தமிழகத்தில் ஆசீவகர்கள் – ர. விஜயலட்சுமி

220

Add to Wishlist
Add to Wishlist

Description

தென்னாட்டில் கண்டறியப்பட்ட கல்வெட்டுகள், செப்பேடுகள், வரலாற்றுத் தடயங்கள், இலக்கியக் குறிப்புகள் உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் முனைவர் ர. விஜயலட்சுமி இந்நூலை எழுதியிருக்கிறார். தமிழ் மொழியில், இலக்கியத்தில், இலக்கணத்தில், வட்டார வழக்கில், தத்துவ விளக்கங்களில், பழமொழிகளில், சமய இலக்கியங்களில், நீதிநூல்களில் பொதிந்து கிடக்கும் ஆசீவகத்தின் கருத்துகளை ஆசிரியர் நமக்குத் தேடி அளித்திருப்பது தமிழ் மொழிக்கு அவர் செய்திருக்கும் ஓர் அரிய பங்களிப்பாகும். தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடுடைய அனைவரும் படித்துப் பயனடையவேண்டிய நூல்.

– முனைவர் சுதர்சன் பத்மனாபன் இணைப் பேராசிரியர், இந்திய தொழில்நுட்பக் கழகம்

ஆசீவகர்களைப் பற்றி தமிழில் வெளிவரும் முதல் நூல் இது. உலக வரலாற்றில், கி.மு. ஆறாம் நூற்றாண்டு தத்துவ எழுச்சிக் காலமாக விளங்குகிறது. ஆசீவகமும் சமணமும் பௌத்தமும் அரும்பியது அப்போதுதான். பிராகிருத மொழிகளிலும் தமிழிலும் காணப்படும் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டும், வடமொழி நூல்களின் குறிப்புகளைத் தேவையான இடங்களில் துணையாகக் கொண்டும் இந்த ஆய்வுநூல் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ் மொழி வளம் பெறும் என்று நம்புகிறேன்.

– பேராசிரியர் க.த. திருநாவுக்கரசு

Additional information

Weight0.25 kg