வேண்டும் கங்கை – இராஜேந்திரச் சோழன் சிறுகதை போட்டி #7

அபிஷேகமில்லை. ஆராதனையில்லை. தீபங்களுமில்லை. சிவாச்சாரியார்களும் இல்லை. மந்திரங்கள் ஓதுவாருமில்லை. அஷ்டாதச வாத்தியங்கள் இசைப்பாருமில்லை. ஏறத்தாழ மக்களால் கைவிடப்பட்டுவிட்டது போன்று காட்சியளித்தது அந்தச் சிவாலயம். சருக்கென்று எழுந்தமர்ந்தார் அவர். கனவில் கண்ட அந்தக் காட்சி அவரது நித்திரையைத் தடைசெய்திருந்தது. எப்போதும் மலர்ச்சியுடன் திகழும் அவரது கம்பீரம் கமழும் வதனத்தில் கவலை எனும் திரை படர்ந்திருந்தது. “என்ன இது…