நீர் கொத்தி மனிதர்கள் – அபிமானி

220

Add to Wishlist
Add to Wishlist

Description

நீர் கொத்தி மனிதர்கள்
1967-1971 காலவாக்கில் கதை சொல்லப்படுகிறது. இந்தக் காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு எல்லையை ஒட்டிய பல கிராமங்களில் ஒன்றில் நிலவிய கோடைவறட்சி, குடிநீருக்கான பஞ்சம் , இந்தத் தடத்தில் செல்லும் நாவல், சாதி,சாதிதுவேசம் என்று ஒதுக்கபட்ட மக்களிடம் வெளிப்படும் சாதிய முரண்பாட்டின் மீதான விமர்சனத்தை எழுப்பிப் பேசுகிறது.

வர்க்கம் சாதி என்ற பிரிவுகளில் கடைநிலையாய் இருக்கும் மக்கள் மத்தியில் வெளிப்படும் முரண்பாட்டில் அரசு தப்பித்துக் கொண்டு , நம்மை அதிகாரம் செய்யும் ,அதிகாரப்பரப்பு குறித்து கேள்வி எழுப்புகிறது நீர்கொத்தி மனிதர்கள். சாதிப்படிநிலையில் கீழ்நிலையில் அலைவுறும் மக்கள் மத்தியில், தனக்குக் கீழேயும் அதிகாரம் செலுத்த வேண்டிய, மனிதர்கள் இருக்கிறார்கள் என்று கருதும் எளிய மக்கள் குறித்து, நமக்கு பெரும் விசனத்தை அபிமானி உருவாக்குகிறார்.

நாவலின் ஒவ்வொருக் காட்சியும் வலி மிகுந்த துயர் சித்திரமாகப் படிந்து, நம்மை அலைக்கழிக்கிறது.

Additional information

Weight0.25 kg