Description
தமிழ் மொழியின் கருவூலப்பெட்டகமாய் விளங்கிய வட்டார வழக்குச் சொற்களும் சமூக வழக்குச் சொற்களும் தொழில் வழக்குச் சொற்களும் மறைந்து அழியும் நிலையில் இருப்பதால் அத்தகைய சொற்களைச் சேகரித்து அவற்றைப் பேணிப் பாதுகாக்கவேண்டிய சூழல் தற்சமயம் உருவாகியுள்ளது. இத்தகைய சொற்கள் தமிழ் மக்களின் பண்பாட்டுக் கூறுகளையும், வரலாற்றுச் செய்திகளையும், சமயச்சடங்கு முறைகளையும், சமூகச்சடங்கு முறைகளையும், நம்பிக்கைகளையும், தொழில் நுணுக்கங்களையும் விளக்கி நிற்கின்றன. ஆகையால், அவற்றையெல்லாம் ஒன்று திரட்டித் தமிழ்மொழியின் செழுமையையும் வளமையையும் உலகிற்கு எடுத்தியம்புவது இன்றியமையாததாகும். அவ்வகையில் தமிழர்களின் பாரம்பரிய நெல் வகைகள் இவ்வகராதியில் தொகுக்கப்பட்டுள்ளன.








