Additional information
| Weight | 0.4 kg |
|---|
Explore Heritage Books and Products
For Book Oders
+91 97860 68908

₹300
மிழ் இலக்கிய நெடும்பரப்பில் கொடுமுடியாய் மிளிர்வன சான்றோர் செய்யுள்கள் என்னும் சங்க இலக்கியங்கள் ஆகும். இச் சங்க இலக்கியங்கள் குறித்துப் பல்வேறு ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அவற்றுள் கோட்பாட்டு ஆய்வுகள் மிகக் குறைவே. சங்க இலக்கியங்களை முழுமையான அளவில் புரிந்துகொள்வதற்குக் கோட்பாட்டு முறையிலான அணுகுமுறைகள் மிக இன்றியமையாதவை ஆகும். அவ்வகையில் இந்நூல் வாய்மொழி வாய்பாட்டுக் கோட்பாடு என்னும் மேற்கத்தியச் சிந்தனை முறையில் தோன்றிய கோட்பாட்டை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டுள்ளது. வாய்மொழி வாய்பாட்டுக் கோட்பாட்டை ஐரோப்பியச் செவ்வியல் இலக்கியவாதிகளான மில்மன் பரியும் ஏ.பி. லார்டும் உருவாக்கினர். இக்கோட்பாடு நாட்டுப்புறவியல் ஆய்வுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். வாய்மொழி வாய்பாட்டுக் கோட்பாட்டினைப் பற்றிய அறிமுகத்தினையும் அக்கோட்பாட்டின் முக்கியக் கூறான பெயர்முன் அடை (Epithet) பற்றியும் அப் பெயர்முன் அடை ஆராய்ச்சி தமிழில் சங்ககால மொழிநடை ஆராய்ச்சியில் பெறும் முக்கியத்துவத்தைப் பற்றியும் சங்கப் பாடல்களின் விரிவான சான்றுகள் வழியே பெயர்முன் அடைகளில் பெயர் வலதுபுறமாகவும் அடைகள் இடது புறமாகவும் அமைந்துள்ள விதம் பற்றியும் செயல்முறையில் இந்நூல் விளக்குகிறது. மேலை அறிஞர்கள் கூறிய வாய்பாட்டுத் தன்மையின் தடயங்கள் சங்கப் பாடல்களில் இருப்பதையும் சங்க இலக்கிய மொழிநடை பல காலங்களின் மொழியமைப்பு என்றும் அது பல இலக்கிய அமைப்புக் கூறுகளைக் கொண்டது என்பதையும் இந்நூல் நிறுவுகிறது.
Out of stock
| Weight | 0.4 kg |
|---|