ளது. எடுத்துக்காட்டு: கன்னடம் ‘வொந்து’ ஒன்று, ‘யெரடு’ இரண்டு – ‘ஒந்து’, ‘எரடு’ என எழுதுவதற்குப் பதிலாக இந்த ஒலிப்பு மாற்றம் ஒரு பிறழ்வே அல்லாமல் பண்டைய மொழியின் வேறுபாடு அன்று; இந்த பிறழ்முறை, மற்ற மொழிகளின் சொற்களோடு ஒப்பிடுவதற்குத் தடையாக இருப்பதால், இந்த நூலில் இவ்வகைச் சொற்கள் ‘ய’கர”வ’கர சேர்ப்பு இல்லாமலேயே எழுதப்பட்டுள்ளன. இந்த முறையில் பேசிப் பழகியவர்கள் இவ்வாறான சொற்கள் வரும்போது அவர்கள் விருப்பப்படி உச்சரித்துக்கொள்ள விட்டுவிடலாம். இதே உச்சரிப்பு முறை மராட்டியிலும் கொங்கணியிலும் உள்ளது.
டாக்டர் போப் தனது Outlines of the Grammar of the Tulu Language நூலில், ஆங்கிலத்திலும் இந்த வழக்கம் இருந்ததற்கான தடயம் இருப்பதாகச் சுட்டிக்காட்டுகிறார். எடுத்துக்காட்டு:’ewe’ என்பது ‘yew’எனவும், ‘one’என்பது ‘won’ எனவும் உச்சரிக்கப் பட்டன. இது செல்டிக் மொழியின் பாதிப்பு எனக் கருதுகிறார். திராவிட மொழிகளைப் பொறுத்த மட்டில், இந்த உச்சரிப்பு முறை மிகப் பழமையானது எனக் கருதுவது தேவை அற்றது. ஏனெனில் திராவிடச் சொற்களின் எழுத்துக்கூட்டு (spelling) எப்போதுமே ஒலிப்பு முறையிலேயே (phonetic) உள்ளது. மொழிகள் முதன்முதலில் எழுத்து முறைக்கு உட்படுத்தப்படும்போது இந்த உச்சரிப்பு அந்த காலத்திலேயே வழக்கில் இருந்திருக்குமானால், ‘ய’கரமும் ‘வ’கரமும் எழுதப்பட்டிருக்க வேண்டும். உச்சரிக்கப்பட்டிருக்கவும் வேண்டும். தூய தமிழ் பேசப்படுவதாகக் கருதப்படும் மதுரையை ஒட்டியுள்ள பகுதியில் வாழும் மக்கள் சொல்லின் முதலில் வரும் ‘எ’கரத்தையும், ‘ஒ’கரத்தையும் தெளிவாக உச்சரிப்பதாகப் பெருமிதம் கொள்கின்றனர்.
திராவிட அல்லது தென்னிந்தியக் குடும்ப மொழிகளின் ஒப்பிலக்கணம் – பா.ரா.சுப்பிரமணியன்
விலை: 1200
Buy this book online: https://www.heritager.in/product/drivida-allathu-thennindiya-kudumba-mozhikalin-oppilakkanam/
To order on WhatsApp: wa.me/919786068908
Call: 097860 68908
Buy online: www.heritager.in
Social Media Handles:
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு
#books #tamilbookstore #Heritager wwww.heritager.in
Buy History and Heritage Related book online:
Buy Tamil Inscription Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/inscriptions/
Buy Tamil Literature Books: https://www.heritager.in/product-category/books/tamil/literature/
Buy Tamil Archaeological Books: https://www.heritager.in/product-category/books/tamil/archaeology/
Buy Tamil Temple Architecture and Art Books: https://www.heritager.in/product-category/books/tamil/art/
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/