இறைவனுக்கு அடியவர்களாக இருந்து தொண்டு செய்து கலையைப் பேணி வளர்த்தவர்கள் தேவரடியார்கள். எண்னென் கலையையும் கற்று, கலையோடு வாழ்ந்து வந்த இவர்களின் மரபு சமூகத்தினரால் கேலிக்கு உள்ளாக்கப்பட்டு இழிவாகப் பேசப்பட்டது, பார்க்கப்பட்டது. இதனைத் தவிர்த்து இவர்களின் பன்முகத்தினைப் பரிசீலிப்பது அவசியமாகின்றது பரத்தையருள் ஒரு வகையினராகக் காட்டப்படும் காமக்கிழத்தி, பொதுமகளாக விளங்காமல், ஒருவருக்கு உரிமை பூண்டு விளங்கினர். இக்காமக் கிழத்திக்கும் தலைவிக்கு இருக்கக்கூடிய அனைத்து கடமைகளும், உரிமைகளும் இருக்கின்றன. சங்க இலக்கியத்தின் பரத்தை நடனமாடித் தலைவனை மகிழ்விக்கின்றாள் என்ற சேய்தி கிடைக்கின்றது. துனங்கைக் கூத்து பரத்தையரால் ஆடப்பட்டதையும் அறியமுடிகின்றது.
1. ஆய்வு அறிமுகம்
2. பழந்தமிழ் இலக்கியங்களில் பரத்தமை ஒழுக்கமும் ஆடல்கதையும்
3. தேவரடியார் மரபும் தடைச் சட்டமும் திருமதி. முத்துலட்சுமி ரெட்டியின் பங்களிப்பும்
4. நடனக்கலை மீட்டுருவாக்கமும் மேனிலையாக்கமும்
5. நடனநிகழ்த்து முறையும் நடனக் கலைஞர்களும்
6. இன்றைய தமிழகத்தில் தேவரடியார் வாழ்வியல்