நாகப்பட்டினம் முதல் சுவர்ணதீபம் வரை – NAGAPATTINAM TO SUVARNADWIPA: REFLECTIONS ON THE CHOLA NAVAL EXPEDITIONS TO SEA (TAMIL)
இந்திய – தென்கிழக்காசிய தொடர்புகள் பற்றிச் சில நூற்களே உள்ள சூழலில், இந்நூல் மிகவும் வரவேற்கவேண்டியது என மனம் மகிழ்கிறேன். அண்மைய பத்தாண்டுகளில், இந்தியப் பெருங்கடல் பற்றியும் அதன் ‘கடல்வழி பட்டுச் சாலை’ பற்றியும், ஆசிய வரலாறு படிப்போர் உலகளாவிய கவனம் காட்டினாலும், ஆய்வுகள் பின்தங்கியே உள்ளன.
நாகப்பட்டினம் முதல் சுவர்ணபூமி வரை: தென்கிழக்காசியாவில் சோழர்களின் கடற்பயணங்கள் எனும் இந்நூல் பல்வேறு வியக்கத்தக்க ஆராய்ச்சிகளை முன் வைத்துள்ளது. அவற்றில் சில:
ஆசிய வரலாற்றிலும், இந்தியப் பெருங்கடல் வாணிபத்திலும், சோழர்களின் கடற்படைப் பயணங்கள்;
• சோழர்களோடு புகழ் பெற்று விளங்கிய தென்னிந்திய வர்த்தகச் சங்கங்களும், சோழர்களின் கடற்படையெடுப்பில் அவற்றின் தீவிரப் பங்கேற்பும்
சோழர்களின் படையெடுப்பால் இலங்கையிலும் இந்தோனேசியாவிலும் ஏற்பட்ட மாற்றங்கள்;
“கிழக்கு நோக்கும் கொள்கை’ யை, 1990-களிலிருந்து இந்தியா திட்டவட்டமாகப் பின்பற்றி வந்துள்ளது. ஆசியான் எனப்படும் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்புடன் இந்தியா மேற்கொண்டுள்ள நெருக்கமான உறவு அக்கொள்கையின் அடிப்படையாகும். அக்கொள்கையின் அமலாக்கத்தினால் இந்திய-ஆசியான் உறவில் படிப்படியான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்திய- ஆசியான் நடைமுறை ஒருமைப்பாடு பல்வேறு பகுதிகளைக் கொண்டதாகவும் பலவகையானதாகவும் உள்ளது. அரசியல் பாதுகாப்பு அம்சங்களில், பயங்கரவாதம், அனைத்துலகக் குற்றப் பிரச்சினைகள் முதலானவற்றில் ஆசியான் இந்தியாவுடன் ஒத்துழைக்க விருப்பம் காட்டியுள்ளது. பொது வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை இந்தியா ஆசியானுடன் செய்து கொண்டுள்ளது.
இதனால், தீர்வையற்ற பல பொருட்கள் வர்த்தகத்தில் இடம் பெறும். எனவே பொருட்களுக்கான வரிகள் குறையும். பண்பாடு, கல்வி, சமயம் முதலான துறைகளில், இந்தியா இரு தரப்பு மக்களுக்கு இடையில் உறவுகளை வளர்க்க முயன்று வருகிறது. இதனால், சமயம் சார்ந்த சுற்றுப் பயணங்களும், உயர் கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான தொடர்புகளும் அதிகரிக்கும். இந்த நூல், தற்கால நோக்கங்களுக்கு ஏற்புடையதாய் அமைந்துள்ளது.
பதினோறாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவை ஆண்ட சோழப் பேரரசின் கடற்படையெடுப்புப் பற்றிய இந்நூல், இந்தியப் பெருங்கடல் ஆய்வுகளுக்கு ஏற்றதாய் உள்ளது. இந்தியாவின் பரந்த ஈடுபாட்டினைக் காட்டும் இந்நூல், மறக்கப்பட்ட ஒரு வரலாற்றினைப் படிப்போருக்கு உணர்த்தும் என நான் நம்புகிறேன்.
டாக்டர் சஸி தாரூர்,
புத்தக உள்ளடக்கம்
- ஆசிய வரலாற்றில் சோழர்களின் கடல் பயணங்கள் – ஹெர்மன் குல்கே.
- சீனப் பீங்கான் துண்டுகள் மற்றும் தென்னிந்திய, இலங்கை கல்வெட்டுகள் காட்டும் இந்தியப் பெருங்கடல் வாணிபம். – நோபுரு கராஷிமா……..
- சோழ ஸ்ரீ விஜய சீன முக்கோண உறவில் இராஜேந்திர சோழனின் இராணுவ முற்றுகைகள் – டான்சென் சென்.
- முதலாம் இராஜேந்திர சோழனின் தென்கிழக்காசியக் கடற்படையெடுப்பு – விஜய் சக்குஜா, சங்கீதா சக்குஜா.
- சோழ நாட்டின் கடற்படையைப் பற்றிய குறிப்பு Y. சுப்பராயலு
- இராஜேந்திர சோழனின் தலைநகரான கங்கை கொண்ட சோழபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியும் அதன் முக்கியத்துவமும் – எஸ். வசந்தி……..
- நாகப்பட்டினம் பற்றிய புதிய பார்வைகள் : தென்னிந்தியா,உள் உறைவன
- தென்கிழக்காசியா மற்றும் சீனாவுக்கு இடையிலான அரசியல், சமய, வணிகப் பரிமாற்றங்களின் அடிப்படையில் பத்தாம் நூற்றாண்டு காலத்திய துறைமுக நகரம். – கோகுல் சேஷாதிரி
- இந்தியப் பெருங்கடலிலும் தென்கிழக்காசியாவிலும் தென்னிந்திய வணிகச் சங்கங்கள் – நோபுரு கராஷிமா
அஞ்சுவண்ணம் மத்திய காலத்துக் கடல் வாணிகச் சங்கம் – Y. சுப்பராயலு. - இராஜேந்திர சோழனின் கடல் படையெடுப்பும் தென் கிழக்காசியாவுடனான சோழர்களின் வர்த்தகமும் – மீனாட்சிசுந்தரராஜன் .
- சோழர்களின் துணி வர்த்தகமும் தென்கிழக்காசியாவில் அது ஏற்படுத்திய கலாசாரத் தாக்கமும். – ஹேமா தேவரே…..
- பொலனாறு அரசாட்சிக் காலத்தின்போது இலங்கையும் தென்கிழக்காசியாவும்
அனுரா மானதுங்கா.
இந்தோனேசியாவுடனான தென்னிந்தியக் கலாசாரத் தொடர்புகள் – P. சண்முகம். - இராஜேந்திர சோழனின் படையெடுப்பும் அயர்லங்காவின் வளர்ச்சியும் – நீனி சுசாந்தி…..
- சமுதாய உருவாக்கம்: குவாங்சூவில் இந்தியச் சிற்ப வேலைப்பாடுகள் – ரீஷா லீ…..
இணைப்புகள்
தமிழிலும் வடமொழியிலும் எழுதப்பட்ட தென்கிழக்காசியா, சீனா தொடர்பிலான பழங்கால-மத்தியகால கல்வெட்டுகள். – நோபுரு கராஷிமா, Y. சுப்பராயலு…..
சோழப் பேரரசினை ஸுனியன் என்று குறிப்பிடும் சீன வாசகங்கள் நோபுரு கராஷிமா, – டான்சென் சென்…
ஆய்வுச்சொற்கள் அட்டவணை.