Additional information
| Weight | 0.4 kg |
|---|
Explore Heritage Books and Products
For Book Oders
+91 97860 68908
₹350
தோற்றம் அறிய முடியாத பழங்காலத்திலிருந்து வழங்கிவருகின்ற தமிழ் மருத்துவத்தை உருவாக்கியவர்கள் சித்தர்கள் ஆதலால் இது சித்த மருத்துவம் என வழங்கப்படுகிறது. சித்தர்களுள் முதன்மையான சிறப்பிடத்தைப் பெற்றவராகத் திகழும் திருமூலரின் திருமந்திரம் இதுகாறும் கிடைக்கப் பெற்றுள்ள தமிழ் மருத்துவ நூல்களுள் பழமையான நூலாகக் கருதப்படுகிறது. அரிய மானிடப் பிறப்பை எய்திப் பெற்ற உடலைப் பாதுகாப்பது பிறப்பெடுத்த மாந்தரின் கடமை என்பதை உணர்த்தி உடலிலுள்ள உயிர் இறைநிலையை அடைந்து உய்யும் வகையைத் திருமந்திரத்தின் மூலம் அறிந்துகொள்ள இந்நூல் வகைசெய்கிறது. பழந்தமிழரின் மருத்துவத்தை இக்கால மருத்துவத்துடன் ஒப்புநோக்கிச் சீரிய ஆய்வின் முடிபுகளைக் கொண்டு உடம்பினை உறுதிசெய்யத் திருமூலர் காட்டும் வழிகளாக இந்நூலைப் படைத்துள்ளார் இந்நூலாசிரியர். புதிய புதிய நோய்களின் பிடிகளில் தாக்குண்டு அல்லலுறும் உலகம் பழந்தமிழ்ச் சித்த மருத்துவத்தின்வழி நோயற்ற வாழ்வினைப் பெற இந்நூல் உதவியாக இருந்து பயன்தரும்.
Out of stock
| Weight | 0.4 kg |
|---|