இந்திய ஓவியம்: ஓர் அறிமுகம் – அரவக்கோன்

250

Add to Wishlist
Add to Wishlist

Description

இந்திய ஓவியக் கலையை முறைப்படி தமிழில் அறிமுகம் செய்யும் முக்கியமான முயற்சி இந்நூல். பழங்குடி ஓவியங்கள், கிராமிய ஓவியங்கள், காஷ்மிர் ஓவியங்கள், ராஜஸ்தான் ஓவியங்கள், தஞ்சாவூர் ஓவியங்கள், நேபாள ஓவியங்கள், சிற்றோவியங்கள் என்று தொடங்கி இந்திய ஓவிய வரலாற்றில் இடம்பெறும் பல முக்கிய ஓவியப் பாணிகள் இந்நூலில் எளிமையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அழகியலை விவரிப்பது மட்டுமல்ல இந்தப் புத்தகத்தின் நோக்கம். குறிப்பிட்ட ஓவியப் பாணி எப்போது, ஏன் அறிமுகமானது? அதன் வரலாற்றுப் பின்னணி என்ன? ஓவியங்களை எப்படி அணுகவேண்டும்? அவற்றிலுள்ள செய்திகளை எப்படி உள்வாங்கிக்கொள்ளவேண்டும்? நம் கடந்த கால வரலாற்றைப் புரிந்துகொள்ள ஓவியங்கள் பயன்படுமா? இப்படி நூல் நெடுகிலும் விவாதங்களும் விளக்கங்களும் பரவிக்கிடக்கின்றன. கலை, இலக்கியம், வரலாறு, சமூகவியல் ஆகிய துறைகளில் ஆர்வமுள்ள ஒவ்வொருவரும் வாசிக்கவேண்டிய அவசியமான புத்தகம்

Additional information

Weight0.25 kg