சங்கக்கால கோட்டைகள் முதலாக 228 வட இந்திய, தென்னிந்திய கோட்டைகள் பற்றிய நூல்.
கோட்டை வாயில்கள்
கோட்டை வாயில் அகன்றதாகவும்,உயரமானதாகவும் இருந்தது.
இரண்டு யானைகளின் மேலே குடையை உயர்த்தியபடியும் அவற்றின் முதுகில் மேல் அம்பாரியோடு அந்த யானைகள் இரண்டும் ஒரே சமயத்தில் உள்ளே புகுவதற்கேற்ற உயரமும், அகலமும் கொண்ட பெருவாயில்களாகத் திகழ்ந்தன.
கதவுகளில் பல்வேறு வகை ஓவியங்கள் செதுக்கப்பட்டு, கதவுகளில் அரசனுக்குரிய இலச்சினைகள் இருந்தன. அழகு செய்யப்பட்டிருந்தன. இந்தக் கதவுகளை மூடவும் திறக்கவும் பொறிகள் இருந்தன. கதவுகளின் உள்புறமும், வெளிப்புறமும் குறுக்கே தாழ்ப்பாள் போலத் தடை மரங்கள் பொருத்தப் பட்டிருந்தன. உட்புறமாகத் தாழிடப்பட்ட தடைமரம் ‘சீப்பு’ என்றும் வெளிப்புறமாகத் தாழிடப்பட்ட தடைமரம் ‘ஏழு’. என்றும் பெயர் பெற்றன.
மதிலின் வாயிலில் பிறர் உள்ளே புகாதபடி உருண்டியங்கும் படல்கள் சாத்தப்பட்டு அவற்றின் குறுக்கே எழுமரம் என்பது இடப்பட்டது. இத்தகைய வாயில்களைத் திறமை மிகுந்த யவன வீரர்கள் காவல் செய்தனர்.
திருவிழாக்கள் போன்ற சிறப்பான நாட்களில் மட்டும் செல்லுவதற்குத் தனி வாயில் இருந்தது. அது ‘நாம் பெரு வாயில்’ என்றழைக்கப்பட்டது.