Additional information
| Weight | 1 kg |
|---|
Explore Heritage Books and Products
For Book Oders
+91 97860 68908
₹1,000
இயற்கை தொடர்பான செய்திகள், இயற்கைக்கு அப்பாற்பட்ட உயிர்கள், இயற்கையிகந்த நிகழ்ச்சிகளின் தொகுப்பாகக் காலந்தோறும் மக்களிடையே வழங்கிவந்த பழங்கதைகளைத் தொன்மம் என்கின்றனர். இத்தொன்மங்கள் மக்களிடையே வழிவழியாகப் பேசுபொருளாக விளங்கிப் பின்னர் இலக்கியங்களிலும் இடம்பெற்றன. அவற்றைக் கண்ணுள்வினைஞர் தம் கலைவன்மையால் நுண்மையான வேலைப்பாடுகளமைந்த காட்சிப் பொருள்களாகச் ஓவியங்களாகவும் சிற்பங்களாகவும் பலவகையான கட்டுமானங்களில் படைத்துள்ளனர். செம்மொழித் தமிழ் இலக்கியங்களில் சுட்டப்பெறும் தொன்மக் கதைக் கருத்துகளிற் சில, நமது தென்னாட்டின் தலைசிறந்த கலைஞர்களால் காட்சிப் படிமங்களாகச்-சிற்பங்களாகப் படைக்கப்பட்டு இன்றும் அழியாது நமக்கு இன்பத்தை நல்கிக் கொண்டிருக்கின்றன. அத்தகைய தொன்மக் கூற்றுகளைச் செம்மொழித் தமிழ் நூல்கள் எடுத்தாண்டுள்ள வகையையும் அவற்றின் கலை வடிவங்களாகக் காட்சியளிப்பனவற்றையும் தொகுத்து இந்நூல் கலை வரலாற்று நூலாக ஆக்கப்பட்டுள்ளது.
| Weight | 1 kg |
|---|