தமிழ்க் கல்வெட்டுப் பாடல்கள் – புலவர் செ. இராசு

200

Out of stock

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

தமிழகத்தில் பொதுவாக உரைநடையில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளே மிகுதி. இந்நூலாசிரியர், அரிதின் முயன்று தேடித் தொகுத்த கல்வெட்டுப் பாடல்களோடு, முன்னமே கண்டெடுத்து வெளியிடப் பெற்ற பாடல் கல்வெட்டுகளையும், ஒரு சேரத் தொகுத்துள்ளார். நாட்டு வரலாறு  எழுதுவோர் கல்வெட்டுப் பாடல்கள் தரும் செய்திகளை, தாம் எழுதும் நூல்களில் சேர்க்காதது பெரும் குறையே என்ற ஆதங்கத்தை, முன்னுரையில்  வெளிப்படுத்தியிருப்பது எண்ணிப் பார்க்கத்தக்கது.

பாடல் கல்வெட்டுகள் பெரும்பான்மை அறச்செயல்களுக்கே முதலிடம்  தந்துள்ளன. தமிழைப் பல்வேறு அடைமொழிகளில் கூறப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டும் ஆசிரியர்,  கல்வெட்டுகளில் வடமொழிப் பகுதியும் இடம் பெற்றிருப்பதை எடுத்துக்காட்டுகிறார். (குறிப்பாகத் திருவண்ணாமலைக் கோவிலில்  உள்ள எல்லப்ப நயினார் பற்றிய கல்வெட்டு) வரலாற்றுச் செய்திகள் மட்டும்  அல்லாமல், சிலரது வாழ்க்கைச் செய்திகளும் பாடல் கல்வெட்டில் இடம் பெறுவது உண்டு. வேதநாயக சாஸ்திரியார் கல்லறையில் அமைந்துள்ள பாடல் அப்படிப்பட்டது.

பழமங்கலம் நடுகல் பாடல் கல்வெட்டைப் பற்றிக் குறிப்பிடுகையில், தென்னகத்தில் காணப்பெறும் நடுகற்களில், இது ஒன்றே பாடல் வடிவில் அமைந்தது என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். தில்லைக்கோவிலில் பொன் வேய்ந்தது, மன்னன் மகளை மணந்தமை, எடைக்கு எடை பொன் தானம் அளித்தமை, குளம் அமைத்தமை, கோவில் சுற்றுச்சுவர் மற்றும் மதில் அமைத்தமை, செய்த அறத்தைப் பாதுகாக்க வற்புறுத்தப்பட்டமை, நந்தா விளக்களித்தல், கோவில் திருப்பணி, நிலக்கொடை முதலிய செய்திகளைத் தெரிவித்திருப்பதைப் பெரும்பாலான பாடல் கல்வெட்டுகளில் காணலாம்.
சென்னையில், ௧8௧8ல் பஞ்சம் வந்தபோது, எல்லீசு துரை, ராயப்பேட்டையில் கிணறு வெட்டிய செய்தி, பாடலாக அவர் எழுதிய பாடல் கல்வெட்டும், உணவில் கலக்கப்பட்ட நஞ்சால், அவர் உயிரிழந்த செய்தியும், ஒரு பாடல் கல்வெட்டால் அறியப்படும் தகவல், இந்நூலில், பதிவாக இருப்பது எண்ணுதற்குரியது (பக்.57–58).

இந்நூலாசிரியர் கல்வெட்டுத் துறையில் மிகுந்த ஈடுபாடுடையவர் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், இந்நூல் அமைந்துள்ளது. வரலாற்றுணர்வுடையோர் போற்ற வேண்டிய நூலாகத் திகழ்கிறது.
 ராம. குருநாதன்