ஆங்கிலேயர்கள் வந்த பின்தான் இந்தியாவில் கல்வி வளர்ச்சி பெற்றது; அறிவியல் அறிவு கிடைத்தது என்பது எந்தளவுக்கு மறைக்கப்பட்ட உண்மை என்பதை விளக்கும் நுால்.
பாரம்பரியக் கல்வியின் வரலாறு எப்படி எல்லாம் திரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பொய்யானது தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தால், காலப்போக்கில் அது உண்மையாகி விடும் என்பதற்கான மிகச் சரியான உதாரணம். அடிப்படைக் கல்வி அடித்தட்டு மக்களுக்குக் கிடைக்கக்கூடாது; அதி உயர்கல்வியானது மேல்தட்டு மக்களுக்கு கிடைக்கக்கூடாது என்பது பிரிட்டிஷாரின் நோக்கமாக இருந்ததை உரைக்கிறது.
இந்திய கல்வி முறையை இளக்காரமாக சொல்லித் திரிபவர்களுக்கு சாட்டையடி தரும் நுால்.