சோழர் அரசும் நீர் உரிமையும் – முனைவர் கி.இரா.சங்கரன்
நீராதாரங்களை மேலாண்மை செய்வதிலும், நீரினைப் பகிர்ந்தளிப் பதிலும் சோழர்கள் பெரிதும் பல்லவர்களின் தொழில்நுட்பத்தினையே பின்பற்றினர், தொடர்ந்தனர் என்பதை இந்நூல் வழி அறியலாம்.
நிலத்தின் மீதான உடைமை இயல்பாகவே நீர் உரிமையினை வழங்கியுள்ளது. அவை: புதிய நீராதாரங்களை உருவாக்கிக் கொள்வது வாய்க்கால்கள் போன்றன); பயன்பாட்டில் உள்ள வாய்க்கால்களை புதுப்பித்து மாற்றியமைப்பது. இதனுடன் தொழில்நுட்ப அமைப்புகளான குமிழி மடைகள் போன்றவற்றையும், ஆற்றிலிருந்து / ஏரிகளிலிருந்து / குளங்களிலிருந்து நீரினை வடித்து தலைவாய்க்கால்/வாய்த்தலை போன்றவற்றை உருவாக்கிக் கொள்ளுதல் போன்றன.
கூடுதலாக, கூடைகளிலும், ஏற்றங்களிலும் நீர் இறைக்கும் உரிமைகள் உட்பட ஏராளமான நீர்நிலைத்தகவல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.