சமணமும்,தொல்காப்பியர் காலமும்:
தொல்காப்பியர் சைன ரென்று உறுதி கூற முடியாமற் போனாலும் அவர் நூல் கொண்டு தமிழ் வழக்கில் சமணக் கொள்கைகள் பரவியதனைத் தெளிவாக அறியலாம்.
சமணர்கள் உணவும் மருந்தும் புகலிடமும் கல்வியும் எல்லோர்க்கும் உதவுதலையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தமையாலும், அவர்களது கடும் துறவின் உண்மை நயத்தாலும் சித்தசேன திவாகரர், விருத்தவாதி முனிவர் என்ற இருவர் வரலாற்றின்படி, தம் சிறந்த கொள்கைகளை அவ்வந்நாட்டு மொழிகளிலேயே விளக்கிக் கூறிப் பொதுமக்களோடு தொடர்பு கொள்ளும் குறிக்கோளாலும் சமண மதம் தமிழ் நாட்டில் பரவியது.