பிரம தேசத்தில் ஒருநாள் – இராஜேந்திரச் சோழன் சிறுகதைப் போட்டி #11

ராஜேந்திரரே !,,,,, நாளை,,,,

நாளைக்கு என்ன ? வீரம்மா

ஆடித் திருவாதிரை,,,

ஆடாத திருவாதிரையும் உண்டோ ? தேவீ

மன்னரே ! போதும்,,கெக்கலிப்பு,,

சொல் வீரம்மா

நாளை , என்னவரின் பிறந்த நாள் !

ஆஹா ! ஆஹா !,,,எம் வாழ்த்துக்களையும் செப்புக தேவி,,
எம் சார்பாக பட்டாடைகள்,பொன்னாபரணங்கள் கொடுத்து விட்டாய்தானே ?

நிவந்தங்கள் ஏதேனும் கொடுக்க வேண்டுமா ? 

காஞ்சியிலிருந்து திருவாலங்காடு செப்பேடு வெட்டிய ஆராவமுதனை வரச்சொல்லிவிடலாமா ? 

மன்னரே !,,,

ஏன் முறைக்கிறாய் ? தேவீ !
வீசாதேயடீ,கோபத்தை உமிழும், உன் நெருப்பு விழிகளை மூடி நில்,,,!
நான் கங்க தேசப் படையெடுப்பிற்குச் செல்லும் முன் பார்த்த விழிகள் இவை,,
இப்போது எதற்கடீ,,,?வீரம்மா,,,

அடியே என்று அழைக்கிறவர் யாரோ ? 
அவர்தானே ? என்னவர் ! என்னவராக இருக்க முடியும்,,?

காஞ்சி இருக்க கலிங்கம் கலைப்பதில் வல்லவரான,,நீங்கள்,,, அதுவும்,,என் ஆரா அமுதான நீங்கள் காஞ்சியில் இருந்து ஆராவமுதனை வரவழைக்கப் போகிறீர்களா ?

ஒன்றும் புரியவில்லை ? தேவி !

உமக்கொன்றும் புரியாதுதான்,,,புரியாதது போல நடிப்பதில் புலி !
அதுவும் சோழப் புலி,,,,,,,

நானா ? நடிக்கிறேனா ? என்ன சொல்கிறாய் ? தேவி,,,

என்னவர் ! சோழ நாட்டின் மன்னவர் ! உங்களுக்குத்தான் பிறந்த நாள் !

ம்ம்,,அப்படியா ?

ஆம்,,மன்னரே ! ஏன் ? மெளனமாகி விட்டீர்கள் ?

பெற்றவள் இருந்திருந்தால்,,இதெல்லாம் நினைவில் இருந்திருக்கும்,,?

உற்றவள் நானிருக்கிறேன்,,மன்னரே !

கற்றவள் அல்லவா ?

மற்றவள் போல நினைந்து விட்டீரோ ? எம்மையும்,,,
வாருங்கள் கொண்டாடுவோம்,,, உம் பிறந்த நாளை,,,

இந்த வயதிலா ?

கொண்டாட்டத்திற்கும், வயதிற்கும், என்ன ,,இது,? பிள்ளை,,,விளையாட்டு,,,?

ம்,,ம்ம்,,விளையாடலாம் என்கிறாய் ?

அதுவும் பிள்ளை விளையாட்டு விளையாடலாம் என்கிறாய் ?

வயதாகி விட்டாலும், வக்கணைப் பேச்சுக்கொன்றும் குறைவில்லை,,,,வாருங்கள் மன்னரே !
நம் கோவிலை வலம் வருவோம்,,,,

வேண்டாமடீ வீரமாதேவி,,,
உன் நெஞ்சணையை,
என் மஞ்சனையாக்கு !
இந்த நாளெல்லாம்,,, மட்டுமல்ல,,,,நாளையும்,,,அங்கேயே குடியிருக்கிறேன்,,,

நீர் எப்பொழுதும்,,அங்கேதான் குடியிருக்கிறீர்கள் ! மன்னரே
இப்போது நம் கங்கை கொண்ட சோழீஸ்வரம் சென்று வரலாம்,,,வாருங்கள் !

வேண்டாமடீ,,வேண்டாம்,,,
இப்போது வேண்டாம்,,, அதுவும்,,நாளை சோழநாட்டின் எல்லா ஆலயங்களிலும்,,, என் பிறந்தநாளைக் கொண்டாடுகிறேன் என்று சொல்லி ஜனக்கூட்டம் அலை மோதும்,,, எங்கே பிறந்தநாளைக் கொண்டாடவில்லையென்றால் நான் கோவித்துக் கொள்வேனோ ? என்கிற நினைப்பு  அவர்களுக்கு,,,

  இதோ,,,மன்னரின் பிறந்தநாளைக் கொண்டாடி விட்டேன்,,நான்,,நான் , மட்டும் தான் மாமன்னர் இராஜேந்திரருக்கு அனுக்கமானவன் என்று ஊராருக்கு காட்டிக் கொள்வதற்காக ,, ஊராரும் வியப்பதற்காக,,, ?விடு ,,,, விடு வீரம்மா,,,
மேலும்,,,,அங்கே,,
நம் பிள்ளைகள் எல்லாம் இருப்பார்கள்,,,,,

நாம் அங்கே சென்றால் அவர்களுக்கும், இடைஞ்சல்,,,,

நாமெப்படி ? அவர்களுக்கு இடைஞ்சலாக இருப்போம் ? என்கிறீர்கள் ?

இல்லை வீரம்மா,,,நான் சொல்வது உனக்குப் புரியவில்லை,,, நம்மைக் கவனிக்க வேண்டும்,,,? நம்மைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக,,,நம்மைச் சுற்றிலும்,,, வீரசோழன் அனுக்கன் படை உலா வந்து கொண்டிருக்கும்,,,  எவனாவது ஒரு பிள்ளை,,, நாமென்ன பேசுகிறோமென ஒட்டுக் கேட்டுக் கொண்டிருப்பான்,,,?  அது தேவைதானா ? 


ஆதலின்,,


ஆதலின்,,,காதல் செய்வோமா ?

ஆமாமடீ,,, காதல் செய்வோம்,,,

பிள்ளைகளுக்குப் பயந்த பிள்ளை,,,காதல் செய்யப் போகிறாராம்,,,,, ?

அதுவும் இந்த  வயதில்,,,, 

ம்ம்ம்,,ஆசை யாரை விட்டது,,,? உம்மை விட,,, வாரும்,,, வாரும்,,,
என் கரங்கள் நீண்டிருக்கின்றன ! 

வருக ! வருக ! வாருங்கள் மன்னவா !! உலகெலாம் கொண்ட மன்னரே ! 

என்னையும் கொள்ளுங்கள்,,,வருக மதுராந்தக இராஜேந்திரரே !

ஆ,,மதுராந்தக ராஜேந்திரன்,,,, ! அழகு,,அழகு,,,அழகடீ,,, என் அழகியே,,,

அது சரி,, எந்தை ஸ்ரீ ராஜராஜசோழதேவர் அவர்கள்,,, யாருக்காக,,,, தன் அரச உரிமையை பதினொரு ஆண்டுகள் விட்டுக்கொடுத்தாரோ ? அவருடைய பெயரையே,,, ஆம்,,தன் சிறிய தந்தையான மதுராந்தகரின் பெயரையே,,,எனக்குச் சூட்டினார் . அந்த பாசத்தை நீ அறிவாயா ? தேவி,,,

ஹீம்,,,ம்ம்ம்,,,,அறிவேன்,,அறிவேன்,,, எல்லோருக்கும்,,நல்லவனாகவே இருக்க வேண்டுமென நினைத்த  பெருந்தகை !  நம் குலத்தை வாழ்விக்க வந்த நம்பிக்கை ஒளிக்கீற்று,,,, அவரின் பிள்ளைதானே,,,! நீங்களும்,,,

உனக்கும் பிள்ளைதானேயடீ,,,இந்த பிள்ளை
பருக,பருக,,,வந்தேனடீ வீரமாதேவி ! கண்மணீ என்னைக் கொள்,,,

————————

ஏய் !
யாரங்கே ?
அங்கென்ன பார்வை,,,?
போ,,போ,,,,  விலகிச் செல்,,,,,எவரையோ,,வீரர்கள் வெருட்டும் குரல் கேட்கிறது,,,,,

யாரது,,,,, ?

வலங்கைப் படையின் வீரரே,,, ! நான் பிரம்மதேசம் என்னும் இவ்வூரின் தனநாயகன்,,

என் பெயர்  மதுராந்தகன் பரகேசரி மூவேந்த வேளாளன் ,,,,

ஆ,,,,மாமன்னரின் மைத்துனர் !  வணக்கம் அய்யனே !  

இடையூறுக்கு மன்னிக்கவும்,,,,,,,வீரரே !

பிரம்மதேசத்து ஏரிக் கரையோராமாக உள்ள புளியந்தோப்பில் ஆள் நடமாட்டம் அதிகமிருக்கிறதென ஒற்று வந்தது,,,  ஆதலின்,,, நான் இங்கு வர நேர்ந்தது,,, 

தவறொன்றுமில்லை,,,  மூவேந்தரே

மாமன்னர் இராஜேந்திரசோழரும், அவரின் மனைவியுமான வீரமாதேவி இராஜேந்திரச்சோழரும் தங்கள் இறுதிக் காலத்தைக் கழிப்பதற்காக  இதோ,, இந்த  பிரம்ம தேசத்துக்கு வந்திருக்கின்றனர்,, இதுவுமொரு வகையில் வனவாசம் தான்,,,,

அறிவேன்,,வீரரே !  எதற்கும்,, சற்று கவனமாக இருங்கள்,,,,  அவரின் பாதுகாப்பு முக்கியம்,, என்பதனை மறந்து விடாதீர்கள்,,,
மூவேந்த வேளாளரே !

நீர் ! மன்னருக்கு மைத்துனர் ஆவதற்கு முன்பே,,,நான் அவரின் , இராஜேந்திர தெரிஞ்ச கைக்கோளப் படையிலிருந்தவன்,,, 

இப்பொழுது,,மட்டுமல்ல,,எப்பொழுதும்,,, நான் அவரின் ,,,மெய்க்காப்பாளன் !

அதோ,,

நாற்திசைகளிலும்,,, என்னைப் போல வீரர்களுண்டு ! 

அவர்கள் அறியாமல்,,அவர்களுக்கு காவலாக இருக்கவேண்டும்,,, ! ஆம்,,, அப்படி இல்லாமல்,,,நீங்கள் இப்படி காவலிருக்கிறீர்களெனத் தெரிந்தால்,,,? அவர்களின் தனிமை கெடும்,,,

ஹாஹாஹ்ஹா,,, 

என்ன சிரிக்கிறீர் ?

அவரறியாமலா ? அதுவும்,,,ராஜேந்திரர் அறியாமலா ?,,,  அது நடவாத விடயம்,,,  

தஞ்சையிலும்,,பழையாறையிலும்,, ஈழத்திலும், கடாரத்திலும், கங்கபாடியிலும்,,, ஹொட்டூரிலும்,,,நடக்கிற சம்பவங்களை காஞ்சியில் இருந்தே கண்காணித்த  மன்னருக்கு,,, 

அவரின் அருகே நூறடி  தொலைவில்,,, இருந்து நாங்கள் கண்காணிப்பது தெரியாமலா ? இருக்கும்,, அவர் அறிவார்,,,! ஆனால் அவரின் முதுமையை அவர் ,,,,,ரசனையுடன் வாழ வேண்டும் என நினைக்கிறார்,,, 

ஆதலின் தெரியாது போல நடிக்கிறார்,,,நடந்து கொள்கிறார்…

பிரமதேசத்து மக்களுடன் மக்களாக வாழ்கிற,,,, அவருக்குத் தெரியும்,,, இவர்கள் தம் மக்களென்று,,,

ஆனால்,,,

பிரம தேசத்து , மக்களுக்கு இவர் தான் சோழநாட்டின் மன்னர் என்று தெரியவில்லை,,,,

 தெரிந்து அறிய நியாயமுமில்லை,,,,,

ஆம்,,,

இரு நாட்களுக்கு முன்புதான் ஈழத்திலிருந்து,,தஞ்சை வந்து,,பெருவுடையாரை வணங்கி விட்டு,,கங்கை கொண்ட சோழபுரம்  அரண்மனைக்குச் சென்றால்,,, கொலுமண்டபத்தில்,,,மன்னராக ,,,,ராசாதிராசர் இருக்கிறார்,,,

திகைத்துப் போனேன்,,,,?

எங்கே தந்தை என்றேன்,,,   தொண்டை நாட்டில் இருக்கிறார் ,,காஞ்சி மாளிகையில் இருப்பாரென அங்கும்,,சென்றேன்,,, காணவில்லை,,, பல கேள்விக்குறிகளுடன் தான்,,, பிரம தேசம் வந்தேன்,,,, இங்கே அவர்கள் ! மனம் நிம்மதி ஆயிற்று,,

இப்பொழுது,,, மன்னர் அவர்களைச் சந்திக்கப் போகிறீர்களா ? மூவேந்தரே,,,,

இல்லை,,,வேண்டாம்,,,,

உங்கள் சகோதரியாரைக் கூட சந்திக்கும் நினைப்பில்லையா ?

ஹா,,, மாமன்னரின் தனிமை கெடக்கூடாதென என்னும் எண்ணம்,,,

இராஜேந்திரரை அறிந்த தெரிஞ்ச கைக்கோளப் படையின் வீரருக்கே,,, இருக்கையில்,,,, மைத்துனன் எனக்கும் இருக்காதா ?  அவர்களின் தனிமையினை நான் கலைக்க விரும்பவில்லை,,,  வருகிறேன்,,வந்த வழியே செல்கிறேன்,,,

ஆஹா,,,ஆஹா,,, மிக்க மகிழ்ச்சி மூவேந்தரே,,,,,

வீரரே,,, உங்களுக்கான உணவுப் பொருட்கள்,,, ? மன்னருக்கான உணவு,,,?

சோழீசன் புண்ணியத்தில்,,, ஒரு குறைவுமில்லை,,,  கோவில் பட்டரின் வீட்டிலிருந்து வேளாவேளைக்கு உணவு வந்து விடுகிறது,,, என்னவொன்று ?

 கட்டிச் சோறும்,,,பருப்புக் குழம்பும்,,, மாவடுவும்,,, கட்டித் தயிரும், வெண்ணெயும்,,அதிரசமுமாக,,,,

ஹாஹ்ஹாஹா,,,, இராஜ உபசாரம் என்று சொல்,,,, மன்னருக்குக் கிடைப்பதெல்லாம் உங்களுக்கும் கிடைக்கிறதே,,,,? ஆனாலும்  சுவை அறிந்த நாக்கு, கடித்து உண்ண ஊன் சோறு கேட்கிறதோ,,,? ,,,,

இல்லை,,இல்லையில்லை,,, மன்னருக்கான உணவினை,,, அதுவும் விதவிதமாக உங்கள் தமக்கையார்,,வீரமாதேவியார் தன் கைப்படவே செய்து பரிமாறுகிறார்கள் ! அதுவும்,, கடித்து உண்ண ஊன் சோறு உங்கள் தமக்கையார் கையால் செய்து சாப்பிட வேண்டும்,,,அய்யனே ! அத்தனை ருசி ! அதுவும்,,,அவ்வப்போது கிடைத்து விடுகிறது,,,!

அதெப்படி,,,?

ஊன் சோறு செய்கிற போது,,, அதிகமாகவே செய்கிறார்,,,மன்னர் உண்ட பின்,,,,  சுற்றிலும்,,ஆடு மாடு மேய்க்கிறவர்களை அழைத்துப் பசியாற்றுகிறார்கள்,,,, அப்படியே,,நாங்களும்,,பசியாறிவிடுகிறோம்,,, 

ஆஹா,,,,கொடுத்து வைத்தவர்கள்,,,நீங்கள்,,,, வெகு நேரமாகி விட்டது,,,வருகிறேன்,!  எங்கே அவர்களைக் காணோம்,,,?

அதோ,,,, தூரத்தில்,,,,

அந்த புளியந்தோப்பில்,,, பாருங்கள்,,, ! அவர்கள்,,நடந்து கொண்டிருக்கிறார்கள்,,,

என்ன தான் எம்முடன் நீர் பேசிக் கொண்டிருந்தாலும்,,,  மன்னரின் மீதான உம் கவனம் சிதறவில்லை,,, 

அவர் நம் மன்னர் என்னும் எண்ணம் உள்ளத்திற்குள் உறைந்து கிடக்கும் போது,,,,,

கவனம் எப்படிச் சிதறும்,,,? 

வருகிறேன் வீரரே ! 

வந்த வழி வேண்டாம்,,,?  மன்னரின் தனிமை கெடும்,,,, 

ஹ,,,அப்படியே,,,  

 நாட்டின் அதிகாரிகளை மட்டுமல்ல,,,மன்னரையும்,,,தன்  சொல்லுக்கு கட்டுப்படுத்துகிற வல்லமை  சோழ நாட்டில் மட்டும் தான்  நடக்கிறது,,,, !

அதனால் தான்  அலைகடல் தாண்டியும்,,பலகலமோட்ட முடிந்திருக்கிறது,,,,, மூவேந்த வேளாளரே,,,

உண்மைதான்,,,வீரரே,,, நீர்,, சத்தியம் பேசுகிறீர் ! இனி,,,

அவர்களின் தனிமை நம்மால் கெட வேண்டாம்,,, 

அவர்கள் பயணம்,,,இது ! 

அவர்களுக்கான வாழ்க்கை இது,,,, நான் ஒதுங்கியே செல்கிறேன்,,,

அந்த புளியந்தோப்பு  அடர்ந்திருந்தது !

நிழல் படர்ந்திருந்தது,,,!

பக்கத்திலொரு சிறு தடாகம் முழுக்க தாமரை மலர்கள்,,,,,   அல்லியும், செங்கழுநீரும் ,,கூட,, தடாகக் கரையில் எல்லாம்,,,, இதமான பூக்களின் மணம்,,, 

வெண்ணிற கொக்கும்,மாடையும், தடாகக் கரையில்,,,, ஓடுமீன் ஓட உறு மீனுக்காய் தவம் செய்து கொண்டிருந்தன,,,,! 

புளியந்தோப்பினில்,,,செம்போத்து ஒன்று,,,,சற்றே சிறகடித்துப் பறந்து,,மீண்டுமொரு கிளையில் சோம்பலாய் அமர்ந்தது,,,

ஆட்காட்டிக் குருவி ஒன்று குரலெழுப்பியது,,,,

எவரோ ? வருகிறார்கள் !

ஆட்காட்டி குருவிகள் பல ஒன்று சேர்ந்து மறு குரல் கொடுத்தது,,,,

எவரோ ? அல்ல,,இது அவர்களுக்கான இடம்,,, 

இங்கே,,,நீ தான் புதியவன்,,,!

சத்தமில்லாமலிரு,,, 

அவர்களின்  உலகத்தில்,,,,,  அவர்கள்,,,, !

என்ன பேசுகிறார்கள்,,,! என்று மட்டும் கேட்டுக் கொண்டிரு,,, பதில் குரல் கொடுக்காதே,,?  முதல் குரல் கொடுத்த ஆட்காட்டிக் குருவியிடம், கிசுகிசுத்தன,, குருவிகள்,,,

,,,,,,,,,,,,,,,,,,,,,

,,,,,,,,,,,,,

ஒரு ஒசையின் முடிவில்,,, மெல்ல,,,,மற்றொரு ஒசையின் ஆரம்பம்,,, 

,,,,

,,,,,

வீரமாதேவி ! அடியே ! அந்த நாள் ஞாபகமிருக்கிறதா ?,,,

 

எந்த நாளினைச்சொல்கிறீர்கள் ? மன்னரே !

ஹா,,,எந்த நாளா?,,,

மனமெல்லாம் கரை புரண்டோடும் காட்டாறாய்,,நான் அலைபாய்ந்து கொண்டிருந்த நேரம்,,,,?,,,,
என்னை நானே ? தேடித் தேடிச் சலித்த நேரம் ?,,,,,

 அரண்மனை உண்டு !

சேடிகள் உண்டு,,,,

பொன்னிட்டால்,,பொத்தியணைக்கிற பொண்டுகள் உண்டு ?
எனினும் ,,நான்,,,எனக்குள் மருகிக் கிடந்த நேரம்,,,?
உன்னை,,உன்னைத்தான்,,,,
அதோ,,அந்த ,,,,,வேங்கி நாட்டிற்குச்செல்லும் வழியில் பாலாற்றங்கரைதனில் சந்தித்தேன் !

ஆ,,ஆ,,,ஆம்,,,,அந்த சந்திப்பு ?

வீரமாதேவி ! அந்த சந்திப்பினை ஞாபகப் படுத்திப் பார் ? தேவீ,,

 நள்ளிரவு நேரம் , ஆற்றங்கரையருகே உள்ள பிள்ளையார் கோவில்

விண்மீன்கள் மட்டுமே வானில்,,,இருக்க,,, நிலவில்லா,,,,நிலத்தில்,,,, 

என் குதிரையிலிருந்து இறங்கி,,எங்கேனும் மனிதர்கள் தட்டுப் படமாட்டார்களா? என,

 நான் தவித்துக் கோண்டிருந்த பொழுது,,,?

 உதடுகள் இரண்டும் உணவருந்தி இரு நாட்களாகிவிட்ட,,,,களைப்பினில்,,

ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்  கொண்டிருந்த கோலம்,,,? 

பரதேசிக் கோலத்திலிருந்த என்னை  நோக்கி,,,
‘’நேராகப் பாருங்கள்,,! நேராகப் பாருங்கள் ! என்கிற குரல் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது,,,!


நீண்டிருந்த பாதையில் ஆளரவமே இல்லை,,,,,?
எங்கிருந்து வருகிறது  குரல்,,,, ?

ஏதேனும்,,இயக்கியின் வேலையோ ? மலை நாட்டு மோகினி பேய் என்பார்களே ? அப்படி ஏதேனும்,,, இருக்குமோ ? கொஞ்சம் அச்சம் தான்,,, 

சோழீசனை நினைந்தபடியே,,,,, 

ஈசான சிவபண்டிதரை,,,, துதித்தபடியே,,,, குரல் கேட்ட திசை நோக்கி உற்று நோக்கினால்,,,, ?

வெண்முத்துக்கள் கொட்டினாற் போன்று,,வெளிச்சமாக இருந்தது !
உன் புன்னகையின் வெளிச்சம் அது ! 
அந்த வெளிச்சம் தான்,,,,
அன்று என் பசியாற்றிற்று !
அன்று ! அன்றிலிருந்து தானே,,,நான் நானாக மாறினேன் ? தேவி !

இன்னும் எத்தனைக் காலம் தான் இதனையே சொல்லிக் கொண்டிருக்கப் போகிறீர்கள் ?

இன்னும் இருக்கிற காலமெல்லாம்,,,இதனை,,,இதனைத்தான் சொல்லிக் கொண்டிருப்பேன் ! தேவி !

நான் கட்டழகில்லை,,

என்னைக் கட்டி விடும் அழகு இருக்கிறது !

நான் மற்றவர் போல கண்ணுக்கினியவள் இல்லை ?

என் கண்ணுக்கு இனியவளாக இருக்கிறாய் ! கண்மணீ

மற்றவர் போலக் கவர்ச்சியில்லை ?

எது கவர்ச்சி ? தேவி ! விதவிதமாகப் பட்டாடைகள் மட்டுமே கட்டி பவனி வருவதுவா? கவர்ச்சி ? வண்ணச் சாந்துகள் குழைத்து,,விழியெங்கும் அஞ்சனம் தீட்டி,,காண்போரைக் கவர்கின்ற விதமாக நடமாடிக் கொண்டிருப்பதுவா? கவர்ச்சி ?,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

இல்லை,,இல்லைவேயில்லை தேவி !

நான் நிறத்தால் கறுப்பி ?

ஹா,,கருங்கற்பாறைகளே இல்லாத இந்த சோழ தேசமே கறுப்பாகத்தானம்மா ? இருக்கிறது ?,,,
நானும் தானே ? கண்ணே கறுப்பு !,,,,

ம்ம்ம்,,இன்னும் என்னென்ன காரணங்களைக் கூறபோகிறாயோ ?,,சொல் தேவி !

அப்பொழுதெல்லாம்,,,, உம்மைக் காண , அரண்மனைக்கு வந்தால் உங்களைச்சுற்றிலும், அமைச்சர்கள், படைவீரர்கள்,,அதிகாரிச்சிகள் என்ற பெயரில் பெண்கள்,,,,,,,?

ஹாஹா,,,,நினைத்தேன்,,,தேவி ! நினைத்தேன் ! வீரமாதேவி !
அதோ அந்த அதிகாரிச்சிகளில் நீ,,,
மன்னிக்கவும் தேவி ,,,,,,
இராஜேந்திர சோழரின் திருமதி,,,, வீரமாதேவியாரான,, நீங்கள் பணியமர்த்திய பெண்களும் உண்டு! தேவி !

ஆனால்,,,

ஆனால்,,என்ன ? ஆனால்,,,,, ஒன்று புரிகிறது ! தேவி ! 
எந்தை ஸ்ரீ ராஜராஜசோழர் ,,தான் கட்டிய இராஜராஜேச்வரத்தின் கல்வெட்டினில்,,
யாம் கொடுத்தனவும்,,எம் பெண்டுகள் கொடுத்தனவும்,,,என்று ஏன் கல்வெட்டினாரென்பது ? இப்போது புரிகிறது ?

அப்படியெனில்,,,நான் கருதுவது ?,,தவறு என்கிறீர்களா? நான் பட்ட மகிக்ஷி கூட இல்லை,,,

ஹா,,,நிச்சயமாகத் தவறுதான்,,,! தேவி !,,,

பெண்கள் எல்லோருமே இப்படித்தான் என்று உலகமே கருதிக் கொண்டிருக்கையில்,,,,

நான் உன்னிடம் தானே ? இராஜாங்க காரியங்களைப் பற்றி ஆலோசித்தேன் ?

என்ன மெளனமாக இருக்கிறாய் ?

ம்ம்

இளவரசி அம்மங்காதேவியின் திருமணம் தள்ளிக் கொண்டே போகிறதே ? என்று நான் வருந்துகையில்,,பட்டமகிக்ஷி பேசாமலிருக்க,,,வரிந்து கட்டிக் கொண்டு ஆலயங்களிலெல்லாம்,, அன்னாபிசேகம் செய்தவள் நீயல்லவா?,,,
உழவாரப் பணி செய்தாய்,,,!
எத்தனை,,எத்தனை ஆலயங்கள்,

சோழதேசத்தில் இருக்கிறது என்பதனை எனக்குக் காட்டியவளே ? நீதானேயம்மா !
நிவந்தங்கள் வழங்க வேண்டி நிர்ப்பந்தித்தாய்,,,,!
தென்னாடுடைய சிவனுக்கு ஆலயம் எழுப்ப வேண்டுமென அடிக்கல் நாட்டினாய் ?
சோழ தேசத்தின் பண்டாரமே காலியாகி விடுமே? என சோழ தேசத்தின் தனாதிகாரி அருள்மொழிப்பட்டன் குறுக்கே வரும் போது கூட,,,,உன் பண்டாரத்திலிருந்து செலவிட்டவள் நீயல்லவா?,,

ம்ம்ம்,,,சொல்லிக் காட்டுகிறீர்களா?

இல்லை தேவி ! இல்லை,,, எதனையும் சொல்லிக் காட்டுவதல்ல ? என் நோக்கம் ! 

என்னைப் புரிந்து கொள்ளேன் ? என்கிறேன் . வேறொன்றுமில்லை

நான் உங்களைப் புரிந்து கொள்ளவில்லை என்கிறீர்களா?

நான் அப்படிச் சொன்னேனா? தேவி ! நீயே கேள்விகளைத் தொடுக்கிறாய் ?,,,

பதில்கள்,,நீ எதிர்பார்த்தபடியே வர வேண்டுமென நினைக்கிறாய் ? தேவி !,,,
உன் நினைவுகள்,,நினைப்புகள் தவறானவை என,,,நான் கருதவேயில்லை ?
அப்படிக் கருதியிருந்தால்,,வேங்கி நாட்டிலே இருக்கிற என் தங்கை குந்தவையின் செயல்களைப் பற்றியெல்லாம்,,,நான் உன்னிடம் ஆலோசித்திருக்க மாட்டேனே ?

அப்படியெனில்,,நீங்கள் குற்றமெதுவும் செய்யவில்லை ?,,,நான் ,, 

நான் மட்டும் தான் குற்றவாளி என்கிறீர்களா?

ஹா,,போதும் தேவி ! போதும்,,,! 

அதோ,,,கங்கை கொண்டதும்,,கடாரம் கொண்டதும்,,எல்லாம் போதும் ! போதும்,,! என்றுதான்,, ஏகாந்தமாக உன்னுடன் வாழ வேண்டுமென்று,,,,,,, 
எண்ணித்தான் இங்கே கச்சிநகர் விட்டு முப்பது காத தூரம் தாண்டி வந்து,,இதோ இந்த பிரம்மதேயத்தில் அமர்ந்திருகிறோம்,,,!

இப்போதும்,,, தேவி !
நீ பேருக்கேற்றாற் போல வீரமாதேவிதான்,,,,
அதிலெனக்கு சந்தேகமே இல்லை தேவி !
ஆனால்,,
அன்று ஹொட்டூரில் நீ நடத்திய உன் பழைய வாள் வீச்சு வேண்டாம் ?
பகைவர்களை ஒடஒட விரட்டி ஈட்டியைக் கொண்டே வெற்றியைப் ஈட்டியவளே ! 

என் இனிய வீரமாதேவி ! 
பழந்தீவு பன்னீராயிரம் வென்று வர கடலோடிய,,,,,,,,,
நானே,,,எல்லாம் போதுமென்று,,,,,? உன்னை ,,நாடி வந்திருக்கும் போது,,?
இப்போதும்,,நீ போர்ப்பரணி பாடாதே ? என் கண்மணீ !

நானா? போர்ப்பரணி பாடுகிறேனா?

போர்பரணி பாடும் நேரம் இதுவல்ல என்கிறேன் ? தேவி !
அன்று வேங்கிக்கும்,,கங்கபாடிக்கும் செல்லுகையில்,,நான் சோர்ந்திருந்த பொழுதுகளிலெல்லாம்,,நீதானே குதிரையோட்டினாய்,,,,,!
நான் ஒரு குழந்தையைப் போல் அல்லவா? உன் பின்னால் அமர்ந்தபடி,,
உன்னை மட்டுமல்ல ,,
நம் சோழ தேசத்தினையும்,,பிற நாடுகளையும் வேடிக்கை பார்த்தபடி வந்தேனே ?..
அந்த நாட்களைப் போல வேண்டுமடி நீ எனக்கு ! என்கிறேன்,,,,,

வயதானாலும்,,,வக்கணைப் பேச்சுக்கு குறைச்சலில்லை,,மன்னருக்கு,,,

அதெப்படியடீ குறையும்,,,,
நீ என் அனுக்கியான பொழுதிலிருந்து தான்,,,
நான்,,நானாகவே இருக்கிறேன் ! என்பதனை நீ அறிவாய் தானே ?

அதோ,,,அங்கே தூரத்தில்,,,,தேவாரம் பாடிய சுந்தரர் நடந்து களைத்த போது,,, வன்தொண்டனுக்கு கட்டுச்சோறு கொடுத்து,,,கூடவே நீரூற்றும் தோண்டிக் கொடுத்த பனங்காட்டூர் ஈசன் இருக்கும் இடம் ஒரு பக்கத்தில்,,,,,

இதோ இத்திசையில்,,,,,,
யாம் வெட்டிய சோழகங்கம் போல இல்லையென்றாலும்,,,,?
ஒரளவிற்கு எம் மக்களின் தாகம் தீர்க்கிற ஏரிக் கரை,,
சுற்றிலும் பழமரங்கள் ! 
நிழல் தரக் காத்திருக்கிற புளிய மரங்கள்,,,,
அதோ நிசும்பசூதனிக்கு இணையான அந்த கிராமதேவதை,,,
போதும் வீரமாதேவி !,,,,,,,,,,,,,,,,,,,,
இம்மக்களோடு மக்களாய்,,யாம் வாழ்ந்து விடுவோம் ! 
இன்னும் கொஞ்ச காலம் தான்,,,! 
கொஞ்சலோடுதான் இருப்போமே ! தேவி !

இன்னும் எத்தனைக் காலம் தான் இப்படியே இருப்பது ? இராஜேந்திரரே

இதோ,,,ஐம்பது ஆண்டுகளாக,,,, அன்று,,நடந்த  சம்பவங்களையெல்லாம்,,, மீண்டும், மீண்டும்,, பேசிக் கொண்டிருக்கிறோமே ?  அதே,,போல,,இன்னும் கொஞ்சம் நாட்கள்,,, ?

ம்ம்ம்

இதோ,,நம் பிள்ளைகள் மூவரும் தலை நிமிர்ந்து விட்டனர். அவர்களே சோழ தேசத்தை ஆட்சி செய்கின்றனர், 

இன்னும் சிறிது காலம் தான்,,நம் வாழ்க்கை,,,
இப்போது,,,,,நாமிருவர் தானடியே!,,,இதுவரை வாழாத வாழ்க்கையை ,,இன்னும் ஒரு நூற்றாண்டு வாழ்க்கையை ,,இங்கே,,வாழ்ந்துதான் பார்ப்போமே! கண்மணீ !

பிறகு,,,,

ஹாஹ்ஹா,,பிறகென்ன பிறகு,,,,,
நம்மைப் போல,,,,எவராவது,,,?
நாம் இருக்கும் இடந்தேடி வராமலா போய் விடுவார்கள் ?
நாம்,,,இன்றிருக்கும் இடத்திலிருந்தபடி,,
நாம் என்னென்ன பேசியிருப்போமென்றெல்லாம்,,,,,,,,,,,,,, நினைக்காமலா?

 போய் விடுவார்கள் ?
காத்திருப்போம்,,,,
நம்மைப் போலவே எவராவது கண்டிப்பாக வருவார்கள் !
அவர்களுக்கு சாட்சி சொல்லுவதற்காகவது,,
அதுவரைக்கும் அந்த ஏரிக்கரையும்,,,
இந்த புளிய மரங்களும்,,,
அதனருகே அந்த கயிலை ஈசனும்,,,கல்லாகவேனும் இருப்பார்கள் ! தேவி !

அப்படியா? எம்மானே !

ஆம் ! நம்பு தேவி ! நம்பு,,,,,,நம்பிக்கை தானே ? வாழ்க்கை ,,,,,,,,, வீரமாதேவி !

 

அ.வேலுப்பிள்ளை.

 

Leave a Reply