சங்க இலக்கியங்கள் என நாம் இன்று அடையாளப்படுத்தும் எட்டுத் தொகை நூல்களும் பத்துப்பாட்டும் நீண்ட கால எல்லையில் பாடப் பட்டவை. இப்பாடல்கள் தமிழ்ச் சமூகத்தின் பல கட்டங்களின் படிநிலை வளர்ச்சிகளைத் தன்னகத்தே ஆவணப்படுத்தி உள்ளன… தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு அசைவியக்கங்களையும் இந்நூல்கள் பதிவு செய்துள்ளன.
மிகப் பழமையான காலத்தில் பதிவான இவ்இலக்கியங்களை அப்படியே அச்சுப் பிசகாமல் ஏற்றுக்கொள்ளாமல், அவற்றின் நிறைகுறைகளை இவ்வாய்வு நூல் இன்று வளர்ந்துள்ள அறிவுப் பாய்ச்சலின் கண் கொண்டு நிறுவ முயல்கிறது.