பெளத்தம் செழிப்புற்றிருந்த காலத்தில் இந்தியாவின் அரசியல், பொருளாதாரம், சமூக வரலாறு ஆகியவை இலக்கியம், நாணயவியல், கல்வெட்டுகளில் பெற்ற சான்றுகளின் அடிப்படையில் ஆராயப்பட்டுள்ளன. அதன்படி, இருண்ட காலமாக அறியப்பட்ட பண்டைய இந்திய வரலாற்றின் மீது புது வெளிச்சம் பாய்ச்சுவதாக இந்நூல் அமைந்துள்ளது.
சந்திரகுப்தர், அசோகர், கனிஷ்கர் ஆகியோர் பெளத்தத்துக்கு செய்த பங்களிப்புகளையும் முறையாக விவரிக்கிறது. குலங்களும் தேசங்களும், கிராமங்கள், நகரங்கள், சமூகத் தரநிலை, பொருளாதார நிலைமை, எழுத்தின் தொடக்க நிலை, வளர்ச்சி நிலை, மொழியும் இலக்கியமும் உள்ளிட்ட தலைப்புகளிலான கட்டுரைகள் விவரிக்கும் கருத்துகள், இந்திய வரலாறு குறித்து இன்னும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை உணர்த்துகின்றன. அப்போது ஜாடிகளில் பணம் நிரப்பப்பட்டு வீட்டுத் தரையில் புதைக்கப்பட்டன அல்லது யாராவது நண்பர்களிடம் கொடுத்துவைத்து அதற்கான எழுத்துபூர்வ ஒப்புகைச்சீட்டு பெறப்படும் வழக்கம் இருந்ததும், வட்டி விகிதம், கடன் பத்திரங்கள் குறித்த தகவல்களும் வியப்பில் ஆழ்த்துகின்றன.
இந்தியாவில் இருந்தபோது அலெக்சாண்டர் தாமிரத்தில் நாணயம் வெளியிட்டார் என்பதும் அந்த நாணயம் கிரேக்கத்தில் இருந்ததைப் போல வட்ட வடிவில் இல்லாமல், இந்தியாவில் உள்ளதுபோல சதுர வடிவில் இருந்தது என்கிற தகவல் ஆச்சரியமூட்டுகிறது.
பெளத்தத்தின் மீது பிடிப்பும் ஆர்வமும் அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்துக்கு தேவையான நூலாக இந்நூல் முக்கியத்துவம் பெறுகிறது.
Book Title பௌத்த இந்தியா (pautha india )
Author T.W.ரீஸ் டேவிள்ஸ்
Translator அக்களூர் இரவி
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 288
Year 2024
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Buddhism | பௌத்தம், Essay | கட்டுரை,