1777 ஆம் ஆண்டு ஆங்கிலேய கால ஆவணத்திலிருந்தத் தகவலின் அடிப்படையாகக் கொண்டு காவிரி கல்லணையின் அமைப்பினைக் குறிக்க டெல்லி ஐஐடி ஆய்வாளர்கள் வரைந்த வரைபடமாகும்.
சோழ நாட்டில் பாயும் காவிரி கொள்ளிடம் இரண்டு ஆறுலாக பிரியும் இடத்தில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் இந்த கல்லணை அமைந்துள்ளது. கல்லணையின் மிக முக்கிய பணியாக கருதப்படுவது சோழ நாட்டில் இருந்த சுமார் 6,00,000 ஏக்கர் (இன்று 11 லட்சம்) நிலத்திற்கு தேவையான பாசன வசதியை ஏற்படுத்தவும், மேலும் காவிரியில் சராசரி நீர்வரத்து இருக்கும் பொழுது அது கொள்ளிடத்தில் கலந்துவிடாமல் தடுக்கவும், வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது தண்ணீரை வெளியேற்றும் ஒரு தடுப்பு கல் அணையாக இருந்துள்ளது.
ஆய்வாளர்கள் சித்ரா கிரிஷ்ணன் & ஸ்ரீனிவாசன் வீரவள்ளி (IIT Delhi) அவர்களின் கூற்றுப்படி கல்லணையானது ஒரே நேர்கோட்டில் அமையாமல் இரண்டு அல்லது மூன்று வளைவுகளை கொண்ட, அலைகள் போன்ற அமைப்பில் இருந்த அணையாக இருந்துள்ளது. அணையின் மட்டமானது சமமாக இல்லாமல் சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்துள்ளது. 1800களில் ஆங்கில அரசானதுப் பகுதியை கையகப்படுத்திவுடன் பல மாற்றங்களை இந்த கல்லணையில் மேற்கொண்டுள்ளது. ஆங்கிலேயர்களின் ஆவணத்தின்படி கல்லணையின் கற்கள் அடுக்கி கட்டப்பட்ட கட்டுமானமானது 20மீட்டர் அகலமும், 4.5 மீட்டர் உயரமும், 330 மீட்டர் நீளமும் கொண்டது.
வரலாற்று தகவலின்படி கி பி. இரண்டாம் நூற்றாண்டில் கரிகாலச் சோழனால் கட்டப்பட்ட இந்த கல்லணையானது .காவிரி கொள்ளிடம் பிரியும் இடத்தில் காவிரி ஒட்டி அமைந்த ஒரு தடுப்பு கல் அணை என்பது ஆங்கிலேய கால ஆய்வாளர்களின் தகவல் ஆகும்.
1800 களில் கரிகாலன் கட்டியக் கல்லணையை வைத்தே இந்தியாவில் ஆங்கிலேயர்கள் பாசனத்திற்கு பயன்படும் அணையை முதன்முதலில் ஆய்வுசெய்து இந்திய பாசன முறையை சோதனைமுறையில் கற்றறிந்தனர். பின்பு சில மாற்றங்களை உருவாக்கி இந்தியாவில் பல அணைகளை உருவாக்கினர் என்பது ஆய்வாளர் கிருஷ்ணன் அவர்களின் தகவல் ஆகும்.
தகவல்: தளி இராஜசேகர் (www.heritager.in)
வரைபடம்: சித்ரா கிரிஷ்ணன் & ஸ்ரீனிவாசன் வீரவள்ளி
பி.கு: வரைபடத்தில் உள்ள பரிமாணங்கள் சரியானது அல்ல.