தை மாதத்தில் தமிழ் ஆண்டு பற்றிக் கூறும் கல்வெட்டு

சோழர்‌ கல்வெட்டுகளில்‌ யாண்டு கணக்கு – நடன காசிநாதன்‌ அவர்கள், மற்றும் கே.வி. ஷர்மா ஆகியோரின் எழுதியக் கட்டுரைகளிலிருந்து.

கல்வெட்டுகளில் ஆண்டு குறிப்பிடும்‌ பழக்கம்‌:

ஒரு நிகழ்ச்சி எப்பொழுது நிகழ்ந்தது என்பதைக்‌ கணக்கிட்டு குறிப்பிடும்‌ பழக்கம்‌ இந்தியாவில்‌ கி.மு. 6-ஆம்‌ நூற்றாண்டிலிருந்து இருந்து வந்திருக்கிறது. அச்காலத்தில்‌ குறிப்‌பிடத்தக்க வகையில்‌ நிகழ்ந்த எதாவது ஒரு நிகழ்ச்சியை மையமாகக்‌ கொண்டு அந்‌நிகழ்ச்‌சி நடந்து முடிந்த இத்தனாவதி ஆண்டு என்று குறிப்பதை வழக்கமாக முதன்‌ முதலில்‌ பெற்றிருந்திருக்கிறார்கள்‌ என்பதை “மகாவீரர்‌ நிர்வாணம்‌ அடைந்து இத்தனாவது ஆண்டு” என்று குறிப்பிட்டிருப்பதிலிருந்தும்‌’ புத்தர்‌ நிர்வாணம்‌ அடைந்து இத்தனாவது ஆண்டு” என்று தெரிவித்திருப்பதிலிருந்தும்‌ தெரிந்து கொள்ள முடிகிறது.

ஆட்சி ஆண்டு புகுத்தப்பட்ட காலம்‌ நாளடைவில்‌, பெரும்‌ பேரரசர்கள்‌ எந்த ஆண்டிலிருந்து அரசாளத்‌ தொடங்கினார்‌களோ அந்த ஆண்டிலிருத்து இத்தனாவது ஆண்டில்‌ இத்த நிகழ்ச்சி நடைபெற்றது என்று குறிப்பிடுவது ஆரம்பமானது. இவ்வழக்கம்‌ தி.மு. 3-ஆம்‌ நூற்றாண்டிலிருற்து தொடங்கப்‌ பெற்றிருக்கிறது. இவ்வழக்கம்‌ இந்தியாவில்‌ ஏற்பட்டதற்குக்‌ காரணம்‌ இந்தோ-கிரேக்க மன்னர்களால்‌ ஏற்பட்ட தொடர்பாக இருக்‌கலாம்‌. இப்பழக்கம்‌ முதன்‌ முதலில்‌ மெளரி யப்‌ பேரரசன்‌ அசோகனின்‌ (கி.மு. 278-232) கல்வெட்டுகளில்‌ காணப்படுகிறது.”

ஆட்சியாண்டு:

மேற்‌ கூறப்பட்ட ஆண்டு முறைகளும்‌ வழக்கத்தில்‌ இருந்தாலும்‌ அதிக அளவில்‌ அரசன்‌ ஆட்சிக்‌ கட்டில்‌ ஏறியதிலிருந்து கணக்‌ திடும்‌ முறைதான்‌ கல்‌ வெட்டுகளில்‌ கையாளப்‌ பட்டிருக்கின்றன. இவ்வாண்டு முறையை வடமொழியில்‌ “ராஜ்யவர்ஷம்‌’ ‘1? என்றும்‌ தமிழில்‌ “*செங்கோல்‌ பற்றியாண்டு”15 என்‌ றும்‌ ஒரு செப்பேடும்‌, ஒரு கல்வெட்டும்‌ முறை யே புலப்படுத்துகின்‌ றன. அரசனின்‌ ஆட்சி ஆண்டைக்‌ குறிப்பிடுவதிலும்‌ தமிழகத்தில்‌ ஒரு புதமையைக்‌ கையாண்டிருக்கிறார்‌ கன்‌, ஆன்றோர்கள்‌. அதாவது ஒரு ஆண்டைக்‌ குறிப்பிட்டு அதற்‌ கெதிராமாண்டு என்று வழங்கப்படுவதாகும்‌. எதிராமாண்டு என்பது எதிர்வந்த ஆண்டு என்பதின்‌ குறுகிய வடிவ மாக இருக்கலாம்‌. ஏனெனில்‌ அவ்வாறு எதி ராமாண்டு இன்னது என்று குறிக்கப்பட்டிருப்‌ பதைக்‌ கூட்டித்தான்‌ கணக்கிடப்படவேண் டும்‌ என்பதை வேறொரு கல்வெட்டால்‌ அறியப்படுவதிலிருற்து ஆகும்‌.1*4

யாண்டு எதிராமாண்டின்‌ தொடக்கம்‌:

இந்த ஒருமுறை பெரும்‌ அளவில்‌ பாண்டி. யர்களால்‌ கையாளப்பட்டு வந்திருக்கிறது. தமிழ்‌ நாட்டில்‌ ஆட்சி புரிந்த பிற குல மன்னர்‌ களான பல்லவர்‌15, கேரள மன்னர்‌,1! யாதவ மன்னர்‌”, சோழா! அகியோச்‌ இம்முறை யைச்‌ சிறு அளவில தங்கள்‌ கல்வெட்டுகளில்‌ எடுத்தாண்டிருக்கின்றனர்‌. பெரும்‌ அளவில்‌ பயன்படுத்திய பாண்டியா்கள்‌ இம்முறையை எங்ஙனம்‌ உருவாக்கினார்கள்‌ என்று ஆராய்‌ கையில்‌ அவர்களுக்கு முன்ன மேயே இம்முறை இந்தியாவின்‌ சில பகுதிகளில்‌ பயன்‌ படுத்தப்‌ பட்டிருந்தமை தெரிய வருகிறது.
சாதவாகன மன்னர்‌ கெளதமபுத்ர ஸ்ரீசாதகர்னி (இ.பி. 80-104) நாசிக்‌ குகைக்‌ கல்வெட்டில்‌ ஆட்சி ஆண்டு 10–8 என்று குறிக்‌ கப்பட்டிருக்கிறது.1?

ரு.த்ரதாமன்‌ காலத்திய (கி.பி. இரண்டாம்‌ நூற்றாண்டு) ஜுனாகத்‌ பாறைக்‌ கல்வெட்டில்‌ 70–8 என்று ஆட்‌ ஆண்டைக்‌ காணமுடி கிறது.

வாகடக மன்னன்‌ ப்ரவரசேனன்‌ காலத்தி யக்‌ (இ.பி. மூன்றாம்‌ நூற்றாண்டு) கல்வெட்டு ஒன்றில்‌ 104-8 என்று ஆட்சி ஆண்டு காணப்‌ படுகிறது.”

முதன்‌ முதலில்‌ யாண்டு ஏதிராமாண்டைப்‌ புகுத்தியவர்கள்‌ எனவே, முதன்‌ முதல்‌ இம்முறையை
இந்தியாவில்‌ புகுத்தியவன்‌ சாதவாகன மன்‌னன்‌ கெளதமி புத்ர ஸ்ரீசாதகர்ணி என்று ஆண்டைக்‌ குறிப்பிடுவதிலும்‌ தமிழகத்தில்‌ ஒரு புதமையைக்‌ கையாண்டிருக்கிறார்‌கள், ஆன்றோர்கள்‌.

அதாவது ஒரு ஆண்டைக்‌ குறிப்பிட்டு அதற்‌ கெதிராமாண்டு என்று வழங்கப்படுவதாகும்‌. எதிராமாண்டு என்பது எதிர்வந்த ஆண்டு என்பதின்‌ குறுகிய வடிவ மாக இருக்கலாம்‌. ஏனெனில்‌ அவ்வாறு எதிராமாண்டு இன்னது என்று குறிக்கப்பட்டிருப்‌ பதைக்‌ கூட்டித்தான்‌ கணக்கிடப்படவேண்டும்‌ என்பதை வேறொரு கல்வெட்டால்‌ அறியப்படுவதிலிருற்து ஆகும்‌.

யாண்டு எதிராமாண்டின்‌ தொடக்கம்‌:

இந்த ஒருமுறை பெரும்‌ அளவில்‌ பாண்டியர்களால்‌ கையாளப்பட்டு வந்திருக்கிறது. தமிழ்‌ நாட்டில்‌ ஆட்சி புரிந்த பிற குல மன்னர்‌களான பல்லவர்‌, கேரள மன்னர்‌, யாதவ மன்னர்‌, சோழா அகியோர் இம்முறையைச்‌ சிறு அளவில தங்கள்‌ கல்வெட்டுகளில்‌ எடுத்தாண்டிருக்கின்றனர்‌. பெரும்‌ அளவில்‌ பயன்படுத்திய பாண்டியா்கள்‌ இம்முறையை எங்ஙனம்‌ உருவாக்கினார்கள்‌ என்று ஆராய்‌ கையில்‌ அவர்களுக்கு முன்னமே இம்முறை இந்தியாவின்‌ சில பகுதிகளில்‌ பயன்‌ படுத்தப்‌பட்டிருந்தமை தெரிய வருகிறது.

சாதவாகன மன்னர்‌ கெளதமபுத்ர ஸ்ரீசாதகர்னி (இ.பி. 80-104) நாசிக்‌ குகைக்‌ கல்வெட்டில்‌ ஆட்சி ஆண்டு என்று குறிக் கப்பட்டிருக்கிறது.

ருத்ரதாமன்‌ காலத்திய (கி.பி. இரண்டாம்‌ நூற்றாண்டு) ஜுனாகத்‌ பாறைக்‌ கல்வெட்டில்  ஆட்‌சி ஆண்டைக்‌ காணமுடி கிறது.

வாகடக மன்னன்‌ ப்ரவரசேனன்‌ காலத்தி யக்‌ (இ.பி. மூன்றாம்‌ நூற்றாண்டு) கல்வெட்டு ஒன்றில்‌ 104-8 என்று ஆட்சி ஆண்டு காணப்‌ படுகிறது.”

முதன்‌ முதலில்‌ யாண்டு ஏதிராமாண்டைப்‌ யபுகுத்தியவர்கள்‌ எனவே, முதன்‌ முதல்‌ இம்முறையை
இந்தியாவில்‌ புகுத்தியவன்‌ சாதவாகன மன்‌னன்‌ கெளதமி புத்ர ஸ்ரீசாதகர்ணி என்று என்று கருதப்படுகிறது.

அம்மன்னனின்  மூன்றாம்  ஆட்சியாண்டில்‌ இக்கல்வெட்டு எழுதப்‌பட்டதாகத்‌ தெரிகிறது.

உத்தம சோழன்‌

சைவ சமயத்துக்கே தங்களை அர்ப்பணித்‌துக்‌ கொண்ட சைவப்‌ பழங்களான கண்டராதித்த சோழரைத்‌ தந்தையாகவும்‌ செம்பியன்‌ மாதேவியாரைத்‌ தாயாராகவும்‌ கொண்ட உத்தமசோழரும்‌ தம்‌ கல்வெட்டில்‌ இம்முறையைக்‌ கையாண்டுள்ளார்‌

தஞ்சை மாவட்டத்தில்‌ அய்யம்பேட்டைக்‌ கு அருகில்‌ உள்ள புள்ள மங்கைபிர்மபுரீஸ்‌ வரர்‌ ஆலயத்துக்‌ கல்வெட்டு? ஒன்றில்‌ கோப்பர கேசரிபன்மற்கி யாண்டு ௨ ஆவது எதிராமாண்டு என்று குறிப்‌ பிடப்பட்டிருக்கிறது.

இக்கலவெட்டின்‌ நடுப்‌ பகுதியில்‌ காணப்படும்‌ கோள்‌ நிலைகளைக்‌ கருத்‌தில்‌ கொண்டு பார்க்கையில்‌ இக்கல்வெட்டு உத்தம சோழரின்‌ காலத்தியதாகத்‌ தெரி கிறது. எனவே, உத்தம சோழரின்‌ மூன்றாம்‌ ஆட்சி ஆண்டில்‌ இது பொறிக்கப்பட்டதாகக்‌ காணப்படுகிறது.

மூன்றாம்‌ இராஜராஜன்‌ :

உத்தம சோழனுக்குப்‌ பிறகு ஆண்ட சோழ மன்னர்களில்‌ மூன்றாம்‌ இராஜராஜன்‌ காலத்தில்‌ தான்‌ திரும்பவும்‌ இம்முறையக்‌ காண முடிகிறது. தஞ்சை மாவட்டம்‌ வேதா ரண்யத்தில்‌ உள்ள வேதபுரீஸ்வரார்‌ கோயிலில்‌ காணப்படும்‌ இரு கல்வெட்டுகளில்‌ இம்முறை பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்விரு கல்வெட்‌ டுக்களும்‌ மூன்றான்‌ இராஜராஜன்‌ காலத்தியவை. ஒன்று,

“திரிபுவனச்‌ சக்கரவர்த்திகள்‌ ஸ்ரீராஜ ராஜ தேவற்கு யாண்டு ஏழாவதின்‌ எதிரா மாண்டு……… என்றும்‌, மற்றொன்று

“ திரிபுவனச்‌ சக்கரவரீத்திகள்‌ ஸ்ரீராஜரா ஐ தேவற்கு யாண்டு இருபத்தொன்பதாவதின்‌ எதிராமாண்டு… என்றும்‌ எழுதப்படடுள்ளன.

திருச்சி மாவட்டம்‌ இருவானைக்காவில்‌ உள்ள ஜம்புகேஸ்வரர்‌ ஆலயத்து மூன்றாம்‌ திருச்சுற்று மதிலின்‌ தெற்குச்‌ சுவரில்‌ பொறிக்‌ கப்பட்டுள்ள மூன்றாம்‌ இராஜரா ஜனின்‌ ஆறு கல்வெட்டுகள்‌

ஸ்ர திரிபுவன சக்கரவர்த்திகள்‌ ராஜராஜ தேவற்கு யாண்டு பதினாறு எதிராமாண்டு… ’28 என்று தெரிவிக்கின்றன.

மூன்றாம்‌ இராஜேந்தீரன்‌ :

மூன்றாம்‌ இராஜராஜனை அடுத்து அரசு கட்டிலேறிய மூன்றாம்‌ இராஜேந்திரனும்‌ தம்‌ ஆட்சிக்‌ காலத்தில்‌ இம்முறையைப்‌ பயன்‌ படுத்தியிருக்கறான்‌.

திருவரங்சத்திலுள்ள ஸ்ரீ ரங்கநாதர்‌ ஆலயத்துக்‌ கல்வெட்டொன்று”?

மாம ஸோமீஸ்வர ப்ரதிகுல கால தண்ட திரிபுவனச்‌ சக்கரவர்த்திகள்‌ ஸ்ரீராஜேந்திர சோழ தேவர்க்கு யாண்டு ஏழாவதுின்‌ எதிரா மாண்டு ….. ..’ என்று தொடர்ந்து செல்‌கிறது. இக்கல்வெட்டு மூன்றாம்‌ இராஜேந்‌ திரன்‌ காலத்தியக்‌ கல்வெட்டொன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில்‌ ௮ம்‌ மன்னனின்‌ 8-ஆம்‌ ஆட்சி ஆண்டு தெரியப்‌ படுத்தப்பட்டுள்ளது.

கல்வெட்டுகள்‌ கிடைத்துள்ள பகுதி மேற்‌ கூறப்பெற்ற சோழர்‌ கல்வெட்டுக்கள்‌ அனைத்தும்‌ தஞ்சை மாவட்டத்திலும்‌ தஞ்சை வட்டத்தை ஒட்டியுள்ள திருச்சி மாவட்டத்‌ திலுமே காணப்படுகின்‌றன.

அவ்வாறு காணப்படுவதற்குக்‌ காரணம்‌:

இக்கல்வெட்டுகள்‌ சோழர்‌ ஆட்சியில்‌ இரண்டு குறிப்பிட்ட காலக்கட்டத்தில்‌ காணப்‌ படுகின்றன. முதலில்‌ பராந்தகன்‌ காலத்தி லிருந்து உத்தம சோழன்‌ காலம்‌ வரையிலும்‌, பின்னர்‌ மூன்றாம்‌ இராஜராஜன்‌ காலம்‌ முதல்‌ மூன்றாம்‌ இராஜேந்திரன்‌ காலம்‌ வரையிலும்‌ இடைத்துள்ளன. சங்க காலப்‌ பாண்டியர்‌ களை அடுத்து ஆட்சி புரிந்த கடுங்கோன்‌ முதலாக உள்ள பாண்டிய மன்னர்கள்‌ கி பி. 10- ஆம்‌ நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்திருக்கின்‌றனர்‌. குறிப்பாகப்‌ ஈராந்தகன்‌ காலத்திலும்‌ அரிஞ்சயன்‌, உத்தம சோழன்‌ ஆகியோர்‌ காலத்திலும்‌, பாண்டியர்கள்‌ சோ ழர்களுக்குப்‌ பெரும்‌ இடையூறாக இருந்திருக்கின்றனர்‌. சிலசமயங்களில்‌ பாண்டிய மன்னனால்‌ சோழன்‌ வீழ்த்தவும்‌ பட்டிருக்கினான்‌. அந்தச்‌ சமயத்‌ தில்‌ பாண்டியர்கள்‌ பயன்படுத்திய ஆண்டு முறையை சோழர்களும்‌ பயன்படுத்துவது இன்றியமையாததாக இருந்திருக்கலாம்‌.

பின்னர்‌ முதலாம்‌ இராஜராஜன்‌ காலத்‌ திலிருந்து மூன்றாம்‌ இராஜராஜன்‌ காலம்‌ வரை சோழர்களின்‌ ஆதிக்கம்‌ தமிழகமெங்கும்‌ நீக்க மற நிறைந்திருந்தது. பாண்டியர்கள்‌ நிர்மூல மாகப்பட்டு விட்டனர்‌. அனால்‌ மூன்றாம்‌ இராஜராஜனின்‌ காலத்தில்‌ திரும்பவும்‌ பாண்‌ டியர்கள்‌ தலையெடுக்க ஆரம்பித்து விட்டனர்‌. சோணாடு கொண்டருளிய முதலாம்‌ மாறவர்‌ மன்‌ சுந்தரபாண்டியன்‌ தம்‌ காலக்‌ தில்‌ தஞ்சையையும்‌ உறந்தையையும்‌ செந்தழலுக்கு உள்‌ளாக்கினான்‌ என்று அவனது கல்வெட்டுச்கள்‌ கூறும்‌. அவனையடுத்து ஆட்சிக்கு வந்த “எல்‌லாந்தலையானான்‌” என்ற பட்டம்‌ பூண்டிருந்த சடாவர்மன்‌ சுந்தரபாண்டியனும்‌ பெரும்‌ பேரரசகை விளங்கியிருக்கிறான்‌. இவர்கள்‌ இருவரின்‌ காலத்திலும்‌ சோழ நாட்டில்‌ ஆட்சி செய்தவர்கள்‌ மூன்றாம்‌ இராஜராஜனும்‌ மூன்றாம் ராஜேந்திரனும்‌ ஆவர்‌. எனவே, அவர்‌கள்‌ தங்கள்‌ கல்வெட்டுக்களில்‌ பாண்டியர்கள்‌ பயன்படுத்திய ஆண்டு முறையைக்‌ கையாள வேண்டியது இன்றியமையாததாக இருந்திருக்‌கலாம்‌.

பலவகை ஆண்டு முறை:

காலப்‌ போக்கில்‌ பலவகையான ஆண்ட முறை இந்தியாவில்‌ நிலவியிருக்கிறது. உதாரணமாக

விக்ரம அண்டு முறை – கிமு. 57-ல்‌ ஆரம்பமாகியது,
குப்த ஆண்டு முறை கி.பி. 319-ல்‌
களச்சூரி ஆண்டு முறை – கி.பி, 248-49ல்
கலி ஆண்டு முறை – கி.மு. 3101-ல்‌
சக ஆண்டு முறை – கி.பி. 78-ல்‌
கொல்லம்‌ ஆண்டு முறை – கி.பி. 824-25-ல்‌
பிரபவ, விபவ ஆண்டு முறை – கி.பி 14-15-ஆம்‌ நூற்றாண்டில்‌ ஆகியவைகளைக்‌ காட்டலாம்‌.

கொல்லம்‌ ஆண்டைத்‌ தமிழ்‌ ஆண்டு என்று ஒரு கல்‌வெட்டு (TAS Vol  VI no 38) குறிப்பிடுகிறது. கேரளத்தில் காலத்தை அறிய கொல்ல ஆண்டு முறையைப் பயன்படுத்துவர், இதை மலையாள ஆண்டு என்றும் அழைப்பர். கி.பி. 823-ல் இந்த ஆண்டு தொடங்கியதாக நம்புகின்றன.

Mampalli copper plate (10th century AD), the earliest record to mention the Kollam Era.

 

கொல்லம் சகாப்தத்தின் தோற்றம் கி.பி 825 ஆம் ஆண்டைச் சேர்ந்தது, கொல்லத்தில் மன்னர் குலசேகரனின் உத்தரவின் பேரில் பெரிய மாநாடு நடைபெற்றது. அந்தக் காலத்தில் கொல்லம் ஒரு முக்கியமான நகரமாக இருந்தது, மேலும் மலையாள சகாப்தம் ‘கொல்லவர்ஷம்’ என்று அழைக்கப்படுகிறது.

கொல்லம் வேணாட்டின் தலைநகரமாகவும், சேர நாட்டின் முக்கிய துறைமுக நகரமாகவும் அக்காலத்தில் விளங்கியது. கொல்லம் ஆண்டு முழு சேர இராச்சியத்திலும் (தற்கால மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா) தழுவப்பட்டது, அவற்றில் பெரும்பாலானவை இப்போது கேரளாவில் உள்ளன. மலையாளம் பேசும் கேரளாவில், இது இப்போது மலையாள சகாப்தம் அல்லது ‘கொல்லவர்ஷம்’ (கொல்லம் தொண்டி ஆண்டு) என்று அழைக்கப்படுகிறது. கொல்லம் சகாப்தத்தைக் குறிப்பிடும் ஆரம்பகால பதிவு கி.பி 973 (கொல்லம் சகாப்தம் 149) காலத்தைச் சேர்ந்த வேணாட்டு மன்னர் ஸ்ரீ வல்லவன் கோடாவின் அரச ஆணையாகும். கல்வெட்டில் “கொல்லம் தொண்டி ஆண்டு” என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது. [5] கி.பி 1097 ஆம் ஆண்டிலிருந்து கணக்கிடப்பட்ட “கொல்லம் ஐந்த ஆண்டு” என்று குறிப்பிடப்படும் மற்றொரு சகாப்தம் சோழர்களால் சில காலம் கணக்கிடப்பட்டது. கி.பி. 1097 ஆம் ஆண்டில் சோழர்கள் கொல்லம் துறைமுகத்தைக் கைப்பற்றியதாக தற்காலிகமாக கணக்கிடப்பட்டுள்ளது.

மலையாள மாதத்தில் மகரத்திலும், தமிழ் மாதத்திற்கு தை யிலும் இந்த கொல்லம் ஆண்டு பிறக்கிறது.

இடைக் காலத்தில், சேர நாட்டின் ஒரு பகுதியாக இருந்த பழைய கொல்லம், கடல்கோளால் அழிந்தது. பிறகு கடலின் பெயர்ச்சியால் புதிய நிலப் பகுதி தோன்றியது. புதுநிலப் பகுதிக்கு, மக்கள் கொல்லம் என்றே பெயரிட்டனர், புதிய கொல்லம் பகுதியில் மக்கள் குடியேறிய காலம் முதல், கொல்லம் ஆண்டு கணக்கிடப்பட்டு வருகின்றது.

இச் செய்தியைத் தெய்வச்சிலையார்,

கூபகமும் கொல்லமும் கடல்கொள்ளப்
படுதலின் குமரியாற்றிற்கு வடகரைக்கண்
அப்பெயரானே கொல்லம் எனக் குடியேற்றினார்

என்று கூறுகின்றார்.

கொல்லம் சகாப்தம், மலபார் சகாப்தம் என்றும் அழைக்கப்படுகிறது, இது ஆகஸ்ட் 15, 824 AD லிருந்து கணக்கிடப்படுகிறது. பிற இந்திய காலங்களைப் போலல்லாமல்: (i) ஆண்டு சந்திரன்-சூரிய அல்லது சந்திரன், (ii) மேஷ-ராசி (மேஷ ராசி) முதல் தொடங்குகிறது, மற்றும் (iii) ஆண்டு-எண் ‘காலாவதியான’ ஆண்டைக் குறிக்கிறது.

கொல்லம் சகாப்தம் ஆண்டு மற்றும் பன்னிரண்டு தொகுதி மாதங்கள் ஆகிய இரண்டிலும் முற்றிலும் சூரியனைக் கொண்டுள்ளது, ஆண்டு-எண் நடப்பு ஆண்டைக் குறிக்கிறது, மேலும் ஆண்டு சிம்ம-ராசி (சிம்ம ராசி) முதல் தொடங்குகிறது. இந்த சகாப்தம் இந்தியாவின் மேற்கு கடற்கரையில் கேரளாவில் அமைந்துள்ள கொல்லம் நகரில் தொடங்கப்பட்டதன் காரணமாக கொல்லம் சகாப்தம் என்று அழைக்கப்படுகிறது, மேலும் அது இருந்த மற்றும் இன்னும் பரவலாக இருக்கும் பகுதியின் பின்னர் மலபார் சகாப்தம் என்று அழைக்கப்படுகிறது. வானியல் மாறிலிகள் மற்றும் கணக்கீடுகளை வெளிப்படுத்துவதில் இலக்கங்களுக்குப் பயன்படுத்தப்படும் எண் குறியீடு இந்தியாவின் பிற பகுதிகளில் நிலவும் பூதசங்கியா அமைப்புக்கு எதிராக கட்டபயாதி முறையின்படி உள்ளது

புராணக் கதைகள் பரவியிருந்தாலும், வரலாற்று ரீதியாக, சகாப்தம் உதய மார்தாண்ட வர்மாவால் தனது தலைநகரான கொல்லத்தில், அரசவை வானியலாளர்களுடன் விரிவான ஆலோசனைக்குப் பிறகு வானியல் துறையின் ஆய்வின் அடிப்படையில் இந்த கொல்லம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்த சகாப்தம் கேரளாவின் மேற்கு கடற்கரையில் உள்ள கொல்லம் நகரில் தொடங்கப்பட்டதாகக் கூறப்படுவதால் கொல்லம் யுகம் என்று அழைக்கப்படுகிறது. மலபாரில் பரவலாக இருந்ததால் இது ‘மலபார்’ சகாப்தம் என்றும் அழைக்கப்படுகிறது. சமஸ்கிருத நூல்களில், சகாப்தம் கோலம்பா என்று அழைக்கப்படுகிறது. சகாப்தத்தின் பரவலானது தமிழ்நாட்டின் திருநெல்வேலி மற்றும் மதுரை மாவட்டங்கள் மற்றும் இலங்கையின் ஒரு பகுதி வரை பரவியது.

Source: KOLLAM ERA – K.V. SARMA*