Description
“தமிழகத்தில் சாதிகள்” என்ற இந்நூல், முற்றிலும் புதிய கோணத்தில், ‘சாதியம்’ பற்றிய ஆய்வினை மேற்கொண்டுள்ளது. இனக்குழுக்களிலிருந்து படிநிலைகளைக் கடந்து, சாதிகளின் இன்றைய வடிவம் பரிணமித்துள்ளது என்கிற இந்த ஆய்வின் மூலம், சங்க காலத்திற்குப் பிந்தைய சாதியத்தின் இயங்கியலுக்கான முதல் அடியைச் சரியான திசைவழியில் எடுத்துவைத்து, இனக்குழு – சாதியச்சமூகம் தேசியஇனம் ஆகிய மூன்று வகைச் – சமூகங்களுக்கிடையிலான ஒப்புமைகளையும் வேற்றுமைகளையும் ஆராய்கிறது. தமிழகத்தில் சுமார் 450 சாதிகள் உள்ளன. இதில் 260க்கும் மேற்பட்ட சாதிகளின் உள்கட்டமைப்பை இந்நூலில் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளார். மக்கள்தொகை அடிப்படையில் பார்த்தால் இந்தச் சாதிகள் மட்டும் தமிழகத்தில் 80% பேர்கள் உள்ளனர். இதனை ஒரு மிக ஆழமான ஆய்வு என்றே கூற வேண்டும்.