Description
தமிழர்களின் கணித அறிவியல் சிந்தனை குறித்துச் செவ்வியல் தமிழ் இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன. தமிழர்களின் எண்ணல் அளவைகள், நிறுத்தல் அளவைகள், நில அளவைகள், நீட்டல் அளவைகள், முகத்தல் அளவைகள், பெய்தல் அளவைகள், கால அளவைகள், நாணய அளவைகள், தொழில்சார் பண அளவை முறைகள் (குழூஉக்குறி), உடற்கூறு அளவைகள், தொழில்சார் அளவைகள், அளவைக்கருவிகள், அளவைசார் சொற்கள் ஆகியவை இலக்கியங்களிலிருந்தும் கள ஆய்வின் மூலமும் திரட்டப்பெற்று இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. இவ்வளவை முறைகளிலிருந்து தமிழர்களின் அறிவுத்திறனும் அறிவியல் நுட்பமும் புலப்படுகின்றன. தமிழர்களின் அனைத்து வகையான அளவை முறைகளிலும் பயன்படுத்தப்பட்ட அளவைகளை முழுமையாகத் தொகுத்தளிப்பதாகத் ‘தமிழர் அளவை முறைகள்’ என்னும் இந்த நூல் அமைந்துள்ளது.








