ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும் – ராஜ் கௌதமன்
Buy at www.heritager.in
இந்நூல் சங்க இலக்கியத்தில் ஆநிரை கவர்தல், ஆநிரை மீட்டல் என்னும் அடிக்கருத்தில் புலவர்கள் பாடிய பாடல்களைப் பற்றிய சிறிய ஆய்வாகும்.
இச்சிறுநூலில் சங்ககாலப் புலவர்கள் வேட்டுவக் குடியைச் சேர்ந்த இனக்குழு மக்களைப் பற்றி கொண்டுள்ள மதிப்பீடுகளைப் பற்றி ஆய்வு செய்யவில்லை. மாறாக அம்மக்களைப் பற்றிய பதிவுகளில் காணப்படும் (புலவர் மரபில்) சில சிக்கல்களைப் பற்றியும், புலவர் பதிவுகளுக்கு முன்னோடியாக இருந்திருக்கக்கூடிய பாணர் மரபு எனும் வாய்மொழிக்கிடங்கு பற்றியும், அப்பாணர் மரபின் சமூக அடிக்கட்டுமானம் பற்றியும், அதன் தொன்மை பற்றியும் ஆய்வு செய்வது இந்நூலின் நோக்கமாகும்.
பொருளடக்கம்
1. ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்
II. பாணர் – புலவர் மரபுகளில் களவு
‘ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்’ என்ற இச்சிறுநூல் சங்க இலக்கியத்தில் ஆநிரை கவர்தல், ஆநிரை மீட்டல் என்னும் அடிக்கருத்தில் புலவர்கள் பாடிய பாடல்களைப் பற்றிய சிறிய ஆய்வாகும். தொல்காப்பியம் இதற்கு ‘வெட்சித்திணை’ எனப் பெயரிட்டுள்ளது. வெட்சித் திணைக்குள் ஆநிரை கவர்தல் x மீட்டல் பூசல் நிகழுவதால் கரந்தைத் திணை என்று ஆநிரை மீட்டலுக்கெனத் தனியான திணையை அது வகுக்கவில்லை. இடைக்காலத்தில் தோன்றிய புறப்பொருள் வெண்பாமாலை வெட்சி, கரந்தை எனத் தனித்தனித் துறைகளை வகுத்தது.
சங்ககாலப் புலவர்களும் தொல்காப்பிய இலக்கணமும் இடைக்கால உரையாசிரியர்களும் இப்பொருள் பற்றி என்ன நோக்கம் கொண்டிருந்தாலும், இச்சிறு நூலில் இப்பொருளைத் தொல்லியல் மற்றும் மானிடவியல் நோக்கில் அணுகிச் சில முடிவுகளைக் கண்டடையும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இது முடிந்த முடிவல்ல, வல்லுநர்களால் மேலும் ஆராயத்தக்கது.
தமிழக மலை, காட்டுப் பகுதிகளில் (வறட்சியடைந்த குறிஞ்சி, முல்லை நிலங்கள்) வேடர், எயினர், மழவர்,மறவர் என்ற பெயர் களால் சுட்டப்படும் வேடர்கள் இனக்குழு வாழ்க்கை முறையில் வாழ்ந்து வந்ததைச் சங்க இலக்கியத்தில் காணலாம். இவர்களையும், இவர்களுடைய வாழ்க்கையையும் சங்ககாலப் புலவர்கள் தங்களது சமகாலத்து நிகழ்வாக நோக்கி, வறுமை, கொடுமை, களவு, மறம், முரட்டுப் பண்பு (wild) மற்றும் புலன்சார் வாழ்க்கையாக நன்மைக்கு எதிரான தீமையாக மதிப்பீடு செய்துள்ளார்கள். சில புலவர்கள் இவர்களுடைய குழு வாழ்க்கையின் மனித இணக்கம், விருந்து பேணுதல், குருதி உறவு, பகிர்ந்து உண்ணல், உடல் வலிமை, வீரம், வேந்தர்க்கு அஞ்சாமை, பாணர், இரவலரிடம் பரிவு என்று நேர்மறையாக மதிப்பீடு செய்தார்கள்.
இச்சிறுநூலில் சங்ககாலப் புலவர்கள் வேட்டுவக் குடியைச் சேர்ந்த இனக்குழு மக்களைப் பற்றிக் கொண்டுள்ள மதிப்பீடுகளைப் பற்றி ஆய்வு செய்யவில்லை. மாறாக அம்மக்களைப் பற்றிய பதிவுகளில் காணப்படும் (புலவர் மரபில்) சில சிக்கல்களைப் பற்றியும், புலவர் பதிவுகளுக்கு முன்னோடியாக இருந்திருக்கக்கூடிய எனும் வாய்மொழிக்கிடங்கு பற்றியும், அப்பாணர் மரபின் அடிக்கட்டுமானம் பற்றியும், அதன் தொன்மை பற்றியும் ஆய் செய்வது இந்நூலின் நோக்கமாகும். இதற்குத் தொல்லியல் மற்றும் மானிடவியல் எனும் புலங்கள் சங்ககாலத்திலும், அதற்குச் சி நூற்றாண்டுகளுக்கு முன்பும் தமிழகத்தில் நிலை கொண்டிருந்த ‘பெருங்கற்கால நாகரிகம்’ (Megalithic civilization) பற்றிக் கூறியுள் கருத்துக்களும் கருத்தாக்கங்களும் பெரும் துணைபுரிகின்றன. பாணர்
ஆநிரை கவர்தலும் மீட்டலும் இனக்குழுக்களுக்கு இடையில் வாழ்வு ஆதாரப் இருந்துள்ளன. இது பெருங்கற்கால நாகரிகத்தில் உருவானது. வேளாண் உற்பத்தியும், உற்பத்தி சார்ந்த நிலவுடைமைச் சமூக உறவுகளும், மேலாண்மை பெற்ற பிறகு ஆகோள் பூசலானது ஆட்சியாளர்கள் போரில் கையாளக்கூடிய ஒரு ‘சம்பிரதாயம்’ ‘மரபு’ போல ஆயிற்று. சீவகசிந்தாமணியிலும் பெருங் கதையிலும் இத்தகைய சம்பிரதாயம் பற்றிய வருணனைகள் இடம்பெற்றுள்ளன. இந்நூலில் ஆகோள் பூசலின் தோற்றம் – மாற்றம் வளர்ச்சி குறித்த ஒரு வரலாற்று நோக்கை மேற்கொள்ளவில்லை புலவர் மரபில் பெருங்கற்கால நாகரிகத்தைச் சேர்ந்த ஆகோள் பூச எவ்வாறு அணுகப்பட்டது; அக, புற மரபுகளில் அது எவ்வாறு பதிவு செய்யப்பட்டது ஆகிய சிக்கல்களை ஒட்டிய ஆய்வும், அந்த ஆய்வின் சில முடிவுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
Buy: Whatsapp 9786068908