சோமநாதர் ஆலயத்தின் மீது கஜினி முகமது நடத்திய தாக்குதலின் தொடர் விளைவுகளாக நிகழ்ந்த சம்பவங்களைப் பற்றியது இந்த ஆய்வு, வரலாறு எழுதியலில் என்னுடைய ஆர்வத்தின் விளைவாக தொடக்க நிலையில் வளர்ந்து எழுந்த ஓர் ஆய்வு இது. ஒரு கருத்தரங்கில், சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் சமர்ப்பித்த ஓர் ஆய்வுக் கட்டுரையாகத்தான் இது முதலில் தொடங்கியது.
அந்தச் சமயத்தில், என் ஆய்வை நான் பதினைந்தாம் நூற்றாண்டுடன் நிறுத்தி விட்டிருந்தேன். சமஸ்கிருத சாசனங்களுடன் பாரசீக, சமண மூல ஆதாரங்களை நெருக்கமாகப் பொருத்திப் பார்த்து ஆராய்ந்திருந்தேன் அந்த ஆய்வுக் கட்டுரையை கருத்தரங்கில் முன்வைத்தபோது பெறப்பட்ட எதிர்வினைகள், அந்த விவரிப்பைத் தற்காலம் வரை தொடர்ந்து வளர்த்தெடுத்துக் கொண்டுவர வேண்டியதன் பொருத்தப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டின. அது, பிறகு ஓர் உரையாக வடிவமெடுத்தது. “கதையாடல்களும் வரலாற்றை உருவாக்குதலும்” என்ற புத்தகத்தில் அது வெளியிடப்பட்டது. அதுவே மேலும் விரிவாக்கம் பெற்று, தொடக்கத்தில் ‘காலங்களுக்கான குறுநூல்கள்’ வரிசையில் பதிப்பிக்கப் படுவதற்கென்று கருதப்பட்டது. ஆனால், ஆலிஸ் நுழைந்து விட்ட அதிசய உலகைப் போல், அது வளர்ந்து வளர்ந்து பெரிதாகிக் கொண்டே போனது.
அந்த வளர்ச்சிப் போக்கில், ஒரு குறுநூல் என்ற வடிவத்திலிருந்து முழுமையான ஓர் ஆய்வுநூல் என்ற வடிவத்திற்கு அது மாறியிருந்தது. இந்தக் கருப்பொருளின் தன்மையைக் கொண்டு பார்த்தால், இது இன்னும் விரிவான சான்றாதார விவரிப்பையும் அத்தியாவசியமாகக் கோரி நிற்கிறது.
சூழல் :
கஜினி முகமது, சோமநாதர் ஆலயத்தின் மீது 1026 ஆம் ஆண்டில் படையெடுத்தான் கோயிலின் செல்வத்தைக் கொள்ளையிட்டு விக்கிரகத்தை உடைத்தான் கொள்ளையடித்தவர்கள், கொள்ளையடிக்கப் பட்டவர்கள் ஆகிய இரு சாராரின் அணுகுமுறைகளையும் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தும் விதத்தைக் குறிப்பதாகவும், அந்தக் கணத்திலிருந்தே பரஸ்பரம் ஒருவர் மீது மற்றவரிடம் பகைமை யுணர்வைத் தூண்டுவதாகவும் இந்த நிகழ்வு அமைந்திருந்தது என்பதே இதிலிருந்து பெறப்படும் கருத்து.
இந்த நிகழ்வின் மகிழ்ச்சியற்ற தொடர் பின் விளைவுகளை ஆராயவேண்டும் என நான் தீர்மானித்தேன் இந்த நிகழ்வு எதையேனும் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்துகிறது எனும் பட்சத்தில், அப்படி எதை இது தெளிவுபடுத்துகிறது, இந்த நிகழ்வு எந்த வகையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நிகழ்வின் உள்ளடக்கம் குறித்த புரிதல் ஒரு வேளை மாற்றப்பட்டிருக்கிறதா என்பதையெல்லாம் அவ்வாறு ஆராய்வதன் மூலம் இனங்கண்டுகொள்ள அவற்றின் அடிச்சுவடுகளைத் தொடர முடிவு செய்தேன். இதையும், பிற நிகழ்வுகளையும் பதிவு செய்து சித்தரிப்பதன் மூலம், மேற்கண்ட வரலாறு எழுதியலும் இந்த நிகழ்வின் ஞாபகங்களாகக் கருதப்படுபவை எவையோ அவற்றின் பிற்காலக் கட்டமைப்பும் கூட எனது ஆர்வத்திற்குரியவைகளே.
இந்த ஆய்வின் நோக்கம் இது: ஒரு நிகழ்விற்கும், அதைச் சூழ்ந்து வளர்ந்தெழும் வரலாறெழுதியலுக்கும் இடையில் ஊடுபாவாக இழையோடும் உறவைத் துருவி விசாரிப்பது, இந்த விசாரணையை அந்நிகழ்வைப் பற்றிய விவரிப்புகளை ஒரு வரலாற்றுச் சூழலில் வைப்பதன் மூலம் மேற்கொள்வது ஒரு நிகழ்வு நடைபெறுகிறது: என்ன நடந்தது என்பதைப் பற்றிய விவரிப்புகளுடன் அது மெதுவாக ஒரு கடினமான மேலோட்டினால் மூடப்படுவதற்கு ஆளாகிறது. சில சமயங்களில், இத்தகைய விவரிப்புகள் தொடக்கநிலை ஞாபகங்களின் அடிப்படையின் மீது கட்டியெழுப்பப்பட்ட எனக் கூறப்படுவதுஉண்டு.
அல்லது ஒரு காலத்தில் ஞாபகமாக நிலைத்திருந்ததை அப்படியே ஓர் உறையினுள் இட்டு வைத்திருந்து விவரிப்பவையாக இருக்கலாம்; அல்லது ஞாபகத்தின் பல பக்கங்களாக நம்பப்பட்டு வருகிறவற்றைப் பிரதிபலிப்பதாக வரலாறெழுதியல் அமைந்திருக்கும்.
(நூலிலிருந்து)
சோமநாதர் வரலாற்றின் பல குரல்கள் – ரொமிலா தாப்பர்
விலை: 300/-
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Buy this book online: https://www.heritager.in/product/somanathar-varalatrin-pala-kuralkal/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers