Description
மானுட முடிவுறா வரலாற்றில் தமிழரின் சமகாலம் மிகவும் சவாலானது. இன்றைய நவகாலனியம், காலனியத்தின் நுண் அரசியலாக உலகந் தழுவி விரிந்து நிற்கிறது. புவியியல் காலனியம் போய்க் கலாச்சாரக் காலனியம் உருவாகிவிட்டது. இதன் தொடர் விளைவுகளாக அறிவுக் காலனியம்ஶீ முதலாளித்துவக் காலனியம்ஶீ நுகர்வுக் காலனியம் எனப் பலவும் நம்மைக் கவ்விப் பிடித்துள்ளன. இந்த நூலில் பக்தவத்சல பாரதி உலகளாவிய நிலையில் சிந்திக்கவும் உள்ளூர்த்தனமாகச் செயல்படவும் தீவிரமான விவாதங்களை முன்னெடுக்கிறார். கடந்த காலத்தில் தமிழர் கட்டமைத்த சுதேசியத்தைக் காலனியம் அழித்துவிட்டது; அழித்த இடத்தில் அது ஏற்றி வைத்துள்ள சுமைகள் பாரதூரமானவை. இன்றைய நவகாலனியத்தில் இவற்றை எதிர்கொள்வதற்கு மீள் சுதேசியம் தேவைப்படுகிறது. இந்த மரபின் மீட்பை மண் வாசிப்போடும் மக்கள் வாசிப்போடும் இந்த நூலில்ஶீ ஆறு இயல்களில் தீவிரமாக விசாரணை செய்கிறார் நூலாசிரியர். நாம் இழந்து வருகின்ற தமிழ் அறிவு மரபுஶீ செவ்வியல் வலிமை கொண்டது; அது உருவாக்கியுள்ள இலக்கியமும் பண்பாடும் அதீத பலம் பொருந்தியவை; தமிழிலக்கியம் பயன்பாட்டுத் தத்துவம் நிறைந்தது; தமிழ்ப் பண்பாடோ செயல் தத்துவம் கொண்டது போன்றவற்றை நாம் கண்டுகொள்ள உதவுகிறார். இதன் மூலம் நவகாலனியத்தின் புதிய அறைகூவல்களை எதிர்கொண்டுஶீ நம் மரபை மீட்டெடுக்கும் திசை நோக்கிய அறிவுத் தடத்தில் புதிய ஒளியைப் பாய்ச்சுகிறது இந்த நூல்.

















