அய்யாயிரம் ஆண்டுத் தமிழகம் பண்பாட்டு மானிடவியல் பார்வை

380

Add to Wishlist
Add to Wishlist

Description

புதிய வெளியீடு: அய்யாயிரம் ஆண்டுத் தமிழகம் (பண்பாட்டு மானிடவியல் பார்வை)

நூலாசிரியர்: பக்தவத்சல பாரதி

பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் தொன்மை, தொடர்ச்சி மற்றும் கால மாற்றங்களை நவீன ஆய்வு முறைகளின் வெளிச்சத்தில் சுவைபடக் காட்சிப்படுத்தும் வரலாற்றுப் பெட்டகமே ‘அய்யாயிரம் ஆண்டுத் தமிழகம்’.

தாமிரபரணி நதிக்கரை தொடங்கி சிந்துவெளி வரையிலும், சங்க இலக்கியத் தடங்கள் முதல் மட்டக்களப்புத் தமிழகம் வரையிலும் விரியும் தமிழர் வரலாறு, உலக நாகரிக அரங்கில் எத்தகைய உன்னத இடத்தைப் பிடிக்கிறது என்பதை இந்நூல் ஆணித்தரமாக வலியுறுத்துகிறது. இரும்புக்காலத் தொழில்நுட்பம், கருப்பு-சிவப்பு மட்பாண்டங்களின் பரவல், பெண் பூசாரியம், சங்க காலச் சடங்குகள் மற்றும் புண்ணிய நிலங்கள் எனப் பல தளங்களை மானிடவியல் நோக்கில் இந்நூல் உயிர்ப்புடன் பேசுகிறது.

மானிடவியல் துறையில் நாற்பது ஆண்டுகளாகப் பெரும் பங்களிப்புச் செய்துவரும் பக்தவத்சல பாரதி, பத்து ஆழமான ஆய்வுக் கட்டுரைகளின் வழியே தமிழ் மரபின் விடுபட்ட வேர்களையும், மறைந்த கிளைகளையும் மீட்டெடுத்து வாசகர்களின் பார்வைக்குக் கொண்டுவந்துள்ளார். பண்டைத் தமிழரின் சிந்தனை மரபை, இன்றைய புதிய தலைமுறையோடு உரையாட வைக்கும் இந்நூல், தமிழின் தொன்மையை உணர விரும்பும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அவசியமான ஆவணமாகும்.

நூல் விவரங்கள்:

  • பக்கங்கள்: 304 (டெமி அளவு)

Additional information

Weight 0.250 kg