ஒருவேளை சோழர்காலத்தில் அரசு பணியில் இட ஒதுக்கீடு இருந்திருந்தால் அது எத்தனை சதவீதம் இருந்திருக்கும். ?
சோழர்காலத்தில் எவ்வளவு பிராமணர்கள் அரசு அதிகாரிகளாக இருந்துள்ளனர் என்பது பல்வேறு காலகட்டத்தில் வரும் பிராமண அதிகாரிகளின் பெயர்கள், அதன் எண்ணிக்கை என்பதை கல்வெட்டுகளில் வாயிலாக அறியலாம். கல்வெட்டுகளில் வரும் பெயர்களை புள்ளியியல் அடிப்படையில் வகைபடுத்தி, பிராமணர்கள் எத்தனை சதவீதம் உள்ளனர், என்பதை கூறுயுள்ளனர்.
இராஜராஜசோழன் சோழர்காலத்தில் மங்களராயன், மூவேந்த வேளாண், பல்லவரையன், விழுப்பரையன், பிரம்ம மாராயன் என்று அதிகாரிகளுக்கு பட்டப் பெயர்கள் உண்டு. இதுவரை கிடைத்த கல்வெட்டுகளின்படி, மொத்த அதிகாரிகளில் “பிரம்ம மாராயன்” எனும் பிராமணர்கள் ஏழு விழுக்காட்டினார் (7%) சோழ அரசில் அதிகாரிகளாக இருந்துள்ளனனர். மீதம் 93% வெள்ளாளர் மற்றும் மற்ற பிரிவினர் இருந்துள்ளனர்.
பிராமண அதிகாரிகளின் கல்வெட்டு தகவலின் படி பெரும்பாலானோர் ஆந்திராவினை பூர்வீகமாகக் கொண்டவர்கள். மேலும் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாத்தா, மகன், பேரன், என மூன்று தலைமுறையினரும் வெவ்வேறு சோழ அரசர்களுக்கு அதிகாரிகளாக இருந்துள்ளனர். கல்வெட்டுகளில் வரும் பெயர்களின் அடிப்படையில், பிற்கால சோழர்களின் ஆரம்பகட்ட காலங்களில் பிராமணர்களே பெரும்பாலும் படை அதிகாரிகளாகவும், நடுவிருக்கை எனும் நீதி துறை அதிகாரிகளாக இருந்துள்ளனர்.
பின்னாளில் தான் வேளாண் குடிகள் படைத் தலைவர்கள் பற்றிய கல்வெட்டுகள் அதிகப்படியான கிடைப்பதால், பிற்காலத்தில் தான் வேளாண் குடி படைத் தலைவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது, என்கின்றனர் ஆய்வாளர்கள்.
Sources: South India under the Cholas Heritager.in