Description
ஆயிரமாயிரம் ஆண்டுகளாகக் கட்டமைக்கப் பெற்றுச் சிறந்து விளங்கும் செம்மொழித் தமிழின் இலக்கண வளத்தையும் இலக்கிய நயத்தையும் உரையாசிரியர்களின் உரைகள், உரை மேற்கோள்கள் வழியேதான் நாம் நூற்றாண்டுகளைக் கடந்தும் கற்றுணர்ந்தும் உய்த்துணர்ந்தும் மகிழமுடிகிறது. அத்தகைய உரையாசிரியரின் உரை மேற்கோள்களின் வழி, சில நூல்களும் பாடல்களும் நமக்குக் கிடைத்திருக்கின்றன. இவ்வாறு தம் மேற்கோள்கள் மூலம் பல வளங்களைத தமிழுக்குக் கொடையாக நல்கிச் சென்றிருக்கின்றனர் உரையாசிரியன்மார். செவ்வியல் தமிழ் ஆய்வுக்குக் களங்கள் பலவற்றை உருவாக்கித் தரும் முகமாக ஜெ. அரங்கராஜ் அவர்களின் ‘;செம்மொழித் தமிழ் இலக்கிய இலக்கண மேற்கோள் அடைவு’ என்ற இப்பெருநூல் வெளிவருகிறது.








