Additional information
Weight | 0.5 kg |
---|
Explore Heritage Books and Products
For Sales & Bookings
+91 97860 68908
₹500
பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே தமிழ் உயர்தனிச் செம்மொழியென்று இந்தியாவை ஆண்டுவந்த ஆங்கிலேய ஆட்சியாளரும், கல்வித்துறை அதிகாரிகளும் அறிந்துகொள்ள வேண்டுமென்றும், இது தமிழறிஞர்களால் உலகறியச் சொல்லப்பட வேண்டுமென்றும் அறைகூவியவர் பரிதிமாற் கலைஞர். அவருக்கு முன்னமேயே ஆங்கிலேயப் பன்மொழி அறிஞராகிய எல்லீசர் இந்திய அரசுப் பணிக்காக வந்த ஆங்கிலேய இளைஞர்களுக்குத் தமிழை இன்றைய மொழிகளில் ஒன்றாக மட்டுமின்றிச் செம்மொழிகளில் ஒன்றாகவும் அவர்களுக்கான பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தி வந்தார்.
பேராசிரியராகவும், திறனாய்வாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும், கவிஞராகவும், சொற்பொழிவாளராகவும், இதழியலாளராகவும், மொழியியல் வல்லுநராகவும், நிறுவன அமைப்பாளராகவும் இவற்றிற்கெல்லாம் மேலாக மொழிப்போர் போர் மறவராகவும் வாழ்ந்து, தமிழ் மொழி வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட அறிஞர் இலக்குவனார், உலகம் போற்றிய ஒப்பிலக்கிய விற்பன்னர், சங்க இலக்கியக் கல்வியாளர், தொல்காப்பிய, திருக்குறள் ஆய்வாளர், ஆய்விதழ்களின் ஆசியர், தரமான தமிழியல் கட்டுரைகளின் தொகுப்பாசிரியர், புலம்பெயர்ந்த தமிழர்களின் உயிர்த் தோழர், தமிழினப் போராளி, தமிழாய்வு மன்றங்களின் நிறுவனர், தனித்தமிழ் ஆர்வளர் எனும் பன்முக ஆளுமைத் திறன் கொண்டு வாழ்ந்த தனிநாயக அடிகளார் உள்ளிட்ட அறிஞர்களின் தமிழ்ப் பணிகள் இந்நூலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
தமிழ்மொழியே முதல் மாந்தன் பேசிய மொழியென்றும், தமிழ் இனமே முதலில் தோன்றிய மாந்த இனமென்றும் குமரிக் கண்டமே மாந்தர் முதலில் வாழ்ந்த நிலப்பரப்பு என்றும் தமிழ்மொழி, இலக்கியம், பண்பாட்டிற்கு வடமொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவை பெரிதும் கடன்பட்டிருக்கின்றன என்றும் தக்க சான்றுகளுடன் நாளும் முழங்கி வந்த தேவநேயப் பாவாணரின் பல்வேறு தமிழ்ப் பணிகளை இந்நூலின் மூலமாக அறிந்துகொள்ளலாம். இவ்வாறு தமிழ், செம்மொழியேயென்று முதற்குரல் கொடுத்த மூதறிஞர்கள் பதினைவர் பங்களிப்புப் பற்றி இந்நூல் பேசுகிறது.
Out of stock
Weight | 0.5 kg |
---|