Description
இராசராசன் 29 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்த காலத்தில் பிராமண ஆதிக்கத்தைப் பக்குவமாகத்தான் குறைத்தார். ஒரு பேரரசின் நிர்வாகத்தை ஏற்றிருப்பவர்கள் – எல்லா சமூகங்களையும் அரவணைத்துச் செல்வது கட்டாயக் கடமை அதேவேளை களப்பிரர் பல்லவர் ஆட்சியில் புறந்தள்ளப் பட்ட தமிழர்களையும் தமிழ்மொழியையும் முன்னுக்கு நிறுத்துதல் கட்டாயக் கடமை அதைச் செய்தார். தமிழ்த் திருமுறைகளைத் தொகுத்தார், தேவாரத்தை மீட்டார், தமிழ்ப் பள்ளிகளுக்கு அரசு மானியம் கொடுத்தார், கோயில்களில் தமிழ் வழிபாட்டுக்கு ஏற்பட்டு செய்து ஓதுவார்களை அமர்த்தினார், கிராம நிர்வாகத்தை குடவோலை முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளிடம் ஒப்படைத்தார்.






























