Description
சிறுகதைகள் எப்போதுமே மனதுக்கு நெருக்கமானவை. நம் பால்ய கால நினைவுகளைக் கிளர்த்தும் கதைகள் கூடுதல் நெருக்கமானவை. நம்மைக் கரைய வைப்பவை. மலையன்குளம் என்ற இந்தத் தொகுப்பில் இருக்கும் கதைகள் இந்த வகையைச் சேர்ந்தவை. ஜெயராமன் ரகுநாதனின் பூச்சுகளற்ற நடையில் இந்தக் கதைகளுக்குள் நாம் இயல்பாகவே நுழைந்து விடுகிறோம். இதில் வரும் கதாபாத்திரங்களை தாம் அனைவரும் நம் வாழ்க்கையில் ஒரு தடவையேனும் நிச்சயம் கடந்து வந்திருப்போம். இதில் வரும் நிகழ்வுகள் நம் வாழ்விலும் நடந்திருக்கும். இந்தக் கதைகளில் வரும் ‘இவன்” நாமாகவும் இருக்கலாம்.




