கழுகுமலை வெட்டுவான் கோவில் – செ.மா.கணபதி
கழுகுமலை, வரலாற்றுச் சிறப்புமிக்க பாண்டிநாட்டு ஊராகும். தமிழ்நாட்டுச் சமண சமய மையங்களுள் ஒன்றாகத் திகழ்ந்த பெருமைக்குரியது. இவ்வூரில் அமைந்துள்ள சிற்பங்கள், வரலாற்றுப் புகழ்மிக்கவை. தமிழ்நாட்டு வரலாற்றிலும், தமிழ்நாட்டுச் சமய வரலாற்றிலும், சமண வரலாற்றிலும், கோயில் வரலாற்றிலும், சிற்ப வரலாற்றிலும் இவ்வூர் அழுத்தமான தடம் பதித்துள்ளது என்பதை நூலாசிரியர் நிரல்பட எடுத்துக்காட்டுகிறார்.
அன்று தொட்டு அண்மைக் காலம் வரை ஊர் பெற்றிருந்த வரலாற்றுச் சிறப்புகளை அழகாக ஆவணப்படுத்தியுள்ளார் எழுதியுள்ள வரலாற்றை, கல்வெட்டு, இலக்கியம் முதலான சான்றுகளைக் காட்டி, நிறுவி உள்ளார். தொலைவில் உள்ளவர்களுக்கும், ஊரின் வரைபடம் அப்படியே பதியுமாறு காட்சிப்படுத்தி இருக்கிறார்
பொருளடக்கம்
1. கழுகுமலை : ஓர் அறிமுகம்
2. கழுகுமலையும் தொன்மைச் சிறப்பும்
3. கழுகுமலை ஊரும் பேரும்
4. கழுகுமலை வரலாறு
5. கழுகுமலை வெட்டுவான் கோயில்
6. கோயிற்கலை வரலாறு
7. வெட்டுவான் கோயில் வரலாறு
8. வெட்டுவான் கோயில் அமைப்பு
9. வெட்டுவான் கோயில் கட்டடக்கலை
10. வெட்டுவான் கோயில் சிற்பக்கலை
11. வெட்டுவான் கோயில் கருக்கு வேலைப்பாடுகள்
12. கழுகுமலையும் மாமல்லையும்
13. கழுகுமலையும் எல்லோராவும்
துணை நூற்பட்டியல்