பாண்டியநாட்டு பெயர்கள்
பெயர்கள் : பாண்டியநாட்டில் இந்நாடுகளைக் குறிக்க நாடு என்ற பெயரோடு கூற்றம், வளநாடு. முட்டம், இருக்கை,ஊர்க்கீழ், குளக்கீழ், ஆற்றுப்போக்கு, ஆற்றுப்புறம் என்று பல்வேறு பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை இடத்திற்கும், சூழ்நிலைக்கும், காலத்திற்கும் ஏற்ற முறையில் இடப்பெற்ற பெயர்கள் ஆகும். இவற்றில் முட்டம், இருக்கை என்ற பெயர்கள் பாண்டியநாட்டில் மட்டும் நாடுகளுக்கு வழங்கப்பட்ட பெயர்களாகும். தமிழ்நாட்டின் பிறபகுதிகளில்…