காலந்தோறும் வளர்ந்து வரும் சங்க இலக்கிய ஆய்வுகளில், திணை பற்றிய ஆய்வுகள் தனித்தன்மைகளைப் பெற்றவை. இவ்வாய்வுகளில் பெண்கள் பற்றிய ஆய்வுகள் கட்டுரை வடிவிலேயே வந்துள்ளன. இந்நூல் மூலமாக நெய்தல் நிலப் பரதவ மகளிரின் வாழ்வியலை முனைவர் சா. வனிதா அவர்கள் விரிவாக, ஆராய்ந்துள்ளமை பாராட்டுதலுக்குரியது.
இந்நூலின் முதற்பகுதியில் பண்டைக் கடற்கரையின் தோற்றம்,நெய்தல் நில மரம் செடிகொடிகள், கடல்வாழ் உயிரினங்கள், பரதவ மக்களின் வாழ்வாதாரம் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. பரதவக் குடும்ப அமைப்பு, கணவன் ஒழுக்கம் தவறிப் பரத்தையர் இல்லத்தில் தங்கிட, குடும்பப் பொறுப்புக்களைத் தாமே ஏற்று நடத்தியுள்ள பண்பாட்டு செய்திகளைப் படிக்கும் பொழுது அம்மகளிர் பற்றிய உயர்வான எண்ணங்கள் தெரியவருகின்றன.
நாவல்
வெண்மணல் கடற்கரையில் ஒரு சில இடங்களில் நாவல் மரங்கள் வளர்ந்திருக்கும். இதனை நெய்தல் பாடல் கீழ்வருமாறு விளக்குகிறது.
பொங்கியெழும் அலைமோதிய வெண்மணல் கரையில் நாவல் மரம் வளர்ந்திருந்தது. அதன் கனிகளை நண்டுகள் திண்ணும், வண்டுகள் மொய்க்கும் என விளக்குகிறது.
பொங்குதிரை பொருத வார்மணல் அடைகரைப் புன்கால் நாவல் பொதிப் புற இருங்கனி