குமரி மாவட்ட இசுலாமியர் நம்பிக்கைகளும் தர்காக்களும்- முனைவர் பிறீடா மேபல் ராணி

55

Guaranteed Safe Checkout
Extra Features
  • Book will be shipped in 3 - 7 days.
  • Secure Payments
  • To order over phone call 978606 8908
  • Worldwide Shipping
  • If the book is out of stock, you will be refunded.

இசுலாமியர் என்னும் சொல் இசுலாம் மதத்தைத் தழுவிய மக்களைக் குறிப்பிடுகிறது. இந்தியத் துணைக்கண்டம் முழுமையிலும் இசுலாமியர்கள் பரவலாக வாழ்கின்றனர். சமயம் ஒன்றாக இருப்பினும், இசுலாமியர்கள் இந்தியத் துணைக்கண்டத்து ஏனைய மக்களைப் போலவே பல்வேறு மொழி பேசுபவர்களாகவும், பல்வேறு பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டவர்களாகவும் அமைகின்றனர். சமயம், அனைத்து மொழி பேசும் இசுலாமியர்களுக்கிடையே ஓர் ஒற்றுமையைத் தோற்றுவித்தாலும் இசுலாமியர்களுக்குள்ளேயும் வேறுபட்ட இனக்குழு அடிப்படையிலான பண்பாட்டு வேறுபாடுகளையும் இனங்காண முடியும்.

கன்னியாகுமரி மாவட்டம் இந்தியாவின் தென்கோடி மாவட்டம். இந்தியத் துணைக்கண்டத்துப் பெரும் சமயங்கள் அனைத்தையும் இம்மாவட்டத்தில் இனங்காண முடியும். சமண சமயம் இன்று இல்லாவிடினும், இம்மாவட்டத்தில் வளமான பழைமையைக் கொண்டிருந்தது. இப்பழைமையை வரலாறு உணர்த்தத் தவறவில்லை. சமகால வாழ்வில் அதன் எச்சங்களையும் இம்மக்கள் வாழ்வில் இனங்காண முடியும்.

பெரும் சமயங்களைப் போலவே சிறுதெய்வ வழிபாடும் இம்மாவட்டத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இசுலாம், கிறித்தவம் போன்ற சமயங்களைப் பிற்காலச் சமயங்களாகக் குறிப்பிட வேண்டும். இச்சமயத்தைச் சார்ந்த மக்கள் பெரும்பான்மையினரும், புதிய மதத்திற்குப் பழம் சமயம் ஒன்றிலிருந்து மதமாற்றம் மூலம் வந்தடைந்தவர்களாகவே அமைவர். இந்தியத் துணைக்கண்டத்து ஏனைய மக்களைப் போலவே இம்மாவட்டத்து மக்களும் பல்வேறு இனக் குழுக்களைச் சார்ந்தவர்களாகவே அமைகின்றனர். இவர்கள் பண்பாட்டைக் காலம் காலமாகத் தொடர்ந்துவரும் இனக்குழு மரபுகள் தீர்மானிக்கின்றன. இனக்குழுக்களைப் போலவே, சமயங்களும்

Weight0.25 kg