நாட்டார் வழக்காறுகளைத் தொகுத்து அவற்றில் ஏற்படும் மாற்றங்களைச் சூழலின் பின்னணியில் வைத்துப் புரிந்துகொள்ள வகை செய்வது இந்நூலின் சிறப்பு. இந்நூலினுள் அனுபவம், ஆய்வு, சந்திப்பு என்னும் மூன்று தலைப்புகளிலும் நாட்டார் வழக்காற்றுச் செய்திகளே முனைப்புடன் பதிவாகியுள்ளன. கடந்த 35 ஆண்டுகளாக இத்துறையில் தொடர்ந்து செயலாற்றிவருகிற அ.கா. பெருமாள் பல்வேறு இதழ்களில் எழுதியவற்றின் தொகுப்பு இந்நூல். கதைசொல்லிகளுக்குரிய நடையில் அறியப்படாத செய்திகளைக் கூறுவது இதன் சிறப்பு.