சத்ரிய சிகாமணியும், சூளாமணியும்
ஸ்ரீவிஜய (இந்தோனேசிய – மலேய தீபகற்பம்) மன்னன் சூடாமணிவர்மனின் நினைவாக, தமிழகத்தில் நாகப்பட்டினம் சூடாமணி பௌத்த விகாரம் எழுப்பப்பட்டது. இதனை செப்பேட்டின் வடமொழி மற்றும் தமிழ் பகுதி சூளாமணி பன்ம விகாரத்து (சூடாமணி வர்ம) என புத்த விகாரையை என குறிப்பிடுகிறது. பல்லவர் காலத்திலேயே வர்மர் என்பது பருமர் என தமிழ் படுத்தப்படும், வர்மர் எனும் சொல் பன்ம என செப்பேட்டில் குறிக்கபடுகிறது.
பத்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட, சூளாமணி எனும் சமண காப்பியம், அவனி சூளாமணி வர்மன் எனும் பாண்டிய மன்னன் நினைவாக எழுதப்பட்டதாக கருதப்படுகிறது. பல்லவர் காலத்தில் எழுப்பட்ட இப்புத்தவிகாரை, சுனாமி பேரலையால் அழிந்தது. பின்பு சோழர் காலத்தில் ஸ்ரீவிஜயத்தை ஆண்ட சைலேந்திர வம்ச அரசன் ஸ்ரீமாற விஜயதுங்க வர்மானால் மீண்டும் புதிப்பிக்கப்பட்டு, அதற்கு ராஜராஜன் காலத்தில் ஆனைமங்கலம் எனும் கிராமம் நிவந்தம் வழங்கப்பட்டதாகவும், அதனை ராஜேந்திர கால லெய்டன் பெரிய செப்பேடுகள் குறிப்பிடுகிறது.
மாலிக்கப்பூரின் படையெடுப்பில் நாகை சூடாமணி விகாரம் அழிக்கப்பட்டதாக அமீர் குசூரூ கூறினாலும், அதன் பின்பு மாலுமிகளுக்கு வழிகாட்டியாக எஞ்சி இருந்த நான்கு பக்க மூன்றடுக்கு விகாரத்து கோபுரத்தை ஆங்கிலேயர்கள் 1867 ஆகஸ்ட் 28-ம் தேதி இடித்துத்தள்ளதாக பிரிட்டிஷ் ஆவணங்கள் கூறுகின்றன.
சரி விசயத்துக்கு வருவோம், ஸ்ரீ விசய மன்னனின் “சூடாமணி”வர்மன் என்ற பெயரும், அதற்காக ஆனைமங்கலம் செப்பேட்டை வழங்கிய, ராஜராஜரின் பட்டப்பெயரான சத்திர்ய “சிகாமணி”யும் என்பதும் கிட்டத்தட்ட ஒரே பொருளை தருபவை. சிகாமணி, சூடாமணி = மகுடத்தின் முடிமணி, தலையில் அணியும் விலை உயர்ந்த மணி, மாணிக்கம் என்பது பொருள். இருவரும் ஒருவரல்ல தெளிக.
Listen on Amazon Music: https://bit.ly/HeritagerAM
Listen on on Spotify: https://bit.ly/HeritagerSportify
Listen on on Anchor FM: https://bit.ly/HeritagerAnchor
Listen on on Google Podcast: https://bit.ly/3Gn4I3w
https://pca.st/020s7dbt Digital
எழுத்துரு : ராஜசேகர்
#Heritager
தமிழக மரபாளர்கள் குழு https://www.facebook.com/groups/TNHeritager