இந்தியாவின் பன்முகத்தன்மையையும் பரிமாணங்களையும் மகாபாரதத்தைப் போலப் பிரதிபலிக்கும் இன்னொரு பிரதியைப் பார்க்க முடியாது. செழுமையான கதை மரபும் இலக்கிய மரபும் கொண்ட தமிழ்ப் பண்பாட்டிலும் பாரதக் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. நாட்டார் கதைகளிலும் பழமொழிகளிலும் கதைப்பாடல்களிலும் இவற்றைக் காண முடிகிறது. அத்தகைய கதைகளில் சிலவற்றை மீள்பதிவு செய்வதே இந்நூலின் நோக்கம். மகாபாரதப் பாத்திரங்களைத் தமது கதையாடல்களுக்கேற்ப உருமாற்றும் இந்தப் பிரதிகள் வித்தியாசமான வாசிப்பனுபவத்தைத் தருகின்றன. வியாச பாரதத்தில் காணப்படும் சில நிகழ்வுகளின் மாறுபட்ட பிரதிபலிப்பாக வெளிப்படுத்தியும் கட்டுடைப்புச் செய்து உருமாற்றியும் காவிய மாந்தர்களை எதிர்கொள்கின்றன. நாட்டார் வழக்காற்றியல் துறையில் குறிப்பிடத்தக்க ஆய்வாளர்களில் ஒருவரான அ.கா. பெருமாளின் கள ஆய்வுகளும் வாசிப்பனுபவமும் இந்நூலின் ஆதார வலுவாக விளங்குகின்றன.
அர்ச்சுனனின் தமிழ்க் காதலிகள்
₹250
Extra Features
- புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
- தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
- Worldwide Shipping
- புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
Weight | 0.4 kg |
---|