தெய்வச்சிலையார் உரைநெறி / Teyvaccilaiyār uraineṟi

600

தமிழ் மொழியின் தொன்மையினை விளக்கியுரைக்கும் மரபிலக்கண நூல் தொல்காப்பியம். தொல்காப்பியத்தின் பொருளை அதன் நூற்பாக்களைக் கொண்டே உணரலாமெனினும், அதன் செம்மையினை முழுவதும் நன்குணரப் பழந்தமிழ் உரையாசிரியர்களின் உரைவளமே ஒளிவீச்சாய் அமைகின்றது. அவ் உரைகளின் ஊடாகவே தொல்காப்பியத்தை நுட்பமாக உணர இயலும். அந்தவகையில், இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், பேராசிரியர், தெய்வச்சிலையார், கல்லாடர் ஆகிய அறுவரது உரைகள் முதன்மையானதாகக் கருதப்பெறுகின்றன. தொல்காப்பிய எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகிய மூன்றிற்கும் முழுமையாய் இளம்பூரணர் உரை கிடைத்திருக்கின்றது. எழுத்ததிகாரத்திற்கு இளம்பூரணரது உரையுடன் நச்சினார்க்கினியரது உரையும் கிடைத்திருக்கின்றது. சொல்லதிகாரத்திற்குச் சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார், கல்லாடர் ஆகியோரது உரைகள் காணக்கிடக்கின்றன. தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் அகத்திணையியல், களவியல், கற்பியல், புறத்திணையியல், பொருளியல், செய்யுளியல் ஆகியவற்றிற்கு மட்டும் நச்சினார்க்கினியர் உரையும், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் ஆகியவற்றிற்குப் பேராசிரியர் உரையும் கிடைத்துள.

தொல்காப்பிய உரை மரபினை இலக்காகக் கொண்டு, இளைய தலைமுறையினருக்கும், தொல்காப்பிய ஆய்வாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் கொண்டு சேர்க்கும் அரிய முயற்சியாகத் தெய்வச்சிலையார் உரைநெறி என்னும் இந்நூல் அமையப்பெற்றுள்ளது.

Out of stock

Add to Wishlist
Add to Wishlist

Additional information

Weight0.6 kg