மந்திரம்- வழிபாடு – சமயம்
ஆதிகால மக்கள் இயற்கையைக் கட்டுப்படுத்தப் பயன் படுத்திய மந்திரச் செயல்பாடுகளின் உள்ளார்ந்த பொருள் அல்லது கருத்தின் அடிப்படையில் சில வழிபாட்டு முறைகள்அடையாளம் காணப்பட்டுள்ளதை எடுத்துக் காட்டும் ஆய்வாளர் கள், இவையே சமயத்தின் தோற்றுவாய் என்று நிறுவியுள்ளனர்.
சமயத்தின் தோற்றம் குறித்து மிகச் சரியான, ஒருமித்த கருத்துடைய ஒற்றைக் கூற்றினை இதுவரை உருவாக்க இயல வில்லை. சமயம் முதன் முதலில் எவ்வாறு தோன்றியது என்று அறுதியிட்டுக் கூற இயலா நிலையே உள்ளது. எனினும் தொல் லியலார் 70,000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையுடைய வாழிடப் பகுதிகளில் கிடைத்த பொருட்களைக் கொண்டு சில ஊகங்களைத் தர்க்க ரீதியாக மீட்டுருவாக்கியுள்ளனர். இதன் பின்னர் மேற்கு ஐரோப்பாவில் கடை பழங்கற்கால கட்டத் தில் (Upper paleolithic) வாழ்ந்த குரோமாக்னன் வாழிடங்களில் கிடைத்த பொருட்களைக் கொண்டு அம்மக்களின் சமய நம் பிக்கைகளை மீட்டுருவாக்கியுள்ளனர்.