Description
பழந்தமிழர்கள் கிரேக்க, ரோமானியர்களைக் காட்டிலும் நாகரிக வளர்ச்சியில் உயர்ந்து விளங்கினார்கள் என்பதற்கான சான்றை வழங்குவதாக இந்நூல் அமைகின்றது. இன்றைய நாகரிகச் சமூக வாழ்வில் மகிழுந்துகள் சிறப்பிடம்பெறுகின்றமைபோலவே பழங்கால நாகரிக வாழ்வில் ஊர்திகள் சிறப்பிடம்பெற்றன. சமூகச் செல்வாக்கு நிலையில் ஒரு மனிதனது தகுதியை அடையாளப்படுத்துவதில் ஊர்திகள் பெரும்பங்குவகித்தன. அவ்வாறான சங்ககால ஊர்திகளின் பயன்பாட்டையும் செல்வாக்கையும் விளக்குவதாக இந்நூல் அமைகின்றது. உப்பும் மீன்களும் பழந்தமிழர்களின் உணவுப் பண்பாட்டிலும் வாணிகப் பயன்பாட்டிலும் சிறப்பிடம்பெற்றிருந்தன. திணைசார் வாழ்வியலில் உப்பு வாணிகம் உமணர் எனும் தொல்குடிகளால் எவ்வகையில் மேற்கொள்ளப்பட்டது என்ற செய்தியும் நெய்தல் நில வாழ்வியலில் மீன் வாணிகமும் உணவு முறைகளும் எவ்வகையில் பண்பாட்டுக் கட்டமைவில் சிறந்து விளங்கின என்பது குறித்தும் இந்நூல் ஆராய்கின்றது.







