Additional information
| Weight | 1 kg |
|---|
Explore Heritage Books and Products
For Book Oders
+91 97860 68908
₹1,000
உலகக் கலை மரபுகளில் இலக்கணம் கொண்ட ஒரே கலை மரபு தமிழகக் கலை மரபு. கல் திட்டை, கற் பதுக்கை, கற்குவை, குத்துக் கல் அல்லது நெடுங்கல், குடைக் கல் எனத் தொடங்கி, பாறை ஓவியங்கள், குடைவரைக் கற்பொறிப்புகள் எனவும் பின்னர் மாட மாளிகை, கூட கோபுரங்கள், அகழி, கோட்டை, அகனெடுந் தெரு, வியன் நகர், கோயில், கல்வெட்டு, செப்பேடு என ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அறிவு வளர்ச்சியின் வெளிப்பாடுகளை எதிரொளித்துக் கொண்டிருக்கும் கலை வடிவங்களைத் தமிழும் தமிழரும் புழங்கிய இடங்களில் இன்றைக்கும் காணமுடிகிறது. கலையும் கருத்தும் இணைந்தும் இழைந்தும் இருக்கும்போதுதான் கலைப் படைப்பு சமூகத்தின் வரவேற்பிற்கும் பயன்பாட்டிற்கும் உரியதாகிறது. அவ்வகையில் தமிழர்களின் செவ்விலக்கியங்களில் குறிக்கப்பெறும் பல்வேறு செய்திகளும் உள்ளடக்கங்களும் காட்சிப் படைப்புகளாகக் கண்கவரும் வண்ணம் ஓவியங்களில், சிற்பங்களில், காசுகளில், கோயிற் கட்டடங்களில், நுண்ணிய கைவேலைப்பாடுகளில் இன்றைக்கும் நமக்குக் கிடைக்கின்றன. அத்தகைய கலைப்படைப்புகளின் மூலச் சான்றுகளைச் சில செவ்வியல் இலக்கியங்களின் துணைகொண்டும் கள ஆய்வுகளின் சான்றுகளைக் கொண்டும் நமக்கு அரியதொரு கலை-இலக்கிய ஒப்பீட்டு ஆய்வு நூலாக இது மலர்ந்துள்ளது.
| Weight | 1 kg |
|---|