வடசென்னை ஒரு இடம் மட்டுமல்லை, அது ஒரு வரலாறு, அது ஒரு வாழ்க்கை முறை. ஒரு கலாச்சாரக் குறியீடு. வடசென்னையப்பற்றிய மிகை புனைவுகள் அப்பகுதி மக்களை ஒரு நவீன இனக்குழு சமூகமாகவே கட்டமைக்கின்றன. ஆனால் அந்த பிம்பத்திற்கு மாறா வடசென்னையின் அசலான வாழ்வியலையும் அரசியலையும் மனித முகங்களையும் தேடிச் செல்கிறார் ஷாலின் மரிய லாரன்ஸ்.
தலித்தியம் பெண்ணியம் சார்ந்த பார்வைகள் இன்று பெரிதும் கூர்மை பெற்றிருக்கும் சூழலில் பல்வேறு சமகாலத்தின் எரியும் பிரச்சினைகளினூடே ஒரு மாற்று அரசியலை இக்கட்டுரைகள் முன்வைக்கின்றன.